என் மலர்
சென்னை
- மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
- தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
- தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
- வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
பொது பட்ஜெட்டை தொடர்ந்து இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
- போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.
- மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார்.
சென்னை:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முககவசம், கையுறை போன்ற மருத்துவப் பொருட்கள், அலுவலக கவர்கள், எழுதுபொருட்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், நீதின்றங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார். தற்போது அவர், புதுக்கோட்டை மத்திய சிறையில் சூப்பிரண்டாக உள்ளார். அதேபோல், மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றிய வசந்த கண்ணன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் கூடுதல் சூப்பிரண்டாகவும், மதுரை மத்திய சிறையில் நிர்வாக அதிகாரியாக இருந்த தியாகராஜன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாகவும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
- அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்துசெய்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதேபோல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.
- 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
- 22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது பட்ஜெட்டை தொடர்ந்து 15-ந்தேதி (இன்று) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
தொடர்ந்து பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் கருத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்கள்.
22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை. 24-ந்தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கிறது. அதன்படி 24-ந்தேதி நீர்வளத்துறை, இயற்கை, வளங்கள், 25-ந்தேதி நகராட்சி நிர்வாகம், 26-ந்தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
27-ந்தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை. 28-ந்தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள். வனம், கைத்தறி மற்றும் துணி நூல்.
ஏப்ரல் 1-ந்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), 2-ந்தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 3-ந்தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 4-ந்தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை.
7-ந்தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 8-ந்தேதி கூட்டுறவு, உணவு, 9-ந்தேதி குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, 15-ந்தேதி செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத்துறை.
16-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 17-ந்தேதி சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை. 21-ந்தேதி எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, 22-ந்தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, 23-ந்தேதி வணிக வரிகள், பத்திரப்பதிவு, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், போக்குவரத்து.
24-ந்தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, 25-ந்தேதி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, 26-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
28-ந்தேதி பொதுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், 29-ந்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 30-ந்தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சி, முதல்-அமைச்சரின் பதிலுரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை கூட்டம் 30 நாட்கள் நடக்க உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களாகும். 31-ந்தேதி (ரம்ஜான்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டு, சட்டசபைக்கு விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது.
- ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
- சிஎஸ்கே முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
மேலும், மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ், மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு, ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி, ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா, ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத், ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப், மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான் என 7 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த இலவச பயணம் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்க்குள் மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
- 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி, சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்தது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
- இதனால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு.
வருகிற 17ஆம் தேதி சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
- கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன.
- செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையானது வெற்றுக் காகிதம் போல் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்திற்கு பட்ஜெட்டுக்கு பதிலாக வெற்றுக் காகிதத்தை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கலாம். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது.
தமிழ்நாட்டை விட குஜராத் உள் கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் கொடுக்க கூடி தமிழக அரசிடம் நிதி இல்லை.
1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா ? மதுபான போக்குவரத்து தொடர்பாக ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் நடைபெற்றது போல தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாடலில் முறைகேடு நடந்திருந்தாலும் அங்கு நடைபெற்றதைவிட முறைகேடு அதிகம்.
டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன. செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு பதில் சொல்லும் வரை பாஜக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கும் வரை பாஜக போராட்டத்தை தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 2152 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை.
- இந்த நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாயை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது என பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ப.சிதம்பரம் "மத்திய அரசுக்கு இப்பொழுதாவது வெட்கம் வந்து, அவர்கள் நிதியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக,
2025-2026ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது" எனக் கூறினார்.






