என் மலர்tooltip icon

    சென்னை

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மயிலை பாலாஜி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    முடிச்சூர்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், PTC அடுக்குமாடி குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்கா ரோடு, நடுவீரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    செம்பியம்: கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கேகேஆர் எஸ்டேட், மிக்டிக் காலனி, கேகேஆர் நகர், கல்கத்தா கடை, விஓசி தெரு, நவின் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் தெரு, உடையார் தோட்டம், டி.வி.கே. தெரு.

    முகப்பேர்: முகப்பேர் கிழக்கு, பன்னீர் நகர், திருவள்ளுவர் நகர், ஸ்பார்டன் நகர் மற்றும் அவென்யூ, கார்டன் அவென்யூ, மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட் மற்றும் காலனி, மேற்கு முனை காலனி, சீனிவாசா நகர், சத்யா நகர், ஆபிசர் காலனி, இளங்கோ நகர், மூர்த்தி நகர், குமரன் நகர், டிவிஎஸ் காலனி மற்றும் அவென்யூ, கலெக்டர் நகர், ரெடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், கிருஷ்ணா நகர்.

    மாத்தூர்: சின்னசாமி நகர், எம்எம்டிஏ மெயின் ரோடு, ஓமக்குளம் தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள் கோவில் தெரு, டெலிகாம் நகர், பெரிய மாத்தூர், புதுநகர், மஞ்சம்பாக்கம் அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை.

    பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மயிலை பாலாஜி நகர், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, ஆதிபுரீவரர், NIOT, பவானியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், மணிமேகலை நகர், குபேரன் நகர், ராம் நகர்.

    பல்லாவரம்: பாலமுருகன் நகர், ரோஸ் நகர், அம்பாள் நகர், சுபம் நகர், பெருமாள் நகர், பல்லவ கார்டன், தேன்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்க்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலீஷ் எலெக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் சாலை, ரோஸ் நகர், எம்.கே.நகர், கணபதி நகர், ஈச்சங்காடு சிக்னல், இன்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், S. கொளத்தூர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், அன்பு நகர், Self Help இண்டஸ்ட்ரீஸ்.

    புழல்: சேந்திரம்பாக்கம், தீயபாக்கம், கொசப்பூர், தியாக விவதாசி நகர், கானம் பாளையம், வெங்கடேஸ்வரா நகர், ஏவி டைல்ஸ், பெரியார் நகர், நாகாத்தம்மன் கோவில்.

    • 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    • சென்னை கோயம்பேட்டில் இருந்து தலா 60 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    சென்னை:

    வார இறுதி விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், தைப்பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    சென்னை தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 360 பேருந்துகள், நாளை மறுநாள் 485 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து தலா 60 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

    • தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • ஒரு காலத்திலும் எங்களுக்குள் பிளவு ஏற்படாது.

    தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-

    தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம்.

    தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும் ஃபோகஸ் செய்யுங்கள், அதிமுகவை அட்டாக் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை; அக்கட்சி எந்தக் கூட்டணி உருவாக்கினால் நமக்கென்ன?

    இன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

    வேங்கை வயல், வடகாடு, மதுரையில் கொடிக்கம்பம் ஏற்றும் சர்ச்சை உள்ளிட்டவையில் திருமாவளவனுக்கு இந்த ஆட்சியில் என்ன மரியாதை கொடுக்கப்பட்டது.

    திருமாவின் மனசு எனக்கு தெரியும், என்னுடைய மனசு திருமாவுக்கு தெரியும், ஒரு காலத்திலும் எங்களுக்குள் பிளவு ஏற்படாது .

    பாஜகவின் பி டீம் என்று தவெகவை திமுகவினர் கூறுகின்றனர்; பாஜகவின் பி டீம் திமுகதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.
    • 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்.

    சென்னை தரமணியில் பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி, குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது

    2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்,

    சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

    மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?.

    இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
    • மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

    சென்னை அடையார், இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் கடந்த 26-ந்தேதி காலை ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அடையார் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு பையை பிரித்து பார்த்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனிப்படை போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையை எடுத்து வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் எண் என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் கொலையுண்ட வாலிபர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் இவர் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை.

    தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

    அடையாறு கெனால் ரோடு கூவம் ஆற்று ஓரம் உள்பட கூவம் முகத்துவாரம் பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில், இந்த கொலை விவகாரம் தொடர்பாக பீகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட சிகந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு, பொது நூலகங்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.150 கோடி போதுமானது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெளியிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், 'ஊர்ப்புற நூலகர்களாகக் கிராமங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குக் கால முறையிலான பணி வழங்கப்படும் (வாக்குறுதி எண்-178)' என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

    உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொத்து வரியில் 10 சதவீதம் தொகை நூலக வரியாக வசூலிக்கப்பட்டு நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது.

    இந்த வகையில் மட்டும் நூலகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது. ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு, பொது நூலகங்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.150 கோடி போதுமானது. ஆனால், அதை செய்வதற்குக் கூட தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அனைத்துக் கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தங்கம் இன்று காலை விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலை அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. முதன் முறையாக கடந்த மாதம் 15-ந்தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் தங்கம் விலை கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது. தங்கம் விலை நேற்றுமுன்தினம் கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2,200-ம் அதிகரித்தது. அதன்படி, கிராம் ரூ.15,025-க்கும், சவரன் ரூ.1,20,200-க்கும் விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680-க்கும் விற்பனையானது.

    தங்கம் இன்று காலை விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும் சவரனுக்கு 2,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.15,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    31-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    3-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 30-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • போலீசார் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
    • கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

    சைதாப்பேட்டை:

    சென்னை அடையார், இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் கடந்த 26-ந்தேதி காலை ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அடையார் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு பையை பிரித்து பார்த்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனிப்படை போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையை எடுத்து வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் எண் என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் கொலையுண்ட வாலிபர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் இவர் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை. தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

    அடையாறு கெனால் ரோடு கூவம் ஆற்று ஓரம் உள்பட கூவம் முகத்துவாரம் பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • காய்ச்சல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
    • ஒவ்வொரு வார்டு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. 5 மண்டலங்களாக பிரித்து மக்கள் நலப்பணி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாம்பரம் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பலர் டெங்கு, மலேரியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலையூர் பகுதியில் விடுதியில் தங்கி படித்த கேரளா மாணவி ஒருவர் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். மேலும் உடன் தங்கி இருந்த மேலும் 7 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி விடுதிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாநகராட்சி சார்பில் விடுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 16 வயது ஈசன் என்பவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார். இதனால் 10 நாட்களில் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 உயர்ந்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மாநகராட்சி அதிகாரிகள் சரிவர சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கவில்லை. மற்றும் கொசு அதிகம் பரவாமல் இருக்க காலை மற்றும் மாலைகளில் மருந்து அடிக்க வேண்டிய பணியை சரிவர செய்யவில்லை. ஏதோ பெயருக்காகவே பணிகள் செய்கிறார்கள். இதனாலே காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் கூறும் போது, தாம்பரம் பகுதியில் காய்ச்சல்கள் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. காய்ச்சல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வார்டு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு காலிமனையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், அவற்றில் கொசுக்கள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்.

    • வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது.
    • அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் மல்லிகைபூ விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1500 முதல் ரூ.2ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது. மேலும் நேற்று தைமாத கிருத்திகை, இன்று சுப முகூர்த்த நாள் என அடுத்தடுத்து விஷேச நாள் என்பதால் வழக்கத்தை விட தேவை அதிகரித்து உள்ளதால் மல்லி பூ விலை உச்சம் அடைந்து உள்ளது. மேலும் பிப்ரவரி 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாள் அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு :-

    சாமந்தி-ரூ.80 முதல் ரூ.120வரை,

    முல்லை-ரூ.500,

    கனகாம்பரம்-ரூ.800,

    ஜாதி-ரூ.400,

    பன்னீர் ரோஜா-ரூ.80,

    சாக்லேட் ரோஜா-ரூ.100,

    அரளி-ரூ.150,

    செவ்வரளி-ரூ.200,

    சம்பங்கி-ரூ.40.

    • மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.
    • அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரி அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மகாராஷ்டிராவின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான அஜித் பவார், ஒரு துயரமான விபத்தில் காலமானார். இது மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.

    பரந்த நிர்வாக அனுபவம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவத்திற்கு பெயர் பெற்ற அஜித் பவாரின் அகால மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது.

    அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார். 

    ×