என் மலர்
உத்தரகாண்ட்
- அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை.
- சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சனம்.
உத்தரகாண்ட் மாநிலம் கான்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன்.
இந்த தொகுதியில் தற்போது சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கிய உமேஷ் குமார் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் அரசியல் மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
2 பேரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உமேஷ் குமார் எம்.எல். ஏ.வை ஒரு முறைகேடான குழந்தை என்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் விமர்சனம் செய்தார்.
இதனை கேட்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டின் முன்பாக சென்று கோஷம் எழுப்பினர். அப்போது தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வா என சவால் விடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் அவருடைய ஆதரவாளருடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி உமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் அலுவலக த்திற்குச் சென்றார்.
அங்கிருந்த ரமேஷ் குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவா ளர்களை அவர்கள் தாக்கினர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏ அலுவலகத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
சரவெடி போல தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிகளில் இருந்து 100 குண்டுகள் பாய்ந்தன. அதில் 70 குண்டுகள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள சுவர்களை துளைத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாய வில்லை. இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் கையில் துப்பாக்கியுடன் எம்.எல்.ஏ. அலுவலகத்தை தனது ஆட்களுடன் வலம் வந்து அங்கிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து சென்றார்.
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இந்த காட்சிகள் ஒரு சில நிமிடங்களில் அரங்கேறியது. இது பற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தனது அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை கண்டு உமேஷ் குமார் எம்.எல்.ஏ ஆவேசமடைந்தார். அவரும் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் வீட்டை நோக்கி நடந்து சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் உள்பட 4 பேரை டேராடோனில் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக குன்வர்பிரணவ் சிங் சாம்பியன் கூறுகையில்:-
தன்னுடைய வீட்டின் முன்பு வந்து உமேஷ் குமார் எம்.எல்.ஏ. தனக்கு சவால் விட்டதால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்து ள்ளார்.
உத்தரகாண்டில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக அரசியல் பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
- பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
- வலைதளத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெறுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று (ஜனவரி 27) உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. பொது சிவில் சட்டத்திற்கான வலைதளத்தை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் இன்று இச்சட்டம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தரகாண்ட் வருகிறார்.
- உத்தரகாண்டில் ஜனவரி 27-ல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.
டேராடூன்:
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து, அங்கு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி உத்தரகாண்ட் வருகிறார்.
அவர் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தில் ஜனவரி 27-ல் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படுகிறது.
பொது சிவில் சட்டத்துக்கான இணைய தளத்தை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் என தெரிவித்தார்.
- சந்தேகமடைந்த மக்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர்.
- போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட்:
கடும் குளிர் காரணமாக மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பிலங்கானா பகுதியின் த்வாரி தப்லா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதன் மோகன் செம்வால் (52) மற்றும் அவரது மனைவி யசோதா தேவி (48) ஆகியோர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள த்வாரி தப்லாவிற்கு வந்திருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை சாத்திக்கொண்டனர். நெருப்பிடம் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
மறுநாள் காலை அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அந்த தம்பதி படுக்கையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
- ஞாயிற்றுக்கிழமை முகாமின் இறுதி நாளாகும்.
- தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும்
உத்தரகாண்டில் நடைபெற உள்ள 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு தயராகி வந்த மைனர் ஹாக்கி வீராங்கனை பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பயிற்சியாளர் பானு அகர்வால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் பேரில், அகர்வாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரித்துவாரில் போலீஸார் கைது செய்தனர். அவரின் பயிற்சி சான்றிதழும் ரத்து செய்யப்படுகிறது.
ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஹாக்கி தேர்வு முகாமுக்கு மூன்று பயிற்சியாளர்களுடன் சுமார் 30 சிறுமிகள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முகாமின் இறுதி நாளாகும்.
பயிற்சியாளர் அந்த வீராங்கனையை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமியின் உடல்நிலை ஆரம்பத்தில் நன்றாக இல்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- மாணவன் வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகிள்ளது.
- மாணவர்கள் பயன்படுத்திய கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் ஓட்டல் ஒன்றில் ஆண்டு விழா கொண்டாடியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சில மாணவர்கள் கார்களில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மாணவர்கள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
- இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார். இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது போலீசாரிடம் பிரச்சனை செய்த இளைஞர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பள்ளத்தாக்கில் இருந்து மக்கள் கயிறுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
- ஹல்த்வானியில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பதினைந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் பீம்டல் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 24க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
அல்மோராவில் இருந்து ஹல்த்வானி பகுதியை நோக்கிச் சென்ற பேருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போலீசார், SDRF குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் இருந்து மக்கள் கயிறுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.
ஹல்த்வானியில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பதினைந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
4 பேர் உயிரிழந்த நிலையில், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.
- ராணுவ வீரர்களின் மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தரகாண்ட மாநிலம் டேராடூன் ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.
நேபாள ராணுவ தலைவர்ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.
அணிவகுப்பின் இறுதிக்கட்டத்தில் ராணுவ வீரர்களின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
- இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
- சில பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இவ்வாறு ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தவறு என பதிவிட்டனர்.
கால்கள் செயல் இழந்த நிலையிலும் வாலிபர் ஒருவர் வீல் சேருடன் பங்கி ஜம்பிங் சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள இந்தியாவிலேயே மிக உயரமான பங்கி ஜம்பிங் சாகசம் செய்யும் தளத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அபைய் டோக்ரா என்ற வாலிபர் இந்த சாகசத்தை நிகழ்த்தி உள்ளார். அவரை 117அடி உயரத்தில் இருந்து குதிக்க வைக்கும் முன்பு அவரது வீல் சேருடன் சேர்த்து அவருக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.
பின்னர் அவர் சாகசத்தை நிகழ்த்திய பிறகு மகிழ்ச்சி அடைகிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சிலர், அந்த வாலிபரின் தைரியத்தை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இவ்வாறு ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தவறு என பதிவிட்டனர்.
- கங்கை நதி நீர் 'ஏ' முதல் 'ஈ' வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
- ஹரித்துவார் கங்கை நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தர பிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி நதி நீர் 'ஏ'(A) முதல் 'ஈ'(E) வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஏ என்பது மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம்.
அதே சமயம் ஈ என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் 'பி' வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரிய வந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
- பேருந்தில் சுமார் 35 பேர் பயணம் செய்த நிலையில் விபத்து.
- சிலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை.
உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சுமார் 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை 9 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கவும் காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அல்மோரோ எஸ்.பி. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
சால்ட் துணை மாவட்ட கலெக்டர், சில பயணிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் "பேருந்து விபத்து ஏற்பட்ட 28 பேர் உயிரிழந்தது செய்தி மிகவும் கவலையளிக்கும் செய்தி. துரித மீட்புப்பணிக்கு உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.






