என் மலர்
சென்னை
- சொத்து மதிப்பு சான்றிதழ் பெரும்பாலும் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது.
- கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, துறையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு முன் தகவல் கடிதம் அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும்.
சென்னை:
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சேவைகளில் தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து, அதிலுள்ள முக்கிய விதிமுறைகளை சீர்செய்து, "எளிமை ஆளுமை" திட்டத்தின் கீழ் அனைவரும் சேவைகளை உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது.
"எளிமை ஆளுமை" திட்டத்தை துரிதப்படுத்த இரு குழுக்கள் அமைக்கப்பட்டு முதல் குழு மூத்த அதிகாரிகளை கொண்டு படிப்படியாக வருகின்ற முன்மொழிவுகளை ஆராய்ந்து ஆலோசித்து, பின்பு இரண்டாவது குழு சட்டத்தை பின்பற்றி எவ்வாறு எளிமைப்படுத்த முடியுமோ அவ்வாறு உத்தரவுகளையிட தலைமைச் செயலாளரின் தலைமையில் இயங்குகிறது.
வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 150 சேவைகளை இணையவழியில் இம்முயற்சியின் கீழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வணிக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவிட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெள்ளை வகை தொழிற்சாலைகளின் பட்டியலை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டது.
எளிமை ஆளுமையின் மூலமாக, தற்போது நடைமுறையிலுள்ள நேரடி ஆய்வுகள், ஆவண சரிபார்ப்பு போன்ற முறைகளுக்கு மாற்றாக சுய சான்றிதழ், இணைய வழி-கே.ஒய்.சி., டிஜிட்டல் கையொப்பம் இன்னும் பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் எளிமையாக்கப்பட்ட சேவைகளை விரைவாக பெற வழிவகை செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக, பின்வரும் 10 சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்:
1.சுகாதார சான்றிதழ்:
ஒரு வளாகம் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதனை உறுதி செய்யும் பொருட்டு, சுகாதாரச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டடங்கள் அல்லது வளாகங்கள், வளாகத்தின் சுத்தம், கழிப்பறைகளின் சுத்தம், வளாகத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாத வகை ஏற்படுத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய சுகாதார நடைமுறை முறைபடுத்தலை உறுதி செய்ய வேண்டும்.
இந்நெறிமுறை, சுய சான்றிதழ் வடிவில் வழங்கப்படும்.
இச்சான்றிதழ் தேவைப்படும் வளாகங்களுக்கு கியூ.ஆர்.குறியீட்டுடன் அத்தகைய வளாகங்களின் பொறுப்பாளர்களின் உறுதிமொழியின் அடிப்படையில் உடனடியாக இணையதளத்தில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சான்றிதழ் பெற 3 மாதங்கள் வரை ஆகும் என்ற நடைமுறையை மாற்றி தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
2. பொது கட்டிட உரிமம்:
பொது கட்டிட உரிமச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை உரிமம் செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உரிமம் பெற 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்ற நிலை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் கியூ.ஆர்.குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக பெறும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
3. முதியோர் இல்லங்கள் உரிமம்:
முதியோர்களை பராமரிக்கும் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வருவதை ஊக்குவிக்க, முழு செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செயல்முறை இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, சுய சான்றிதழ் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. சான்றிதழின் காலவரம்பு 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும் என்ற நடைமுறையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
4. பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம்
பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், அவற்றின் செயல்பாட்டிற்கு சம்பந்தமில்லாத, சிக்கலான ஆவண நடைமுறைகள் காரணமாகப் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த அத்தியாவசிய வசதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இணக்கத்தை அதிகரிக்கவும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையிலும், உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும் என்ற நடைமுறையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
5. மகளிர் இல்லங்கள் உரிமம் :
மகளிர் இல்லங்களைப் பதிவு செய்யும் செயல்முறை மிகவும் கடினமாகவும், அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், அலுவலர்கள் அதிக அளவிலான துணை ஆவணங்களைக் கோருவதாகவும் இருந்தது. தற்போது உரிமம் பெறும் முழு செயல்முறையும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் சுய சான்றிதழ் வழங்குவதன் மூலம் உரிமம் தானாகவே உருவாக்கப்படுகிறது. உரிமத்திற்கான கால வரம்பு 3 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக உரிமம் பெற 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை ஆகும் என்ற நிலையை தற்போது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
6. சொத்துமதிப்பு சான்றிதழ்:
சொத்துமதிப்பு சான்றிதழ் பெரும்பாலும் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒருவரின் நிதிநிலையை உறுதிப்படுத்த வங்கி இருப்புநிலை அறிக்கை, பட்டயக்கணக்கர் சான்றிதழ், வருமானவரி தாக்கல் போன்ற பல்வேறு மாற்று வழிகள் தற்போது உள்ள நிலையில் சொத்துமதிப்பு சான்றிதழ் நீக்கப்படுகிறது.

7. வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம்:
வெள்ளை வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மாசுபடுத்தாதவை அல்லது குறைந்த மாசுபடுத்தும் தொழிற்சாலைகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் வழக்கமான ஆய்வுகளின் சுமைகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெள்ளை வகை பட்டியலில் 37 தொழிற்சாலைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன. பல்வேறு நிலைகளில் மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு, வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் 37ல் இருந்து 609 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த 609 வகை தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும் இயங்குவதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் நிலையான தொழில்துறை வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்கும், இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
8. புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ்
புன்செய் நிலத்தை விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்கு, அதாவது குடியிருப்பு அல்லது வணிக கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு, வேளாண்மைத் துறையிடம் தடையின்மை சான்றிதழ் (என்.ஓ.சி.) பெறுவது கட்டாயமாகும். தற்போது முழு செயல்முறையும் இணையவழியில் மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை இணையவழியில் தாங்களாகவே சமர்ப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலர்கள், கோரிக்கையை ஆய்வு செய்து செயலாக்கத்திற்கு உட்படுத்த 21 நாட்கள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் 21 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படாவிட்டால், தடையின்மை சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தானாகவே உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
9. நன்னடத்தை சான்றிதழ்
நன்னடத்தை மற்றும் பின்னணி சரிபார்ப்பு சான்றிதழ் பெற தனிநபர்கள், அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், பிறகு அவை காவல்துறையின் சரிபார்ப்பிற்காக அனுப்பப்படும். தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு எந்தவொரு தனிநபர், அரசு துறை, அரசுப் பொதுத்துறை நிறுவனம் அல்லது பிற அமைப்புகள்-நன்னடத்தை சான்றிதழை, இணையவழி மூலமாக விண்ணப்பித்து எளிமையாகவும், துரிதமாகவும் பெறலாம்.
10. அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ்
தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு அரசு ஊழியர் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க உயர் அதிகாரிகளுக்கு முன் தகவல் அளித்தல் / அரசிடம் தடையின்மை சான்றிதழைப் பெறுதல், துறையிடம் இருந்து அடையாள சான்றிதழைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும். கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, துறையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு முன் தகவல் கடிதம் அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும்.
இவ்வாறு படிப்படியாக நடப்பு ஆண்டில் மேலும் பல சேவைகளை எளிமையாக்கி, மக்களை மையப்படுத்திய நிர்வாகம், வெளிப்படைத்தன்மையாகவும் துரிதமாகவும் அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
"எளிமை ஆளுமை" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு முதியோர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமச் சான்றிதழ், மகளிர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்க சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி. ஜெயஸ்ரீ முரளீதரன், டேவிதார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.
- ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.
'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ் (வயது 75). தொடர்ந்து கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை, சாமி, ரெட், ஆட்டோகிராப் என தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞ ராகவும் பணியாற்றி வந்த ராஜேஷ் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.
45 ஆண்டு காலமாக சினிமாத்துறையில் பயணித்து வரும் ராஜேஷ் குடும்பத்துடன் ராமாபுரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது திடீர் மறைவு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜேஷ் மறைவு பற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலுக்கு ஏராளமான திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ராஜேஷ் மனைவி ஜோன்சில்வியா கடந்த 2012-ம் ஆண்டு காலமானார். ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ராமாபுரத்திலுள்ள இல்லத்தில் நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோரும் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- மருத்துவர் ராமதாஸ் எங்கள் குல தெய்வம்.
- சொந்த காரணங்களுக்காக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.
திண்டிவனம்:
பா.ம.க.இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் திடீரென விலகினார்.
பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவராக கடந்த டிசம்பர் மாதம் டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டார்.
இதற்கு பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பரபரப்பு உருவானது. ஆனாலும் முகுந்தன் இளைஞர் அணி தலைவராக நீடித்து வந்தார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
பேட்டியின்போது பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பார் என டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் முகுந்தன் திடீரென பா.ம.க. இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ஐயா வணக்கம். நீங்கள் தான் என் குல தெய்வம். சொந்த காரணங்களுக்காக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.
இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் கட்சி பணியில் தொடர்ந்து செயல்படுவேன் என அதில் கூறி உள்ளார்.
டாக்டர் ராமதாஸ் பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பார் என அறிவித்த ஒரு மணி நேரத்தில் முகுந்தன் விலகி இருப்பது பா.ம.க. நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
- கவர்னர் வருகையை ஒட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு திருச்சி செல்கிறார்.
திருச்சியில் கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மாலை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கோர்ட் யார்டு ஓட்டலுக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கு ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா மற்றும் குணசீலம் மகஹாத்மியம், வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்கிறார். கவர்னர் வருகையை ஒட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
- பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
- 2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்றும் நாளையும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
82 மாவட்டங்களில் முதலில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். பூத் கமிட்டி பணிகள் தாமதம் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
- அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பொன்.வசந்தை தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பொன்.வசந்த் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்தை தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பொன்.வசந்தை தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மதுரை மேயரின் கணவரான பொன்.வசந்த் மதுரை மாநகராட்சி டெண்டர் விவகாரங்களில் அதிகளவில் தலையிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் ஆரம்பத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து தற்போது மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதியுடன் இணைந்து அவரது ஆதரவில் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் பொன்.வசந்த் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே இருக்கிறது. நேற்று முன்தினம் விலை அதிகரித்திருந்த நிலையில், நேற்று குறைந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 935-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து 7-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-05-2025- ஒரு கிராம் ரூ.111
27-05-2025- ஒரு கிராம் ரூ.111
26-05-2025- ஒரு கிராம் ரூ.111
25-05-2025- ஒரு கிராம் ரூ.111
24-05-2025- ஒரு கிராம் ரூ.111
- கன்னட படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படவே இல்லையா?
- தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்பதை கன்னட மொழியியல் அறிஞர்கள் மிக நன்றாக அறிவார்கள்;
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட விடமாட்டோம், அவரை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம் என்றெல்லாம் ஒருசில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடிபணியவைக்க நினைப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்மொழிதான் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் எனும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்? அதிலும் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் நாமெல்லாம் சகோதர மக்கள் எனும் பொருள்படும்படியாகவே அக்கருத்தினை அந்த இடத்தில் தெரிவித்திருந்ததை, அவரது பேச்சை முழுமையாக உள்வாங்கும் அனைவராலும் எளிதாக உணர முடியும்.
ஆனால், தமிழ்மொழி தோன்றி வளர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அதிலிருந்து கிளைத்த மொழி கன்னடம் என்ற வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்களே, இத்தனை வன்முறை பேச்சுக்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்றனர். அதனை கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும் கண்டித்து தடுக்காது ஊக்குவிக்கின்றது என்பதுதான் பெருங்கொடுமையாகும்.
தமிழிலிருந்து கன்னடம் உருவானது என்பது கன்னட மொழிக்கு பெருமைதானே தவிர சிறுமை அல்ல; ஒருவேளை அந்த கருத்தில் கன்னட அமைப்புகளுக்கு மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால், தமிழைவிட கன்னடம்தான் மூத்த மொழி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை, இலக்கியச் சான்றுகளை, மொழியறிஞர்களின் ஆய்வு முடிபுகளைத் தந்து அறவழியில் மறுக்க வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும்!
அதையெல்லாம் விடுத்து, அண்ணன் கமல்ஹாசனை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம், அவரது படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?
தமிழ் படங்கள்தான் கர்நாடாகவில் திரையிடப்படுகிறதா? கன்னட படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படவே இல்லையா? அண்ணன் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை அங்கே திரையிட அனுமதிக்காவிட்டால், ஒரு கன்னட திரைப்படத்தைக்கூட தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று பதிலுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்தால் அது ஆக்கப்பூர்வமானச் செயலாக இருக்குமா? காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று சொன்ன கன்னட திரைக்கலைஞர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிட தமிழர்கள் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? இன்னமும் அந்த நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? தமிழர்கள் அதனை அனுமதித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்? கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அத்தகைய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு ஏன் இல்லை?
ஒருவேளை தமிழர்கள் அறச்சீற்றம் கொண்டு அப்படங்களை எல்லாம் தடுக்க முனைந்தால் தமிழ்நாட்டில் ஒரு கன்னடப் படத்தைக்கூட திரையிட முடியாதச் சூழலை ஏற்படுத்த முடியும். அவற்றைத்தான் கன்னடவெறி அமைப்புகள் விரும்புகின்றனவா? அப்படி ஒரு எதிர் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு தமிழர்களை கன்னட அமைப்புகள் தள்ளமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஏற்கனவே, காவிரி நதிநீர் போராட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், இறுதி மரியாதை செய்தும் கன்னடவெறி அமைப்புகள் அவமதித்தபோது எவ்வித எதிர்வினையும் ஆற்றாது தமிழ்நாடு அரசு அமைதியாக கடந்துபோனதைப்போல, தற்போதும் கடந்துபோகக்கூடாது.
உண்மையறியாது போராடும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்த்திரையின் பெருமைமிக்க கலை அடையாளம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று அவமதிக்கின்றார். ஆனால், அதற்கு பதிலடி தரவேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதுவரை வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அண்ணன் கமல்ஹாசன் அவர்களை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கின்றீர்கள். எனவே, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரசு அரசிடம் பேசி, போராடும் கன்னட அமைப்புகளைக் கட்டுப்படுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்பதை கன்னட மொழியியல் அறிஞர்கள் மிக நன்றாக அறிவார்கள்; அவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதன் மூலம், இரு மாநில மக்களின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்கும் செயல்களில் இனியும் கன்னட அமைப்புகள் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, கர்நாடக மாநில அரசு, கன்னட அமைப்புகளின் வீணான வெறிச்செயலுக்கு தூபம் போடுவதை விடுத்து, இரு மாநில மக்களின் நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் அண்ணன் கமல்ஹாசன் அவர்களையும், தக் லைஃப் திரைப்பட குழுவையும் மிரட்டும் அடவாடிச் செயல்களில் ஈடுபடும் கன்னடவெறி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தக் லைஃப் திரைப்படத்தைத் தக்க நேரத்தில் திரையிட உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.
- இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும்.
தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது.
- கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
சென்னை:
நடிகருக்கும், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியதற்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், கமலின் தக் லைப் படத்தை கர்நாடகவில் வெளியிடாவிட்டால் தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது.
கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.






