என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்ஜெட் தாக்கல்: உறுதுணையாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி- அமைச்சர் தங்கம் தென்னரசு
    X

    பட்ஜெட் தாக்கல்: உறுதுணையாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
    • 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    அதன்படி, சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்தது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×