என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி - முதலமைச்சர் திறந்து வைத்தார்
- 52 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- 6 கோவில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.
அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கைங்கர்யம் பணியிடத்தில் பணிபுரிந்து வந்த 6 கோவில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ் ணன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தலைமைப் பொறியாளர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக திருச்செந்தூரில் இருந்து இந்து சமய அறநிலைத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், கூடுதல் ஆணையர் ஜெயராமன், கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்க கத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை வெளியிட்டார்.
இந்த கோயம்புத்தூர் முழுமைத் திட்டம்-2041, தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட முக்கியமான அம்சமாகும். இம்முழு மைத்திட்டம், நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய மீள்தன்மை கொண்ட நகரமாக கோயம்புத்தூர் உருவாக்குவதற்கான அடித் தளத்தை அமைக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டிடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டிடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டிடம் ஆகிய கட்டி டங்களை திறந்து வைத்தார்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணி இடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.