என் மலர்
சென்னை
- பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
- ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- பிரேமலதா விஜயகாந்த், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 10 மணி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல அமித்ஷா, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வந்துள்ள அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
- மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
- முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் ஓட்டுநர், நடத்துநர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.
மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
- அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்அமித்ஷா தங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
அதனை தொடர்ந்து, இன்று நண்பகல் 12 மணிக்கு அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து முக்கிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன.
- எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது
சென்னை:
நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி டாக்டர்கள் மற்றும் ஆயுஷ் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுஷ் டாக்டர்கள் அதாவது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவ டாக்டர்கள் உள்ளனர். மேலும் நாட்டின் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு டாக்டர்கள் இருக்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 536 கல்லூரிகளும், 80 ஆயிரத்து 312 இடங்களும் என உயர்ந்தது. தற்போது 2023-24-ம் ஆண்டில் மிக அதிகளவாக 722 மருத்துவ கல்லூரிகளும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 297 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கின்றன.
மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 70, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 என்ற எண்ணிக்கையிலும் உள்ளன.
அதேநேரத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 11 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. வெறும் 95 இடங்கள் வித்தியாசத்தில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 10 ஆயிரத்து 845 இடங்களுடன் மகாராஷ்டிரா 3-வது இடத்திலும், 9 ஆயிரத்து 903 எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 4-வது இடத்திலும் உள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தடைந்தார்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
சென்னை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்
நாளை தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
- பாமக தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாக தெரிவித்தார்.
- அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.
இதற்கிடையே, அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக தலைவர் மற்றும் நிறுவனர் ராமதாஸ் உடன் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்டோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நீண்ட நேரமாக காத்திருந்த பொருளாளர் திலகபாமாவை சந்திக்க மறுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
- சஞ்சாரம் நாவலுக்காக 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.
தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.
விருது வழங்கும் விழா 01.05.2025 அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாரதிய பாஷா விருது பெறும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய அளவில் புகழ்மிக்க #BharatiyaBhashaParishad அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் பாராட்டுகள்!
சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, #SahityaAkademi, #இயல், #கலைஞர்_பொற்கிழி உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன்.
தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில் மழை.
- வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
வேலூரில் 105.1 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, திருத்தணியில் 102 டிகிரி, சென்னையில் 101 டிகிரி, கரூர், மதுரை, தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்துள்ளது.
வேலூர் நகரில் இன்று பகலில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
வேலூர் மாநகரில் சத்துவாச்சாரி, வள்ளலார், காட்பாடி, திருவலம், கொணவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், மாநகரில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
- திமுகவின் காங்கிரஸ் எஜமான விசுவாசத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- எத்தனை நாடகங்களை பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் அரங்கேற்றப் போகிறார்களோ?
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் 19ம் தேதி முதல் அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, குலாம்நபி ஆசாத் அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் காந்திசெல்வன் அவர்கள் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தபோது, 21.12.2010-ல் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது.
2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு
தற்காலிகமாக விலக்கு பெற்றார்கள்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அவர்களின் மனைவி, மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்கள் நீட் தேர்வு
தொடர வேண்டும் என்று வாதாடியதுடன், 'எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும் 'எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும்
இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது', 'இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது' என்று பேட்டி அளித்தார்.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு நீட் நுழைவுத் தேர்வு விலக்கு பற்றி அனைத்து சட்ட அம்சங்களையும் ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம்.
உண்மை இவ்வாறிருக்க, 2021-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப்
பொதுத் தேர்தலின்போது மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தமிழக மக்களுக்கு நீட் நுழைவு தேர்வு குறித்து பொய் வாக்குறுதி அளித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றும், அதை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும் மேடைதோறும் பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள், பெற்றோர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.
'நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் இரத்து செய்ய முடியும், மாநில அரசு அல்ல, அந்த உரிமை மாநில அரசிற்கு இல்லை என்பதை 2021-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பே தெரியும் என்று மு.க. ஸ்டாலின் 10.1.2025 அன்று தமிழ்நாடு
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்விற்கு விலக்கு அளிக்க நடத்தப்பட்ட நாடகத்தின் முதற்கட்டமாக சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாம் கட்டமாக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சித்
தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி பேரிடம் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம் என்று வெற்று விளம்பரம் செய்து, சுமார் 50 லட்சம் பேர்களிடம் கையெழுத்துகள் பெற்றதாகக் கூறி அவற்றை சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் காட்சிக்கு வைத்தனர்.
பின் அவை அம்மாநாட்டிற்கு வந்த அனைவரின் காலில் மிதிபட்டதை அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளாக வெளியிட்டு,
விடியா திமுக-வின் பித்தலாட்டத்தை மக்களிடம் வெளிப்படுத்தினர்.
கச்சத் தீவை தாரை வார்த்தது; 50 ஆண்டுகள் முடிந்த பின்னர் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தாமதம் செய்தது, அதன் காரணமாக கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டியது; ஹைட்ரோ கார்பன் - மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி அளித்தது.
2009-ல் இலங்கை தமிழர்களைக் காப்பாற்றுவது போல் 4 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியது; அறிவாலயத்தின் மாடியில் அமலாக்கத் துறை சோதனை, தரைத் தளத்தில்
தொகுதிப் பங்கீடு என்று திமுகவின் காங்கிரஸ் எஜமான விசுவாசத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நீட் நுழைவுத் தேர்வு ரத்து நாடகத்தின் மூன்றாம் கட்டமாக, நீட் நுழைவுத் தேர்விற்கு தீர்வு காண, சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் 9.4.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடத்தப்படும் என்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினாலும், அவரது இளவல் உதயநிதியாலும்
நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்க முடியாது என்பதை பல காரணிகளுடன் தெரிவித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம்.
உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஏற்கெனவே அம்மாவின் அரசு தொடர்ந்த வழக்கை விடியா திமுக அரசு வாபஸ் பெற்றபின், புதிய வழக்கை தாக்கல் செய்து, இன்றுவரை அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 9.4.2025 அன்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
வேடிக்கையாக உள்ளது. தமிழக மாணவ, மாணவியரை, பெற்றோர்களை நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் ஏமாற்ற இன்னும் எத்தனை நாடகங்களை பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் அரங்கேற்றப் போகிறார்களோ?
மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும், நீட் நுழைவுத் தேர்வை
ஒரே கையெழுத்தில் தமிழ் நாட்டில் இருந்து ஒழித்துவிடுவோம் என்று கூறியதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ் நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் 19.4.2025 - சனிக் கிழமை மாலை 6 மணி அளவில், சனிக் கிழமை மாலை 6 மணி அளவில்,
தலைநகரங்களிலும் சனிக் கிழமை மாலை 6 மணி அளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும். மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்.
கழக மாணவர் அணியின் சார்பில் நடைபெற உள்ள இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்டு கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்களும் இணைந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீட் தேர்வு அச்சத்தால் தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக மாணவர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
- நாளை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்பமனுவை சமர்ப்பிக்கலாம்.
தமிழக பாஜக துணைத் தலைவரும், மாநில அதிகாரியுமான சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது கட்சியின் அமைப்பு தேர்தலின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாளை 11.04.2025, வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாநில தலைவருக்கான தேர்தல்
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்.
இவ்வாறு சக்ரவர்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
12ஆம் தேதி மாலை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழுஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






