என் மலர்
நீங்கள் தேடியது "சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு"
- நியமனத்தில் குறைபாடு, களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
- மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறை கேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.
மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.
கொல்கத்தா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர். அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என்றும் கூறினர்.
புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகும்.
புதுடெல்லி:
டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். சுமார் 3 ஆண்டுகள் சட்ட போராட்டத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுனருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்று தெளிவுப் படுத்தி கூறியுள்ளது. அதில் காவல்துறை, சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகள் துணைநிலை ஆளுனரின் கீழும், மீதமுள்ள துறைகளின் அதிகாரங்கள் மாநில அரசின் கீழும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்- மந்திரி கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் நேற்று துறை ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார்கள். துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, பணியாளர் சேவைத் துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
துணைநிலை ஆளுனர் சில அதிகாரிகளை மாற்றி பிறப்பித்திருந்த உத்தரவுகளை ரத்து செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.
ஆனால் அவரது உத்தரவை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து துணை முதல்- மந்திரி மணீஷ் சிசோடியா அந்த அதிகாரிகளுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி பேசினார்.
ஆனால் அதன் பிறகும் அவரது உத்தரவை டெல்லி அதிகாரிகள் அமல்படுத்த முன்வரவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அமைச்சர்களின் உத்தரவுகளை ஏற்க முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்ட பிறகும், மற்றொரு வழக்கை காரணம் காட்டி அதிகாரிகள் தங்களுக்கு பணிய மறுப்பது ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கும் டெல்லி மந்திரிகளுக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்து அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், “அமைச்சர்களின் உத்தரவுகளை அதிகாரிகள் ஏற்க மறுப்பது கோர்ட்டு அவமதிப்பு குற்றமாகும். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். எனவே அமைச்சர்களின் உத்தரவை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே துணை நிலைஆளுனர் அனில் பய்ஜாலுக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப உரிய முறையில் செயல்பட ஒத்துழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துணை நிலை ஆளுனரை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து துணைநிலை கவர்னர் அனில் பய்ஜாலை இன்று (வெள்ளிக்கிழமை) கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அப்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப தன்னை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுனரிடமே இருப்பதால் அதற்கு ஏற்ப கவர்னர் செயல்படுவார் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியுள்ளார். இதனால் டெல்லி அரசியலில் ஏற்பட்டுள்ள மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. #Kejriwal






