என் மலர்
நீங்கள் தேடியது "மல்லிகைப் பூ"
- வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது.
- அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மல்லிகைபூ விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லி ரூ.1500 முதல் ரூ.2ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் அதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்படுகிறது. மேலும் நேற்று தைமாத கிருத்திகை, இன்று சுப முகூர்த்த நாள் என அடுத்தடுத்து விஷேச நாள் என்பதால் வழக்கத்தை விட தேவை அதிகரித்து உள்ளதால் மல்லி பூ விலை உச்சம் அடைந்து உள்ளது. மேலும் பிப்ரவரி 1-ந்தேதி மற்றும் 2-ந்தேதி தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாள் அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு :-
சாமந்தி-ரூ.80 முதல் ரூ.120வரை,
முல்லை-ரூ.500,
கனகாம்பரம்-ரூ.800,
ஜாதி-ரூ.400,
பன்னீர் ரோஜா-ரூ.80,
சாக்லேட் ரோஜா-ரூ.100,
அரளி-ரூ.150,
செவ்வரளி-ரூ.200,
சம்பங்கி-ரூ.40.
- பிச்சி பூக்களை பொறுத்தவரை சாலையோர கடைகளில் 100 பூவானது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.
- கேந்தி, சேவல் கொண்டை, சம்பங்கி, ரோஜாப்பூ உள்ளிட்டவையும் விலை உயர்ந்து காணப்பட்டது.
தென்காசி :
பொங்கலையொட்டி சந்திப்பு கெட்வெல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. பனிப்பொழிவால் வரத்து குறைந்ததாலும், பண்டிகை நேரம் என்பதாலும் இன்று மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
இதனால் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.4,500 வரை விற்பனையானது. கிராமங்களில் தெரு தெருவாக விற்பனை செய்யும் பூ வியாபாரிகள் 100 பூவின் விலை ரூ.60 என்ற அளவுக்கு விற்பனை செய்தனர்.
பிச்சி பூக்களை பொறுத்தவரை சாலையோர கடைகளில் 100 பூவானது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இதுதவிர கேந்தி, சேவல் கொண்டை, சம்பங்கி, ரோஜாப்பூ உள்ளிட்டவையும் விலை உயர்ந்து காணப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனையானது.
- பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.
- நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி மல்லிகைப் பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் கிலோ 2,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய், சம்மங்கி, செவ்வந்தி ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.300-க்கும் விற்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.
- மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மல்லிகை பூ சீசன் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து அதிகரித்துள்ளது.
- பிச்சிப்பூ, கனகாம்பரம் ஒரு கிலோ-400 ரூபாய்க்கும், முல்லை பூ கிலோ-250 ரூபாய்க்கும் செவ்வந்தி-180 ரூபாய் க்கும், சம்மங்கி-150 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ்-180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக தமிழ் வருடப்பிறப்பு,சித்திரை திருவிழா முன்னிட்டு மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது பூக்கள் வரத்து அதிகரிப்பால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்து உள்ளது.
கடந்த வாரங்களில் மதுரை மல்லிகைப்பூ கிலோ 600 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பாதியாக குறைந்து இன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே போல் பிச்சிப்பூ, கனகாம்பரம் ஒரு கிலோ-400 ரூபாய்க்கும், முல்லை பூ கிலோ-250 ரூபாய்க்கும் செவ்வந்தி-180 ரூபாய் க்கும், சம்மங்கி-150 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ்-180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மல்லிகை பூ சீசன் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை பாதிக்கு பாதியாக குறைந்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.






