search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadipura festival"

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அருகே உள்ள சித்தஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள சித்தஞ்சி சிவகாளிசித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் உற்சவத் திருவிழா ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது.

    இதனை யொட்டி நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தியும், 501 பேர் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவில் அருகே உள்ள பம்பை நதியில் இருந்து சிவகாளி சக்தி கரக ஊர்வலம் நடந்து.

    இதில் 1500 பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சொர்ண காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

    இந்த விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், மனோகர், காவேரிப்பாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி், தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ் (எ) நரசிம்மன், தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழாவில் 5 கருட சேவையை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
    • வருகிற 22-ந்தேதி பெரிய தேரோட்டம் நடக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்றும் போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கம் ெரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண் டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது.

    பூமாதேவியின் அம்ச–மான துளசி செடியில் அவ–தரித்த ஆண்டாள் இறைவ–னுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து, பின்னர் இறைவ–னுக்கு கொடுத்த ஆண் டாளை சூடிக்கொடுத்த சுடர்கொடியாளாக பக்தர் கள் போற்றுகின்றனர். ஆண்டு–தோறும் ஆடி மாதத் தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் அவ–தார தின–மாக கொண்டா–டப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்றைய தினம் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் 16 சக்கர சப்பரத்திலும், 4-ம் நாளான நேற்று முன்தினம் இரவு ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி மலையை தூக்கிய ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண் டாள் சேஷ வாகனத்தி–லும் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து விழா நாட்களில் இரவு சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

    விழாவையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பெரியாழ் வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேற்று காலை 10 மணிக்கு பெரிய பெருமாள், ரெங்கமன்னார், செண்பகத் தோப்பு கள்ளழகர் கோவில் சுந்தர்ராஜபெருமாள், திரு–வண்ணாமலை சீனிவாச பெருமாள், திருத்தங்கல் திருநின்ற நாராயண பெரு–மாள் ஆகியோருக்கு பெரி–யாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.

    இதையடுத்து இரவு 10 மணிக்கு ஆண்டாள் கோவில் திருக்கொட்டகை–யில் பெருமாள்கள் எழுந்த–ருளிய 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி–மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். அதன்பின் நான்குரத வீதிகளிலும் பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடிய–படி முன் செல்ல பெரிய பெருமாள், ரெங்க–மன்னார், திருத்தங்கல் அப்பன், சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனி–வாச பெருமாள், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நாளை சயன சேவை

    10 நாட்கள் நடைபெறும் விழாவின் 7-ம் நாளான நாளை (20-ந்தேதி, வியாழக் கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நிகழ்ச்சி மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது.

    ஆண்டாள் மடியில் ரெங்க–மன்னார் தலை–வைத்து இருக்கும் இந்த சேவை நாட்டிலேயே ஸ்ரீவில்லி–புத்தூரில் மட்டுமே நடைபெ–றும் என்பதால் பல்லாயி–ரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து–கொள்வார்கள்.

    22-ந்தேதி தேரோட்டம்

    ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப் பூர தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு திரு–மஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆண்டாள், ெரங்கமன்னர் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளு–கின்றனர். பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நடைபெறுகிறது.

    இதில் மாவட்டத்தின் அனைத்து ஊர்கள், பட்டி–தொட்டிகளில் இருந்து பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கி–றார்கள். 4 ரதவீதி–களிலும் வலம் வரும் தேர் பிற்பகலுக்குள் மீண்டும் நிலையை வந்தடையும். தேரோட்ட விழா தொடங் கிய நாள் முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்க–ளால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் விழாக்கோலம் பூண் டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலு–வலர் முத்துராஜா மற்றும் பட்டர்கள், பணியா–ளர்கள், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது.
    • மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொடர்ந்து வருடந்தோறும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் இன்று 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது .இதனை முன்னிட்டு காலையில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. முக்கிய விழாவான ஆடிப்பூரத் திருவிழா வருகிற ஜூலை 22-ந்தேதி பெரிய நாயகி அம்மன் சன்னதியில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்று வளையலணி திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் அம்மனுக்கு மாங்கல்ய பொருள்களான மஞ்சள், மஞ்சள் கயிறு, வளையல் குங்குமம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் தலைமையில் ராகேஷ் குருக்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர். 

    • வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 1-ந் தேதி வளைகாப்பு உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் உற்சவங்கள் நடைபெறும்.

    அருணாசலேஸ்வரர் ்கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் சிவாசாரியர் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா நடைபெற உள்ளன. அன்று விநாயகர் மற்றும் உற்சவர் பராசக்தி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    தொடர்ந்து தினமும் காலை மாலை அம்பாள் மாடவீதி உலா நடைபெறும். நிறைவு நாளான ஆடிப்பூரம் 10 நாள் ஆகஸ்ட் 1-ந் தேதி திங்கட்கிழமை மாலை கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்க தீர்த்தக் கரையில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மாள் எழுந்தருல்வார். வளைகாப்பு உற்சவம் நடைபெறும். தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறுகிறது.

    ×