என் மலர்
உத்தரப் பிரதேசம்
- கும்பமேளா நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு புனித நீராடி வருகின்றனர்.
- அதிகாலை 3 மணியளவில் மக்கள் அதிக அளவில் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
லக்னோ:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை தினமான இன்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிகாலை 3 மணியளவில் மக்கள் அதிக அளவில் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், சிலர் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் மயங்கினர். கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். அதில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
- மவுனி அமாவாசையான இன்று கும்பமேளாவில் 5 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 19 கோடிக்கும் அதிகமானோர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
இதற்கிடையே, மவுனி அமாவாசையான இன்று கும்பமேளாவில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மவுனி அமாவாசையான இன்று மட்டும் மகா கும்பமேளாவில் 5.7 கோடி பக்தர்கள் புனித நீராடினர் என உத்தர பிரதேச
அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 3 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 12 (மாகி பவுர்ணமி), பிப்ரவரி 26 (சிவராத்திரி) ஆகிய முக்கிய தினங்களிலும் புனித நீராடுவோர் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மௌனி அமாவாசை தினமான இன்று கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லக்னோ:
மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
மகா கும்பமேளாவிற்கு வந்திருக்கும் துறவிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கும்பமேளா நிர்வாக அமைப்பின் மீது நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட, கும்பமேளா நிர்வாகத்தை உ.பி அரசிடம் ஒப்படைக்காமல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறப்படும் உண்மைகள் தற்போது அனைவர் முன்னிலையில் வெளிவந்துள்ளன. இதுபற்றி பொய்ப் பிரசாரம் செய்பவர்கள், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மகா கும்பாபிஷேகத்தின் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட விபத்தில் பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்களை ஆதரிப்பதற்கும், மேலும் குழப்பத்தைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசை கேட்டுக் கொள்கிறேன்.
படுகாயம் அடைந்தவர்களைக் கொண்டு செல்வதற்கு ஏர் ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட வேண்டும். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பித் தருவதற்கு விரைவான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில் பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும். பக்தர்களின் எதிர்கால ஏற்பாடுகளை மேம்படுத்த இந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்படி மாநில அரசை கேட்டுக் கொண்டார்.
- மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
- இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உபி. அரசு இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை அளிக்கவில்லை
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமமாகும் இடம் திரிவேணி சங்கமம் - இந்துக்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மகா கும்பமேளாவின் போது, குறிப்பாக மௌனி அமாவாசை போன்ற சிறப்பு நீராடும் நாட்களில் அதில் நீராடுவது மக்களின் பாவங்களை கழுவி, அவர்களுக்கு 'மோட்சம்' அல்லது முக்தியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "உ.பி. பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நடந்த துயர சம்பவம் வருத்தமளிக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் தற்போதுவரை மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகவில்லை. ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உபி. மாநில அரசு இதுவரை அதிகாரப்பூர்வ தகவலை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மருத்துவர் ஆதர்ஷ் சங்கர், நோயாளியை கவனிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்ததால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் மெயின்புரி மாவட்ட மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டதாக அனுமதிக்கப்பட்ட பிரவேஷ் குமாரி என்ற 60 வயது மூதாட்டி அடுத்த 15 நிமிடங்களில் உயிரிழந்தார்.
அப்போது பணியில் இருந்து மருத்துவர் ஆதர்ஷ் சங்கர், நோயாளியை கவனிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்ததாகவும் நோயாளியை கவனிக்க செவிலியரை அனுப்பியதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரது மகன் குரு ஷரன் சிங் கூச்சலிட்டு போராடியுள்ளனர். அப்போது மருத்துவர் ஆதர்ஷ் சங்கர், குரு ஷரன் சிங்கை அறைந்தால் மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மதன் லால், "இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் மருத்துவர் சங்கர் கவனக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
- பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமமாகும் இடம் திரிவேணி சங்கமம் - இந்துக்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மகா கும்பமேளாவின் போது, குறிப்பாக மௌனி அமாவாசை போன்ற சிறப்பு நீராடும் நாட்களில் அதில் நீராடுவது மக்களின் பாவங்களை கழுவி, அவர்களுக்கு 'மோட்சம்' அல்லது முக்தியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், விஐபிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவைதான் காரணம்.
பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய , மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமோர் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் மவுனி அமாவாசை வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில் ஏராளமான மக்கள் புனித நீரான திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கங்கா, யமுனா, சரஸ்வதி (மாயநதி) சங்கமிக்கும் திரிவேணியில் இதுவரை 14.52 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடியுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் மையம் கொண்டனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தினமும் இயக்கப்படும் ரெயில்கள், 24 சிறப்பு ரெயில்கள், விமானம் மற்றும் கார்கள் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அங்கு சென்று, புனித நீராடி உள்ளனர்.
பக்தர்கள் குளிப்பதற்காக 25 இடங்களில் படித்துறை அமைக்கப்பட்டு உள்ளன. நதியின் மறு கரைக்கு செல்வதற்கு நடுவில் இரும்பால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாலைகள் இல்லாத பகுதிகளில் தற்காலிகமாக இரும்பை பயன்படுத்தி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் மவுனி அமாவாசை வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில் நீராடுவது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் இந்த மவுனி அமாவாசை, பண்டிகை போல் கொண்டாடப்படுகிறது.
மவுனி அமாவாசையான இன்று மகா கும்பமேளாவில் ஏராளமான மக்கள் புனித நீரான திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
போலீசாரின் தடுப்புகளை மீறி அதிகாலையிலேயே புனித நீராட முயன்ற பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரயாக்ராஜில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போதைய கள நிலவரம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரு மணி நேரத்தில் 2-வது முறையாக பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். மகா கும்பமேளா நிலைமையை அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
- ஏராளமானோர் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமமாகும் இடம் திரிவேணி சங்கமம் - இந்துக்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மகா கும்பமேளாவின் போது, குறிப்பாக மௌனி அமாவாசை போன்ற சிறப்பு நீராடும் நாட்களில் அதில் நீராடுவது மக்களின் பாவங்களை கழுவி, அவர்களுக்கு 'மோட்சம்' அல்லது முக்தியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று மௌனி அமாவாசை என்பதால் அதிகளவிலான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இதற்காக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையிலும், கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.
கும்பமேளாவில் மௌனி அமாவாசை தினத்தில் அமிர்த ஸ்நானம் மிக முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட பத்து கோடி யாத்ரீகர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு, 144 ஆண்டுகளுக்குப் பிறகு 'திரிவேணி யோகம்' என்ற அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக வழக்கமாக அமிர்த ஸ்நானம் என்ற முக்கிய சடங்கை விட அதிகளவு ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றது.

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பலரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அங்குள்ள கள சூழ்நிலையை அறிந்து கொள்ள மூத்த நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.
"நாங்கள் இரண்டு பேருந்துகளில் 60 பேர் கொண்ட குழுவாக வந்தோம், நாங்கள் ஒன்பது பேர் குழுவில் இருந்தோம். திடீரென்று கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, நாங்கள் சிக்கிக்கொண்டோம். எங்களில் பலர் கீழே விழுந்தனர், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. எல்லா பக்கங்களிலிருந்தும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது," என்று கர்நாடகாவைச் சேர்ந்த சரோஜினி கூறினார்.
இன்று அதிகாலை, சங்கமத்திலும், மகா கும்பமேளாவிற்காக 12 கிலோமீட்டர்கள் நீளமுள்ள நதிக் கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மற்ற அனைத்து மலைத்தொடர்களிலும் மக்கள் கூட்டம் குவிந்திருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்தது. தற்போது வரை இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமுற்றனர் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும் இதில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
- வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் மத நிகழ்ச்சி ஒன்றுக்காக போடப்பட்ட மேடை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூங்கில் மூலம் போடப்பட்டு இருந்த மேடை பாரம் தாங்க முடியாமல் திடீரென சரிந்து கீழே விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
சம்பவம் நடைபெற்ற கோவிலில் "லட்டு மஹோத்சவம்" என்ற நிகழ்வுக்கு ஜெயின் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, திரளானோர் கோவிலுக்கு வருகை தந்து லட்டு வழங்கி வந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் அருகே மூங்கிலில் மேடை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் ஏறி சென்ற நிலையில், அதிக பாராம் தாங்க முடியாமல் மேடை சரிந்தது.
மேடை சரிந்ததை அடுத்து, காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறு காயங்களுடன் தப்பியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெயின் என்பவர் கூறும் போது, இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதற்காக மேடை அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், பூசாரிகள் லட்டு வழங்க சென்ற போது, மேடை சரிந்து கீழே விழுந்தது. அப்போது நூற்றுக்கும் அதிகமானோர் மேடையில் இருந்தனர், என்று தெரிவித்தார்.
கோவில் நிகழ்வில் மேடை சரிந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மேலும், மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். காயமுற்றோர் விரைந்து குணமடைய முதலமைச்சர் பிரார்த்தனை செய்து கொள்வதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
- இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.
இந்நிலையில் இன்றுடன் முதல் அமிர்த ஸ்நானம் [புனித நீராடல்] முடிவடைந்து நாளை [ஜனவரி 29] மவுனி அமாவாசையையொட்டி 2 ஆம் கட்ட அமிர்த ஸ்நானம் தொடங்குகிறது.
மவுனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படும் இந்த நாளின் முக்கியத்துத்தால் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எனவே நாளை திரிவேணி சங்கமத்தில் நீராட மகா கும்பமேளாவுக்கு லட்சக்கணக்கானோர் இன்றுமுதலே படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்கு வரும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன.
மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
விமான கட்டணங்கள் 300% முதல் 600% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லி-பிரயாக்ராஜ் இடையே விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மகா கும்பமேளாவில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் மொத்தமாக 40 கோடி பேர் வருகை தருவார்கள் என அரசு கணக்கிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- குழந்தை ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
- கூட்ட நெரிசல் காரணமாவே இருவரும் இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
அயோத்தி:
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அங்குள்ள குழந்தை ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த வயது முதிர்ந்த ஆணும், பெண்ணும் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும், மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர்கள் இறந்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாவே அவர்கள் இருவரும் இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர்கள் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மகா கும்பமேளாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
- அந்நிகழ்வில் ஜெய் ஷா தனது ஆண் குழந்தையுடன் கலந்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
இதன்மூலம் 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். அந்நிகழ்வில் அவரது மகன் ஜெய் ஷா தனது ஆண் குழந்தையுடன் கலந்து கொண்டார். கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவிகள் ஜெய் ஷாவின் ஆண் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.






