என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது.
    • உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் 22 வயதான இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 30-ந்தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் காலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், எலும்புகள் முறிந்து இருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    தலித் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்படடு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்காள மாநில ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது. 22 வயது இளம் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் பாஜக இதுவரை மவுனமாக உள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.

    முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?. தலித் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் வேறுவிதமாக பார்க்கிறீர்கள். பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு வாக்குறுதி வெற்று வார்த்தைகளாகவே உள்ளன.

    இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    • பாதி எரிந்த துணி, காலணி, மோதிரம், ஹேர் கிளிப் மற்றும் உள்ளாடைகளை வைத்து உறுதி செய்தனர்.
    • அங்கு மூவரும் பெண்ணை முதலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

    உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் உள்ள பாவனா கிரமத்தில் வசித்து வந்த 21 வயது இளம்பெண் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி காணாமல் போனார். இதுதொடர்பாக போலீஸ் நடத்திய தேடுதலில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து அப்பெண்ணின் மண்டை ஓடு மற்றும் உடல் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] கண்டெடுக்கப்பட்டது.

    பெண்ணின் உடல் எறிந்த நிலையில் இருந்ததால் முதலில் அடையாளம் காணுவதில் சிக்கல் இருந்தது. ஆனால் அது தங்கள் மகள்தான் என பாதி எரிந்த துணி, காலணி, மோதிரம், ஹேர் கிளிப் மற்றும் உள்ளாடைகளை வைத்து பெண்ணின் பெற்றோர் உறுதி செய்தனர். பெண் காணாமல் போன ஜனவரி 21 அன்று கடைசியாக தனது சகோதரியின் கணவர் ஆதிஷ் உடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

    ஆதிஷ் இடம் விசாரணை நடத்தியதில் இருவரும் இடையே 2 வருடங்களாக தகாத உறவு இருந்தது என்று தெரியவந்தது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து அப்பெண் ஆதிஷ் - ஐ தன்னை முறையே ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டியுள்ளார். இதனால் கலக்கமடைந்த ஆதிஷ் தனது இரண்டு சகாக்களுடன் சேர்ந்த பெண்ணை ஒழித்துக்கட்ட திட்டம்தீட்டியுள்ளான்.

    கொலை செலவுக்காக வங்கியில் ரூ.40,000 கடன் வாங்கியுள்ளான். அதில் ரூ.10 ஆயிரத்தை சகாக்களுக்கு அட்வான்ஸ் ஆக கொடுத்துள்ளான். காரியம் முடிந்த பின்னர் மேலும் ரூ.20,000 தருவதாக வாக்கு கொடுத்துள்ளான். தொடர்ந்து பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு ஆதிஷ் அழைத்து வந்துள்ளான். அங்கு மூவரும் பெண்ணை முதலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பின் துப்பட்டாவால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றனர்.

    பிறகு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து ஆதாரத்தை அழித்தனர். பெண்ணின் மற்ற உடைகள் எறிந்த நிலையில் அவரின் கீழ் உள்ளாடை மட்டும் எரியாமல் இருந்ததும், அவரின் அருகே இரண்டு காண்டம் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதும் அவர் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்கின்றன.

    இதுதொடர்பாக பாரதீய நியாய சன்ஹிதா [BNS] கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிந்த போலீசார் ஆதிஷ் -ஐ கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

     

    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கா விட்டால் என்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்.
    • பகவான் ராமர், அன்னை சீதா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 22 வயது தலித் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கண்ணீர் விட்டு அழுதபடி பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அயோத்தியில் ஜனவரி 31 அன்று மாலையில் காணாமல் போன தலித் பெண் அடுத்த நாள் ஒரு வாய்க்கால் அருகே உடலில் துணியின்றி சடலமாக மீட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்தவரின் இரத்தக் கறை படிந்த ஆடைகளும் மீட்கப்பட்டன.

    கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத், "என்னை டெல்லிக்கு செல்ல விடுங்கள். இதை நான் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கா விட்டால் என்னுடைய எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்வேன். பகவான் ராமர், அன்னை சீதா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என்று அழுதபடியே கூறினார்.

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. துக்கம் தாளாமல் அழுது கொண்டிருக்க மற்ற தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயலும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • ஒருவர் தனது மனைவியின் மேக்கப் பையை ஒரு கையில் வைத்திருக்கிறார்.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. இதையொட்டி யமுனை ஆற்றில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில் கும்ப மேளாவுக்கு வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாசி மாலை விற்கும் பெண் தனது காந்த கண்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தார். இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கும்ப மேளாவுக்கு கணவருடன் வந்த ஒரு பெண் கூட்டத்தினரின் மத்தியில் மேக்கப் செய்யும் காட்சிகள் உள்ளது.

    அந்த வீடியோவில், ஒருவர் தனது மனைவியின் மேக்கப் பையை ஒரு கையில் வைத்திருக்கிறார். மற்றொரு கையில் கண்ணாடியை பிடித்திருக்கிறார். இந்த தம்பதியை சுற்றிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்போது அந்த பெண் கணவர் பிடித்திருக்கும் கண்ணாடியை பார்த்து தனது முகத்துக்கு மேக்கப் செய்கிறார்.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.



    • யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.
    • சிறந்த சிகிச்சை அளிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்றவர்களை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.

    மேலும், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் பேசிய அவர், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த ஜனவரி 29-ம் தேதி அதிகாலை மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறு யோகி ஆதித்யநாத் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

    யோகி ஆதித்யநாத் வருகைக்கு முன், உத்தர பிரதேச தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
    • லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே இன்று அதிகாலை கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி போபுரா சௌக் அருகே வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் சத்தம் 3 கி.மீ தூரத்திற்கு கேட்கிறது. உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சத்தத்தை கேட்டு பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

    லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு படையினரால் சம்பவ இடத்தை நெருங்க முடியவில்லை. இதன்பின் சம்பவ இடத்தை நெருங்கிய தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 



    • காபியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து கடந்த 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததுள்ளான்.
    • போக்ஸோ மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி கிரிக்கெட் பயிற்சியாளரால் 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள பாங்கி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள நியூ ஸ்டார் அகாடமிக்கு கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

    அங்கு பயிற்சியாளராக இருந்த நீரஜ் வர்மா, சிறுமிக்கு பயிற்சிக் குறிப்புகள் என்ற பெயரில், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, காபியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து கடந்த 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததுள்ளான்.

    சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோது, கொலை மிரட்டல் விடுத்தும், சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியும் உள்ளான். இதனால் ஒரு கட்டத்த்தில் மனம் நொந்து போன சிறுமி, தைரியத்தை வரவழைத்து தன் குடும்பத்தாரிடம் நடந்ததை கூறினாள். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் பாங்கி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் மீது போக்ஸோ மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கையில் ஏராளமான குச்சிகளை ஏந்தியபடி ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
    • வீடியோ 5 லட்சத்து 33 ஆயிரம் பேரின் விருப்பங்களைப் பெற்று, மேலும் பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.

    மகா கும்பமேளாவில் கூடிய கூட்டத்தினரிடையே பல்துலக்க வேப்பங்குச்சி விற்கும் வாலிபரின் வீடியோ வைரலாகி உள்ளது. கூட்டத்தின் நடுவே கையில் ஏராளமான குச்சிகளை ஏந்தியபடி ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம், ஒருவர் வீடியோ எடுத்தபடி பேச்சுக் கொடுக்கிறார்.

    " பல்துலக்கும் வேப்பங்குச்சிகளை கும்பமேளா கூட்டத்தில் விற்பனை செய்கிறேன். 5 நாளில் ரூ.40 ஆயிரம் சம்பாதித்து உள்ளேன். எனக்கு இந்த யோசனையை எனது காதலி சொன்னாள். முதலீடே தேவையில்லாத தொழில் என்று அவள் கூறினாள். அவளால் நான் இவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன்" என்று புன்னகை பூக்க கூறினார் அவர். இந்த வீடியோ 5 லட்சத்து 33 ஆயிரம் பேரின் விருப்பங்களைப் பெற்று, மேலும் பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.



    • அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
    • இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது போலீசார் கைது செய்தனர்.

    பெண் ஒருவர் 4 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகார் அடிப்படையில் போலீசார் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரதோரை கைது செய்துள்ளனர்.

    ராகேஷ் ரதோர் உத்தர பிரதேச மாநிலம் சித்தாபூர் தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகேஷ் ரதோர் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, போலீஸ் அவரை கைது செய்தனர். அவர் மீது போலீசார் பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இவர் உத்தர பிரதேச மாநில காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். கடந்த 17-ந்தேதி, பெண் ஒருவர் கடந்த நான்கு வருடமாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அரசியல் வாழ்க்கை உருவாக்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்ததாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். போனில் பேசிய ஆதாரங்களை போலீசாரிடம் அந்த பெண் ஒப்படைத்துள்ளார்.

    கடந்த வாரம் அந்த பெண்ணின் கணவர் ஐந்து தனிநபர்களுக்கு எதிரராக தனித்தனியாக புகார் அளித்திருந்தார். அதில் ரதோர் மற்றும் அவரது மகன், தனது குடும்பத்தினரை வழக்கை திரும்பப்பெற வற்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.

    கடந்த 23-ந்தேதி சித்தாபூர் எம்.பி., எம்.எல்.ஏ.-வுக்களுக்கான நீதிமன்றம் ராகேஷ் ரதோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிராஞ்ச் நேற்று ரதோரின் முன்ஜாமின் மனுவை நிராகரித்தது. மேலும், சரணடைய உத்தரவிட்டது.

    ராகேஷ் ரதோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னதாக உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியிலும் பணிபுரிந்துள்ளார்.

    • கர்நாடக மாநில தேர்தலின்போது அவதூறாக பேசியதாக வழக்கு.
    • நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நேரில் ஆஜராகி ஜாமின் பெற்றிருந்தார்.

    கர்நாடக மாநில தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகவும், அவரது பேச்சு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்தியதாகவும், உத்தர பிரதேச மாநிலம் ஹனுமான்கஞ்ச் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. தலைவர் மிஸ்ரா என்பவர் நிதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராக காரணத்தினால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர் பிப்ரவரி 2024-ல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஜூலை 26-ந்தேதி வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து 50 ரூபாய் உடன் இரண்டு பேர் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது.

    இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், ராகுல் காந்தி சார்பில் ஆஜராகக்கூடிய வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா, தனக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என தெரிவித்து அதற்கான சான்றிதழும் வழங்கியிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 11-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதி வர்மா உத்தரவிட்டார். மிஸ்ரா சார்பில் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே ஆஜரானார்.

    இது வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதி என ராகுல் காந்தி தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கும்பமேளா பகுதியில் அனைத்து வாகனங்கள் நுழைய தடை.
    • கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்க ஏற்பாடு.

    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளா நெரிசலில் சிக்கி நேற்று 30 பேர் பரிதாபமாக இறந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    அதன்படி கும்பமேளா பகுதியில் அனைத்து வாகனங்களும் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் பிப்ரவரி 4-ந் தேதி வரை மாவட்ட எல்லையிலேயே நிறுத்தப் பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வி.வி.ஐ.பி. பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிறுத்தங்களை தவிர்க்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


    தெருவோர வியாபாரிகளை காலி இடங்களுக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கும்பமேளா பகுதியில் ரோந்து பணியை அதிகரிக்கவும், அயோத்தி-பிரயாக்ராஜ், கான்பூர்-பிரயாக்ராஜ், பதேபூர்-பிரயாக்ராஜ், லக்னோ-பிரதாப்கர்-பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி-பிரயாக்ராஜ் போன்ற வழித்தடங்களில் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்யவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையாக உணவும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கும்பமேளா பகுதியில் சரியான வாகன நிறுத்து மிடத்தை உறுதி செய்யவும் தடுப்புகளை முறையாக பயன்படுத்தவும் அதிகாரி களுக்கு முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    புனித நீராடி ஊர் திரும்பும் பக்தர்களுக்கு கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 3-ந்தேதி வசந்த பஞ்சமியை முன்னிட்டு அமிர்த ஸ்னான் (அரச குளியல்) நடைபெற உள்ளதால் (வியாழக்கிழமை) கும்பமேளாவின் ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் இயக்குநருக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.

    • டி.ஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார்.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் நேற்று (புதன்கிழமை) அதிகாலை மகா கும்பமேளாவின் சங்கம் பகுதியில் குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகை தந்ததை அடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.

    நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்த நிலையில், பல மணி நேரம் கழித்து, மகா கும்பமேளாவின் டி.ஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார்.

    "ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரித்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது. மேலும், கூட்டத்தினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபுறம் குதித்து, அங்கிருந்தவர்களையும் நசுக்கியது. கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் உயிரிழந்தனர்," என்று அவர் கூறினார்.

    உயிரிழந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார். அவர்களில் நான்கு பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் அசாம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மீதமுள்ளவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கிட்டத்தட்ட ஏழரை கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று (புதன்கிழமை) நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெரிசலில் தங்கள் குடும்ப உறவுகளை இழந்த பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, இந்த சோகம் "மிகவும் வருத்தமளிக்கிறது" என்று விவரித்தார்.

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கூட்ட நெரிசலுக்கான காரணங்களை ஆராய நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் டி.ஜி. வி.கே. குப்தா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். வி.கே. சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை நியமித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    ×