என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2 நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக திருச்சி செல்கிறார் கவர்னர் ஆர்.என். ரவி
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
- கவர்னர் வருகையை ஒட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு திருச்சி செல்கிறார்.
திருச்சியில் கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மாலை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கோர்ட் யார்டு ஓட்டலுக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கு ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா மற்றும் குணசீலம் மகஹாத்மியம், வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்கிறார். கவர்னர் வருகையை ஒட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






