என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
    • பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.

    சென்னை:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

    பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.

    பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    • அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    • நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்'-க்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும். நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளார். 

    • நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
    • போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

    பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது.

    மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய 2 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு இந்த போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று மாலை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

    • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வர்த்தக தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இதற்கிடையே பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏவுகணை சோதனையை நடத்தியதால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த சூழலில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. அதில் பாதுகாப்பு ஒத்திகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், அணுமின் நிலையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பு உளவியல் ரீதியாக எதிா்வரும் சூழ்நிலைகளுக்கு பொதுமக்களை தயார்படுத்தும் விதமாகவே இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த மத்திய அரசு தீா்மானித்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும் என்ற சூழலில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியை இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.

    நேற்று மோடியை அஜித் தோவல் சந்தித்திருந்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பாதுகாப்பு ஒத்திகை, பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2 முறை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது.

    இந்த நிலையில் தமிழகத்தில் நாளை சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெறும். நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த ஒத்திகை நடைபெறும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    • 7ஆவது முறையாக திமுகவே ஆட்சியமைக்கும்.
    • இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆட்சி திமுக ஆட்சிதான்.

    மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணையும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது தலைமையினான திமுக அரசு பதவியேற்று நாளை 5ஆம் ஆண்டு தொடங்குகிறது. 7ஆவது முறையாக திமுகவே ஆட்சியமைக்கும். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆட்சி, ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும் ஆட்சி திமுக ஆட்சிதான்.

    நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர். அரசியலுக்கு அரிச்சுவடே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர்.. என்று பேசக்கூடிய நிலைதான் உள்ளது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    • மாநாட்டை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தால் நடவடிக்கை.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 11ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1. FL2. FL3. FL3A. FL3AA, மற்றும் FL11) மூடப்பட்டிருக்கும் என்றுதெரிவிக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் FL1. FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிம நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துக் கொள்கிறார்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி விடுமுறை அறிவிப்பு.
    • அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.

    கரூர் மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.

    • இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 1,000 ரூபாய் உயர்ந்தது.
    • இன்று 2-வது முறையாக தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,200-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்நது ஒரு கிராம் ரூ.8,900-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025-க்கும் சவரனுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,200-க்கும் விற்பனையானது. தற்போது மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.72,800-க்கும் ஒரு கிராம் ரூ.9100 -க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்நது ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-05-2025- ஒரு கிராம் ரூ.108

    04-05-2025- ஒரு கிராம் ரூ.108

    03-05-2025- ஒரு கிராம் ரூ.108

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    01-05-2025- ஒரு கிராம் ரூ.109

    • தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை.
    • அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும்.

    தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோடை வெயில் எதிரொலியின் காரணமாக கேன் வாட்டர் விற்பனை என்பது அதிகரித்துள்ள நிலையில் கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முழுமையாக பின்பற்றுமாறும், அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதே போல் கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியத்தின் அளவை 1 லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவிலும் கடைபிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது.

    குடிநீர் கேன்கள் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும் எனவும் கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து அவ்வாறு செய்யும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான் துளசியை சேர்ந்தவர் மேத்தா கிரிரெட்டி. இவர் வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் ஒரே காரில் காட்பாடிக்கு வந்தனர்.

    ஓடை பிள்ளையார் கோவில் அருகே மெயின் ரோட்டை ஒட்டி உள்ள மேத்தா கிரிரெட்டி அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்தது.

    பின்னர் காலை 7.30 மணிக்கு தொண்டான்துளசியில் உள்ள மேத்தா கிரிரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

    • எனதருமை தமிழ்நாட்டு மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை.
    • இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.

    அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  எக்ஸ் பக்க பதவியில் கூறியிருப்பதாவது:-

    தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்!

    நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி!

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்:

    * தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை

    * திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு.

    * வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை

    * கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை.

    * புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு.

    நாளையோடு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

    இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி.

    ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில்தான் நாம் வாழ்கிறோம்.

    ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு ஸ்டாலின் வருவார் பாருங்களேன்...!

    "The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!

    "எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை" என்று சட்டப்பேரவையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது.

    "ஆக, குற்றவாளிகள் கைது" என்று சொல்வீர்களே- அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் .

    எனதருமை தமிழ்நாட்டு மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.

    2026-ல் #ByeByeStalin என்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்! தமிழ்நாடு உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார்.
    • கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பட்டுக்கோட்டை:

    மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மாநகர பா.ஜ.க. துணை தலைவராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் பிரச்சனை ஏற்படவே சரண்யா 2-வது கணவரிடம் இருந்து பிரிந்தார்.

    பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 3-வதாக சரண்யா திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.

    வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.

    பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று மதியம் சரணடைந்தனர்.

    கொலையுண்ட சரண்யாவின் கணவர் பாலன் மகன் கபிலன் ஆவார். இவருக்கு சொத்துக்களை பிரித்து தர சரண்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விரோதத்தில் சரண்யா கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×