அங்கன்வாடி மையத்தை துணை மேயர் ஆய்வு

குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
அங்கன்வாடி மையத்தை துணை மேயர் தாமரைச் செல்வன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
அங்கன்வாடி மையத்தை துணை மேயர் தாமரைச் செல்வன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Published on

கடலூர்:

கடலூர் மாநகராட்சி 34 -வது வார்டு பாலன் காலனியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் தற்போது குடிநீர் போர் போடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் பைப்பை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக இந்த குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் நிர்வாகிகள் சொக்கு, சரண், கருணையாளன், ராம்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com