என் மலர்
கடலூர்
- மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கடலூர்:
பண்ருட்டி மின்சார வாரிய செயற் பொறியாளர் டி.வி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்பதாவது:
பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (15-ந் தேதி) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். ஆதலால், மேற்கண்ட நேரங்களில் பண்ருட்டி நகரம் முழவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருள ங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் சிறுவத்தூர், அங்குசெட்டிப்பாளையம் மற்றும் கொக்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஊர்களுக்கு மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது.
- சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
கடலூர்:
சிதம்பரம் 110/33 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை, சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர். கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்ல ம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி மாரியப்பாநகர், அண்ணாமலை நகர்,பெராம்பட்டு, கீரப்பாளையம்,எண்ணாநகரம்,கன்னங்குடி,வயலூர், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும். இத்தகவலை சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.
- கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார்.
- சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே காமராஜரின் முழு உருவச் சிலை உள்ளது. அதன் அருகே சமீபத்தில் பாரத் ஜோரா யாத்திரையின் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார். அதன் அருகே வேறு சில கட்சிகளின் கொடிக்கம்பங்களும் உள்ளன.இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் காங்கிரஸ் கொடியை கம்பத்திலிருந்து அகற்றி கிழித்து தீ வைத்து எரித்துள்ளனர். இன்று காலை இதனைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர் .
இது குறித்து நகர காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் சிவராஜ் சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்ன குமார் விசாரணை நடத்தி வருகிறார். நாளை காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கொடி அறுக்கப்பட்டு எரிக்கப்பட்டது பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
- ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாடு 99 சதவீதம் தன்னார்வமுடன் ரத்த தானம் செய்பவர்களில் முதலிடம் வகிக்கின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு தன்னார்வ இரத்தக் கொடையாளர்களை பாராட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உலக ரத்த கொடையா ளர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி முதல் 2022 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு ரத்த வங்கிகளில் 3 முறை அல்லது அதற்கு மேலும் தன்னார்வமாக ரத்த தானம் வழங்கிய ஆண் கொடையாளர்கள் மற்றும் 2 முறை அல்லது அதற்கு மேலும் தன்னார்வமாக இரத்த தானம் வழங்கிய பெண் கொடையாளர்கள் என மொத்தம் 68 தன்னார்வ ரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 14 உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மையக்கருத்தினை வெளியிட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டின் மையக்க ருத்தாக "தொடர்ந்து குருதி, பிளாஸ்மா கொடுப்போம் வாழ்வை பகிர்ந்து கொள்வோம்;" என்ற கருத்தினை வெளியிட்டு ள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்திய அளவில் தமிழ்நாடு 99 சதவீதம் தன்னார்வமுடன் ரத்த தானம் செய்பவர்களில் முதலிடம் வகிக்கின்றது. கடலூர் மாவட்டத்தில் ஜனவரி-2022 முதல் டிசம்பர்-2022 வரை ரத்த வங்கிகள் மூலம் மொத்தம் 19,155 யூனிட் ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாரா செலின் பால் , சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். மீரா , மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் , மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் டாக்டர். குமார் , இரத்த மைய மருத்துவ அலுவலர்கள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
- ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் கடலூர் துறைமுகம், சீர்காழியில் நின்று செல்லும்.
- கன்னியாகுமரி- புதுச்சேரி விரைவு ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 24-ந் தேதி முதல் நின்று செல்லும்.
கடலூர்:
தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் கடலூர் துறைமுகம், சீர்காழியில் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- காரைக்கால் விரைவு ரெயில் கடலூர் துறைமுகம், சீர்காழியில் 18-ந் தேதி முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 18-ந் தேதி முதல் சீர்காழியில் நின்று செல்லும். ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரெயில் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 20-ந் தேதி முதல் நின்று செல்லும். கன்னியாகுமரி- புதுச்சேரி விரைவு ரெயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சீர்காழியில் 24-ந் தேதி முதல் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார்
- கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .
கடலூர்:
கடலூரில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் சேலத்தில் இருந்து புதுவைக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கடலூர் செம்மண்டலத்துக்கு வந்த போது 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவருக்கு கண்டக்டர் சீட்டு கொடுத்தார். ஆனால் அந்த பஸ் கடலூர் கலெக்டர் அலுவ லகத்தை தாண்டியதும் அந்த பெண் எதிர் சீட்டில் வாலிபருடன் உட்கார்ந்து இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை வாங்கி பேசினார். போன் பேசி முடித்து அந்த பெண்ணி டம் செல்போனை கொடுத்து விட்டார் .அதற்கு பிறகு அவர் நீங்கள் என்ன காதல் ஜோடிகளா என்று கேட்டார் .நீங்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் உருப்பட மாட்டீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் இதற்கு பதிலாக இளம் பெண் எந்த வார்த்தையும் சொல்லவில்லை. குழந்தை உடன் வந்த இளம் பெண் அவர்கள் இருவரையும் பார்த்து நாகரிகம் அற்ற முறையில் ஆபாசமாக திட்ட தொடங்கி விட்டார்.
இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பஸ் கண்டக்டரிடம் தெரிவித்தனர். அவரும் பஸ் டிக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு இறங்கி விடுங்கள் என்றார். ஆனால் அந்த பெண் டிக்கெட் டை கண்டக்டரிடம் கொடு க்காமல் வாக்குவாதம் செய்தார். எனக்கு ரூ. 20 செலவானாலும் பரவாயில்லை. நீங்கள் இந்த இடத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கண்டக்டர் கூறினார் ஆனாலும் அந்த பெண் கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .
இந்த பஸ் கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடி அருகே வந்தது. அப் போது அந்த பெண்ணிடம் மீண்டும் கண்டக்டர் இந்த இடத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்றார். ஆனாலும் அந்தப் பெண் மீண்டும் எதிர் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளம் பெண்ணை பார்த்து கடுமையாகஆபாச வார்த்தைகளால் பேசினார். இதனால் பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆல்பேட்டை சோதனை சாவடி வந்ததும் ரகளை செய்த பெண்ணை கீழே இறங்குமாறு கூறினார். ஆனாலும் அவர் இறங்க மறுத்தார். அப் பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கண்டக்டர் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பெண் இறங்கவில்லை. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பணியிடம் நீங்களும் போலீஸ் தானே என்னை காப்பாற்றுங்கள் என்றார். அவர் எதுவும் ெசால்ல வில்லை. உடனடியாக ஒரு பயணி சோதனை சாவடியில் இருந்த ஒரு போலீசாரை அழைத்தார். அவரும் வந்தார் .அவரிடமும் அந்தப் பெண் தகராறு செய்தார். இந்த நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டு செல்லுங்கள் என்று கண்டக்டரிடம் கூறினர்.
இந்த நிலையில் பெண் போலீஸ் ஒருவர் வந்தார் அவரிடமும் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரகளையில் ஈடுபட்ட பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண், பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார். அப்போது எல்லா பயணிகளும் அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் கூறினா ர்கள். ஆனாலும் அந்த பெண் எதுவும் ஏற்றுக் கொ ள்ளா மல் ஏற்றுக்கொ ள்ளாமல் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். திடீரென பெண் போலீஸ் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அழகாக தூக்கி கீழே இறக்கி விட்டார். மேலும் அந்தப் பெண்ணிடம் வந்த குழந்தையும் இறக்கி விட்டார். அந்த பெண் போதையில் வந்தாரா இல்லை கஞ்சா அடித்து விட்டு வந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 10 நிமிடம் தாமதமாக அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
- பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது.
- வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, குழந்தைகளை அடுப்பின் அருகில் தீப்பெட்டியுடன் விளையாட அனுமதிக்காதீர்கள், வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் எங்கேயும் போகாமல் கீழே படுத்து உருளுங்கள். பின் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒத்திகை யில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்..
- அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
- ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் வாயி லாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ், ஆய்வு செய்தார். நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேவூர்- அகரம் சாலை ரூ.93.75 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கி.மீ. சாலை பணிகள் நடைபெறுவதையும், பூலாம்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.21 லட்சம் மதிப்பீட்டில் ஊர்குளம் புனரமைப்பு பணிகள் நடைபெறு வதையும், பூலாம்பாடி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.151.93 லட்சம் மதிப்பீட்டில் 3.17 கி.மீ. நீளத்திற்கு கலியமேடு - வரம்பனூர் சாலை பணிகள் நடை பெறுவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
மேலும் அவ்ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.35 லட்சம் மதிப்பீட்டில் காளிமாமேடு நடுஏரி ஒடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வேப்பூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பழைய காலணி - ஒட்டஞ்சாலை வாய்க்காலில் நீர்உறிஞ்சி குழி வெட்டும் பணிகள் நடை பெறுவதை யும், சிறுநெசலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.84 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கப்பட்டு ள்ளதையும் பார்வையி ட்டார்.
அவ்ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.48 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.5 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.98 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கிலோ மீட்டர் நீளத்திற்கு கீழக்குறிச்சி - ஜாயேந்தல் சாலை பணிகள் நடை பெறுவதையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
ஐவதுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தையே பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், நகர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிகாமணி, ஜெயகுமாரி , உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
- பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது.
- மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொடர்ந்து வருடந்தோறும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் இன்று 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது .இதனை முன்னிட்டு காலையில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. முக்கிய விழாவான ஆடிப்பூரத் திருவிழா வருகிற ஜூலை 22-ந்தேதி பெரிய நாயகி அம்மன் சன்னதியில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்று வளையலணி திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் அம்மனுக்கு மாங்கல்ய பொருள்களான மஞ்சள், மஞ்சள் கயிறு, வளையல் குங்குமம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் தலைமையில் ராகேஷ் குருக்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
- மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன்.
- பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள டி.வி. பத்தூதர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அமுதா (40). இவர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- நாங்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தி அசல் வட்டியுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். அந்த நபர் பாண்டு பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று கூலி வேலை செய்து வந்தேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார். அமுதா வெளியூர் சென்ற நேரத்தில் அந்த நபர் வீட்டின் பூட்டை உடைத்து அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொட ர்பாக கடந்த மாதம் 22-ந் தேதி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் அமுதா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அந்த நபர் ஊரில் பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா மற்றும் அவரது உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் முன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அங்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
- நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.
கடலூர்:
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டலம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மண்டலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க பள்ளி, கல்லூரிகளிலிருந்து உரிய படிவங்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறதாததால், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவிப் பொறியாளர் (இயக்கம்) பரிமளம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் போட்டோ ஓட்டி விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெற்று அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.
- ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
- 3பேரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமம் கொய்யாதோப்பு பகுதியில் விற்பனைக்காக வீட்டில் 35 மூட்டைகள் அடங்கிய ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரகசிய தகவல் புதுப்பேட்டை போலீசாருக்கு தெரியவந்தது.
தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து போதை பொருட்களை கடத்தி வந்த கார், மினி லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 35 மூட்டை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போதை பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 35), முகமது அன்சாரி (50) ஆகியோரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் முக்கிய பிரமுகர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






