என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    ஒரு கும்பல், அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. மேலும் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. நிம்ரிட்டா ரெயில் நிலையமும் சூறையாடப்பட்டது. ஜாங்கிபூர் பகுதியில் ஒரு கும்பல் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான கலிலுர் ரகுமான் அலுவலகத்தை சூறையாடியது.

    முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. வன்முறையில் 2 பேர் பலியானதாகவும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார்.

    ஜாங்கிபூரி ல் அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில் போராட்டம் பரவியது.

    மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (சுமார் 500 பேர்) மேற்கு வங்காளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
    • வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தில் போராட்டம் நடைபெற்றது.

    வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதா பாத், சுதி, அம்தாலா, துலியன் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு பிரிவினர் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர்.

    நிம்நிதா ரெயில் நிலையத்தில் அவர்கள் பல மணி நேரம் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ரெயில் மீது சரமாரியாக கற்களையும் வீசினார்கள். ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார்கள். இதையடுத்து வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் 10 போலீசார் படுகாயம் அடைந்தனர். சில ரெயில் பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

    இந்த வன்முறையால் அப்பகுதி வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் திருப்பி விடப்பட்டது. சர்வ தேச எல்லையில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    • சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன்.
    • வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும்.

    கொல்கத்தா:

    வக்பு திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதை தொடர்ந்து இது சட்டமானது.

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள் மேற்கு வங்காளத்தில் பிரித்து ஆட்சி செய்யக்கூடிய எதுவும் நடக்காது. வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
    • நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 48 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார்.

    கொல்கத்தா அணி சார்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேப்டன் ரகானே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர் 45 ரன்னில் அவுட்டானார். சுனில் நரைன் 30 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்தில் 38 ரன்க எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    • பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
    • தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அங்கு எவ்வளவு முயன்றும் மீடேற முடியவில்லை. அடுத்த வருடம் மேற்கு வங்காளத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக தனது வேலையை தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் கீர்த்தி ஆசாத் இருவடையேயான தனிப்பட்ட வாட்ஸ்அப் chat-களின் ஸ்க்ரீன் ஷாட்களை பாஜக தலைவர் அமித் மாளவியா கசிய விட்டுள்ளார். இதோடு, தேர்தல் ஆணையத்தில் வைத்து திரிணாமுல் எம்பிக்கள் இருவர் சண்டையிட்டு கொண்ட வீடியோவையும் பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்துள்ளார்.

    அவர் வெளியிட்ட chat-களில் கல்யாண் பானர்ஜி, சொந்த கட்சியில் இருக்கும் மற்றொரு பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவர் குறித்து குறை கூறுகிறார். அவரை கீர்த்தி ஆசாத் சமாதானப்படுத்துகிறார். அந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் தலைவரை "versatile international lady" என்று குறிப்பிட்டு கல்யாண் பானர்ஜி ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த சாட்-இல் பேசியிருக்கிறார்.

    இந்நிலையில் இவ்வாறு கட்சியின் தனிப்பட்ட விஷயங்களை பாஜக பகிர்ந்து அரசியல் செய்வதை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சௌகதா ராய் சாடியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "வெளியிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள் எங்களை அவமானப்படுத்தியுள்ளன, சங்கடப்படுத்தியுள்ளன. இது நடந்திருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்சியின் உள் தனியுரிமையை பராமரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன.
    • பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

    வட இந்தியாவில் நேற்று ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

    கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் செவன் பாயிண்ட் பகுதியில் ராம நவமி ஊர்வலம் தாக்கப்பட்டதாக பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் நேற்று கூறியிருந்தார்.

    அவரது எக்ஸ் பதிவில், "காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன. கண்ணாடித் திரைகள் உடைந்தன. குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தற்செயலானதல்ல - இது குறிவைக்கப்பட்ட வன்முறை. முதுகெலும்பு இல்லாத காவல்துறை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.

    மம்தா பானர்ஜியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே படை அவரது திருப்திப்படுத்தும் அரசியலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அப்பாவி இந்துக்களைப் பாதுகாக்க ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை" என்று கொந்தளித்திருந்தார். இதுதொடராக வீடியோ ஒன்றரையும் அவர் பகிர்ந்தார்.

    ஆனால் அந்த பகுதியில் ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அங்கு எந்த ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கொல்கத்தா போலீஸ் தெளிவுபடுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "பார்க் சர்க்கஸில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, எந்தவொரு ஊர்வலத்திற்கும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அந்தப் பகுதியில் அத்தகைய ஊர்வலம் எதுவும் நடக்கவில்லை.

    ஒரு வாகனம் சேதமடைந்ததாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக தலையிட்டு ஒழுங்கை மீட்டெடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிள்களுடன் போட்டிபோட்டு சாலையில் கட்டில் காரை ஓட்டுகிறார்.
    • சில இடங்களில் மற்ற வாகனங்களை முந்தியும் செல்கிறார்.

    ரோட்டில் மோட்டார் சைக்கிள்களுடன் போட்டி போட்டு ஓடும் கட்டில்மெத்தை காரின் வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

    மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தை சேர்ந்த நவாப் ஷேக்கில், என்பவர்தான் கட்டில் மெத்தையை காராக மாற்றி அசத்தி இருக்கிறார். அவர் ரூ.2 லட்சம் செலவு செய்து காரின் உதிரி பாகங்களை கட்டில் மெத்தையுடன் இணைத்து தனது கனவு காரை வடிவமைத்து உள்ளார்.

    சுமார் ஒரு ஆண்டு கால முயற்சியில் அவர் இதை மாற்றி அமைத்துவிட்டு தெருவில் ஓட்டி வந்தபோது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் சாலையில் வாகனத்தை மறித்த போலீசார், அதற்கான உரிமங்கள், பதிப்புரிமையை கேட்டதால் சிக்கலை சந்தித்தாராம்.

    வீடியோவில் அவர் மோட்டார் சைக்கிள்களுடன் போட்டிபோட்டு சாலையில் கட்டில் காரை ஓட்டுகிறார். சில இடங்களில் மற்ற வாகனங்களை முந்தியும் செல்கிறார். எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 2 நாட்களில் 2½ லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வாகன பிரியர்கள் மற்றும் வலைத்தளவாசிகள் மத்தியில் அவரின் புகழ் அதிகரித்து வருகிறது.



    • நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது.
    • பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும்.

    கொல்கத்தா:

    மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.

    இதனை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டை பிரிப்பதற்காக வக்பு திருத்த மசோதாவை பா.ஜ.க. கொண்டுவந்து நிறைவேற்றி உள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை அகற்றிவிட்டு, புதிய அரசு அமையும்போது இந்த மசோதா ரத்து செய்யப்படும். அதற்கான திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று 15-வது லீக் போட்டி நடைபெற்றது.
    • இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று 15-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

    ஐ.பி.எல். வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன் அந்த அணி கடந்த ஆண்டு சென்னைக்கு எதிராக 78 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்ததே இந்த வகையில் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

    ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று 29-வது முறையாக மோதிய கொல்கத்தா அணி 20-வது வெற்றியை பெற்றது.

    இதேபோல் பஞ்சாப்புக்கு எதிராக 21 ஆட்டத்திலும், பெங்களூருவுக்கு எதிராக 20 ஆட்டத்திலும் கொல்கத்தா அணி ஏற்கனவே வென்றுள்ளது.

    இதன்மூலம் மூன்று அணிகளுக்கு எதிராக 20 மற்றும் அதற்கு அதிகமான ஆட்டங்களில் வென்ற முதல் அணி என்ற பெருமையை கொல்கத்தா பெற்றது.

    • கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
    • நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.

    இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.

    கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது. நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தரவேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என தெரிவித்தனர்.

    மேலும், புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட்டும் சதி செய்துள்ளன என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 200 ரன்களைக் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 120 ரன்களில் சுருண்டது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

    வெங்கடேஷ் ஐயர் 29 பந்தில் 60 ரன்னும், ரகுவன்ஷி 32 பந்தில் 50 ரன்னும் குவித்தனர். ரகானே 38 ரன்னும், ரிங்கு சிங் 32 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கிளாசன் 33 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 27 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஐதராபாத் 16.4 ஓவரில் 120 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கொல்கத்தா பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஐதராபாத் அணி பெற்ற 3-வது தோல்வி ஆகும்.

    கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டும், ஆண்ட்ரூ ரசல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நியமனத்தில் குறைபாடு, களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
    • மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறை கேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.

    இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.

    மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.

    கொல்கத்தா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர். அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என்றும் கூறினர்.

    புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகும்.

    ×