வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
Published on

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்தவாறு வேளாண் பட்ஜெட் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com