என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆகஸ்டில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு
- விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற த.வெ.க. முதல் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர்.
- மாநாடு நடைபெறும் இடம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. பல இடையூறுகளைத் தாண்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற த.வெ.க. முதல் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர்.
முதன்முதலாக அரசியல் மாநாட்டில் பங்கேற்று பேசிய விஜய், அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என்பது குறித்து பேசியது அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது.
இதையடுத்து, த.வெ.க.வின் அடுத்த மாநாடு எப்போது நடைபெறும்? என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற த.வெ.க.வின் செயற்குழு கூட்டத்தில் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநாடு நடைபெறும் இடம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Next Story






