என் மலர்
சென்னை
- சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.
- ஆகஸ்ட் மாதத்தில் 2-வது மாநில மாநாடு நடத்தப்படும்.
சென்னை:
த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
* சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.
* சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம்.
* ஆகஸ்ட் மாதத்தில் 2-வது மாநில மாநாடு நடத்தப்படும்.
* சட்டசபை தேர்தலில் விஜய் முதலமைச்சர் வேட்பாளர்.
* சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற த.வெ.க. முதல் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர்.
- மாநாடு நடைபெறும் இடம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. பல இடையூறுகளைத் தாண்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற த.வெ.க. முதல் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர்.
முதன்முதலாக அரசியல் மாநாட்டில் பங்கேற்று பேசிய விஜய், அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என்பது குறித்து பேசியது அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது.
இதையடுத்து, த.வெ.க.வின் அடுத்த மாநாடு எப்போது நடைபெறும்? என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற த.வெ.க.வின் செயற்குழு கூட்டத்தில் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநாடு நடைபெறும் இடம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.
- கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் கொடுப்பது உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கொள்கை தலைவர்கள் சிலைகளுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு கட்சி தலைவர் விஜய் பகல் 12 மணிக்கு வந்தார். தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொள்கை தலைவர்கள் சிலைகளுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார்.
இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- 52 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- 6 கோவில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.
அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கைங்கர்யம் பணியிடத்தில் பணிபுரிந்து வந்த 6 கோவில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ் ணன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தலைமைப் பொறியாளர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக திருச்செந்தூரில் இருந்து இந்து சமய அறநிலைத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், கூடுதல் ஆணையர் ஜெயராமன், கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்க கத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை வெளியிட்டார்.
இந்த கோயம்புத்தூர் முழுமைத் திட்டம்-2041, தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட முக்கியமான அம்சமாகும். இம்முழு மைத்திட்டம், நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய மீள்தன்மை கொண்ட நகரமாக கோயம்புத்தூர் உருவாக்குவதற்கான அடித் தளத்தை அமைக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டிடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டிடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டிடம் ஆகிய கட்டி டங்களை திறந்து வைத்தார்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணி இடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
- எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
பா.ம.க.வில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக நிறுவனர் ராமதாஸ் ஒரு அணியாகவும், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பா.ம.க.வில் சட்டமன்ற கட்சி கொறடாவாக உள்ள அருளுக்கு எதிராக அன்புமணி சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.
சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை சந்தித்து மனு அளித்த பின்னர் வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அருள் நீக்கப்பட்டுள்ளார்.
பா.ம.க. சட்டசபை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தை மதிக்க வேண்டிய உங்க வீட்டுக்காரர் ஏன் மதிக்கவில்லை.
- நான் மனது வருத்தப்படுவதுபோல் பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்.
நடிகர் தாடி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இறந்துபோன, கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிறைய விஷயங்கள் செய்து கொடுத்து இருக்கிறார். அதற்காக நன்றி.
மாநிலத்தில் ஒருத்தருக்கு இப்படி நடந்து இருப்பதை நினைத்து வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும், கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி கூறி உள்ளார்.
அஜித்குமார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் மனைவிகள் அழுவதை பார்த்தேன்.
உங்க வீட்டுக்காரர்கள் அஜித்குமாரை அடித்ததுபோல் உங்களுடைய வீட்டுக்காரர்களையும் கோசாலையில் வைத்து பொதுமக்கள் அடித்து தண்டனை கொடுத்தால் ஒத்துக்கொள்வீர்களா?
இது சட்டத்தில் கிடையாது. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தை மதிக்க வேண்டிய உங்க வீட்டுக்காரர் ஏன் மதிக்கவில்லை. நீங்க சொன்னீர்கள் அவரா செய்யவில்லை. யாரோ ஒரு சார் சொல்லி தான் செய்தார்.
ஏற்கனவே ஒரு சார் அவரே யார் அந்த சார்? என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போது ஒரு சார். 3-வதாக ஒரு சார் வருவதற்கும் யார் அந்த சார்? என்று நீங்கள் சொல்லி விடுங்கள்.
நான் மனது வருத்தப்படுவதுபோல் பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள். ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் சாரி... சாரி... ஓகே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிகிதா 2011-ம் ஆண்டில் திருமண மோசடி செய்து உள்ளார்.
- சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
சென்னை:
சென்னை முகப்பேர் மேற்கு 1-வது அவென்யூவில் ஜி.பி.எஸ். சிஸ்டம்ஸ் மற்றும் சர்வீசஸ் புதிய கடை திறப்பு விழா இன்று நடந்தது. இதனை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். கடையின் உரிமையாளர்கள் நாகேந்திரன், நிஷாந்த் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. சிலர் தலைமை செயலகத்தில் இருந்து காவல் துறையை கட்டுப்படுத்துகிறார்கள். காவலாளி அஜித்குமார் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை தனிப்படை எப்படி விசாரித்தது.
நிகிதா தலைமை செயலகத்தில் யாரை தொடர்பு கொண்டார். அங்கிருந்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
நிகிதா 2011-ம் ஆண்டில் திருமண மோசடி செய்து உள்ளார். இந்த விஷயத்தில் முதலமைச்சர் 'சாரி' என்று கூறி விட்டு செல்ல முடியாது. அவர் இதுபற்றி விரிவான விளக்கத்தை தர வேண்டும். சி.பி.ஐ. விசாரணையை தொடங்க வேண்டும்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் 5 மாதத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் சாத்தான்குளம் வழக்கை தாமதப்படுத்துவது ஏன்? எல்லா வழக்குகளையும் ஒரே மாதிரியாக விசாரிக்க வேண்டும்.
நுங்கம்பாக்கம் சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் காவல்துறை பின்னணி இருப்பதாக தகவல் வருகிறது. போலீஸ் காவலில் மரணம் என்று போலீசார் விசாரணை கைதிகளை படுகொலை செய்கிறார்கள். அதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் நான் பங்கேற்கிறேன். மற்ற மாவட்டங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நாங்கள் காரணம் அல்ல. கூட்டணி தொடர்பாக விரைவில் பா.ம.க.வில் இருந்து நல்ல செய்தி வரும். எங்கள் கூட்டணியில் விஜய் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர், முகப்பேர் மேற்கு வியாபாரிகள் சங்க தலைவர் பி.செல்லத்துரை, தொழில் அதிபர் ராமபஞ்சாட்சரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
- ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிக்கு இராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மன்னர்களில் ஒருவரான இராஜேந்திர சோழன், 1023-ஆம் ஆண்டில் கங்கை நதி பாயும் வட இந்தியா வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரையும், கங்கை கொண்ட சோழீச்சுரம் என்ற ஆலயத்தையும் அமைத்தார். அவற்றின் தொடர்ச்சியாக 1025ஆம் ஆண்டில் இப்போது பொன்னேரி என்றழைக்கப்படும் சோழகங்கம் ஏரியை கட்டி பாசன வசதியை ஏற்படுத்தினார். சோழகங்கம் ஏரி கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை தமிழக அரசு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்.
16 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக வெட்டப்பட்ட சோழகங்கம் ஏரி இப்போது தூர்வாரப்படாமல் குறுகிக் கிடக்கிறது. இந்த ஏரியுடன் இணைக்கப்பட்ட சோழர் காலத்தைய பாசனக் கட்டமைப்புகளும், ஏரிகளும் பராமரிப்பின்றி அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் நோக்குடன் அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
சோழகங்கம் ஏரியின் ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிக்கு இராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட வேண்டும். மேலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்களும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் உள்ள நிலையில், அவை குறித்து ஆட்சி செய்ய வசதியாக ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் வசதியுடன் வரலாற்றுத் துறையையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 25 வயதில் வீரியமாக அடித்துக்கொண்டிருக்கும் இதயம் நிறுத்தப்படுகிறது என்றால் எவ்வளவு கொடுமையை அந்த உடம்பு அனுபவித்து இருக்கும்.
- தமிழகம் முழுவதும் இது ஒரு மாடலாக இருக்கிறதே என்று மிகமிக கவலையாக உள்ளது.
சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போலீசாரால் அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தம்பி, எனக்கு பாதுகாப்பு மட்டும் கேட்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் மிரட்டப்படுகின்றனர் என்று கூறி உள்ளார்.
அப்படியென்றால் இதில் மிரட்டுபவர் யார்? யார் அந்த சார்?
இந்த காவல்துறை அதிகாரிகளை மிரட்டி, அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று அஜித் குமாரை கடுமையாக தாக்கச்சொன்ன சார் யார்?
சென்னையில் இருந்துதான் அவர்களுக்கு ஆணை வந்ததாக சொல்கிறார்கள்.
அப்படியென்றால் யாரின் நடவடிக்கையின்பேரில், யாரின் ஒப்புதலின்பேரில், யாரின் அறிவுறுத்தலின்பேரில் கடுமையான விசாரணை நடத்தப்பட்டது.
25 வயதில் வீரியமாக அடித்துக்கொண்டிருக்கும் இதயம் நிறுத்தப்படுகிறது என்றால் எவ்வளவு கொடுமையை அந்த உடம்பு அனுபவித்து இருக்கும். எந்த விசாரணையும் காவல்நிலையத்தில் நடக்கவில்லை.
சாரி சொன்னால் போதுமா... எவ்வளவு ஒரு வேதனையான விஷம்.
தேனியில் இன்னொரு சம்பவம் வெளி வருகிறது. காவல் நிலையத்தில் உண்மை வெளிவருகிறதா? உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறார்களா? தமிழகம் முழுவதும் இது ஒரு மாடலாக இருக்கிறதே என்று மிகமிக கவலையாக உள்ளது.
எங்கெங்கு இருந்து எந்தெந்த சாரிடம் இருந்து ஆணைகள் வந்துகொண்டிருக்கிறது என்று நமக்கு தெரியவில்லையே.
தனிப்படையை கூலிப்படை போல் நீங்கள் பயன்படுத்தி வந்தீர்கள் என்று தானே அர்த்தம்.
விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு துணைபோய்க்கொண்டிருந்த சிறப்பு காவல்படை நீக்கப்படுகிறார்கள் என்று டிஜிபி சொல்கிறார்.
அஜித்குமாரை தாக்கிய அனைவருக்குமே கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழக அரசு இதை தீவிரமாக சிந்திக்க வேண்டும். எல்லோரும் ஒரு அழுத்தத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
த.வெ.க. தலைவர் சென்று பார்த்ததை ஒரு ஸ்டண்ட் என்று சொல்லும் அளவிற்கு கீழ்த்தரமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் கட்டாயம் சென்று இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி ஆட்சி செய்யும்போது முதலமைச்சர் பொறுப்பு. இவர்கள் ஆட்சி செய்யும்போது அதிகாரிகள் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று முன்தினம் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
- அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
சென்னை:
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர். புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கவும் சட்டப்பேரவைச் செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்க உள்ளார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கிது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்க உள்ளார்.
த.வெ.க. சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க.வின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.






