என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது.
- வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார்.
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் முடிவடைந்தது.
சுற்றுப்பயணம், 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரம் நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை 2-ம் கட்ட பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
அதன்படி, வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார். புதுக்கோட்டையில் தொடங்கும் சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
- ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஈரோடு திண்டல் மலையில் வேலாயுத சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைதுறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு 186 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு திருக்கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து நடைபெறாத எண்ணிக்கையில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
மன்னர் ஆட்சி காலத்தை விட திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெறும்.
இந்த ஆக்கபூர்வமான பணிக்கு துறையின் சார்பில் கேட்கப்படும் நிதிகள் வழங்கப்படுகிறது. இதுவரை 1,120கோடி ரூபாய் அரசிடம் இருந்து மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
பழனி இரண்டாம் கட்ட திருப்பணிக்கு ரூ. 58 கோடி அரசே வழங்கி 54 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு பெரு திட்டத்தின் கீழ் ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் செப்டம்பர், நவம்பர் மாதம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
திருத்தணி கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு மாற்று பாதை உருவாக்க ரூ. 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான சாமிமலைக்கு 100 படிகள் இருப்பதால் படி ஏறும் பக்தர்கள் சிரமம் கருதி மின் தூக்கி அமைக்கவும், மருதலை கோவிலும் படி கட்டுகள் இருப்பதால் மின் தூக்கி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆட்சியில் அனைத்து சைணவம், வைணவம் கடவுளுக்கும் சிறப்பு சேர்ப்பதுடன் முருகனுக்கு மாநாடு நடத்தி பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.
ஆசியாவில் மிக உயரமான 186 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் ஈரோடு திண்டல் கோவிலில் அமைக்கப்பட்ட உள்ளது.
உலக அளவிலான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காலம் கடந்து நிற்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிலை அமைக்கப்படும்.
இந்த ஆட்சியில் மட்டும் 1,400கோடி ரூபாய் வரை உபயதாரர்கள் நிதி வந்துள்ளது,
கடந்த எந்த ஆட்சியில் இதுபோன்ற உபயதாரர்கள் நிதி வந்ததில்லை. உபயதாரர்கள் நிதி பயன்படுத்தப்பட வில்லை. இந்த ஆட்சியில் அனுமதி அளித்ததால் உபயதாரர்கள் நிதி வழங்க அதிகமாக முன் வந்தனர்.
இந்த ஆட்சியில் உபயதாரர்கள் நிதி எண்ணத்திற்கு ஏற்ப திருப்பணிகள் செலவு செய்யப்படுகிறது. மனம், எண்ணம் நிறைவடைந்ததால் உபயதாரர்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது அ.தி.மு.க.
- ரும் சட்டசபை தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள்.
திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
* இ.பி.எஸ். போல் அமித்ஷா வீட்டு கதவை திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க.
* அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலயத்தின் கதவையோ தட்டாமல் மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க.
* எடப்பாடி பழனிசாமி ஓடி ஒளிந்து பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்த நிலையில் அதில் ஒற்றுமை இல்லாத சூழல் உள்ளது.
* அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது அ.தி.மு.க.
* கோவில் பணத்தில் கல்லூரி கட்டலாமா எனக்கேட்டு முழு சங்கியாகவே எடப்பாடி பழனிசாமி மாறி விட்டார்.
* வரும் சட்டசபை தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள்.
* தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பாதை போட்டு கொடுக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
* தேர்தல் களத்தில் தி.மு.க. முந்துவதால் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் வந்துவிட்டது.
* எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் வெள்ளை வேட்டி சட்டையில் தொடங்கி காவி நிறத்திற்கு மாறி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது.
திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
* சில கட்சிகளில் இன்னும் பூத் ஏஜெண்டே போட முடியாத நிலை உள்ளது.
* பூத் முகவர்கள் பயிற்சி கூட்டத்தையே மாநாடு போல நடத்தி உள்ளோம்.
* பூத் முகவர்கள்தான் கட்சியின் ரத்த நாளங்கள்.
* பா.ஜ.க. ஆட்சி என்பது பாசிச ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி என்பது அடிமை மாடல் ஆட்சி.
* அரசின் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.
* பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் புதுமைப்பெண் திட்டம்.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்.
- வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். இந்த நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
இந்நிலையில், தன் பிறந்தநாளை ஒட்டி, தான் எழுதிய நூலை கலைஞர் நினைவிடத்தில் வைத்து கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோவை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
முத்தமிழறிஞரே!
முதல் தமிழாசானே!
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
உங்கள்
நினைவிடம் சேர்க்கிறேன்;
நெஞ்சு நிறைகிறேன்
அப்பாவின் சட்டையை
அணிந்துகொள்ள ஆசைப்படும்
குழந்தையைப்போல
நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு
நானும் எழுதியிருக்கிறேன்
உரையாசிரியர் பட்டியலில்
சேர்வதைவிட
உங்கள் வரிசையில் சேர்வதில்
உள்ளம் கசிகிறேன்
வணங்குகிறேன்;
என் பிறந்தநாளில்
வாழ்த்துங்கள் என்னை
என்று பதிவிட்டுள்ளார்.
- சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது.
- ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.
இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நேரில் ஆய்வு செய்தார்.
- ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன.
- பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை.
ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன. இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் - கற்பித்தல் என்பது கலந்துரையாடலாக அமையும் என்பவை சாதகமான அம்சங்கள்.
எனினும், பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது; வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையை பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்; மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம். புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் தி.மு.க.வின் பாதை தெளிவானது.
- மக்களின் பேராதரவு பெற்ற திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' கூட்டம் மூலம் நிர்வாகிகளுக்கு வழங்கி உள்ள அறிவுரை வருமாறு:-
பொதுமக்களுக்கான அரசாகத் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டுகளாகப் பாடுபட்ட கழகத் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான், முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒரு போதும் மறந்ததில்லை. மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல, கழகத்தினரின் மனக்குரலை அறிந்து கொள்வதற்காகத் தான் அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
'உடன்பிறப்பே வா' எனும் கழக நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அதில் பங்கேற்ற ஒவ்வொரு தொகுதியின் நகர-ஒன்றிய-பகுதி-பேரூர் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். அவர்களின் உணர்வுப்பூர்வமான அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்ததை கண்டு கழகத் தலைவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தையும் கழகத் தலைவர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ் நாட்டில் இடமில்லை என்ப தை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது.
தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் தி.மு.க.வின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள்-அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது "ஓரணியில் தமிழ்நாடு" இதில், இதுவரை 77,34,937 பேர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன்பிறப்பே வா! எனும் தலைப்பில் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுக்கு உற்சாகமூட்டி, புத்தகங்கள் வழங்கி தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அதில், தலைவருடனான பல பழைய பசுமையான நினைவுகளை நிர்வாகிகள் நினைவுப்படுத்தி மகிழ்ந்தார்கள்.
மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் கழக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிந்தார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்து கொள்ளும் அளவிற்கு தாங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கி வருகிறார். விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
மக்களின் பேராதரவு பெற்ற திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித சுணக்கமுமின்றி பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியபோது, முதலில் அவர்களின் சொந்த தொழில், விவசாயப் பணிகள், குடும்ப நிலவரங்கள், அவர்களது வேலைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியது என்பது, நிர்வாகிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், அவர்கள் பகுதிகளில் உள்ள பொதுநல கோரிக்கைகளான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர் மக்களை நிர்வாகிகளின் முன்னிலையிலேயே தொடர்பு கொண்டு பல கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
- தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
- சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சரக்கு ரெயிலின் 52 பெட்டிகளில் 10 டேங்கர்கள் தீப்பற்றி எரிந்து சேதமானது. காலை 5 மணிக்கு தீப்பற்றிய நிலையில் தற்போது வரை தீப்பற்றி எரிந்து வருகிறது. சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீயில் 70 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரெயிலின் டேங்கர்களை பிரித்தெடுக்கும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. தீ பரவுவதை தடுக்கும் வகையில் சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ அருகே உள்ள நிலங்களில் பரவாமல் தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பட்டதாரிகளின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் பொறுப்பின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
- தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 642 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இளநிலை கல்வியியல் (பி.எட்) பட்டம் பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு மேலாகியும் தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. பட்டதாரிகளின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் பொறுப்பின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அதன் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 180 நாள்களுக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டு, அடுத்த சில வாரங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பி.எட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை எந்த சான்றிதழும் வழங்கப்படவில்லை. அதனால், பி.எட் பட்டம் பெற்று ஓராண்டுக்கு மேலாகியும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை.
தமிழக அரசு பள்ளிகளில் 1996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை கடந்த 10-ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்தப் பணிக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்களின் நகல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் ஆகஸ்ட் 12-ஆம் நாள் கடைசி நாளாகும்.
ஆனால், அதற்குள்ளாக புதிய பி.எட். பட்டதாரிகளுக்கு தற்காலிக பட்டச் சான்றுகளும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், கடந்த ஆண்டில் பி.எட். தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதி பெற்ற 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பதவிகள் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடப்பது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளில் பொறுப்பு அதிகாரிகளாக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் போதிலும், அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாததால் இதுவரை சான்றிதழ்களை வழங்க முடியவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் அவ்வப்போது குறைந்த எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். உரிய காலத்தில் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களையும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்களையும் வழங்காததன் மூலம் அந்த பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் பி.எட் பட்டதாரிகளை பங்கேற்க விடாமல் தடுக்கிறது திமுக அரசு. அவர்களின் வாழ்க்கையுடன் திமுக அரசு விளையாடுவதை அனுமதிக்க முடியாது.
அரிதிலும் அரிதாக நடத்தப்படும் ஆசிரியர் பணிக்கான தேர்வுகளில் பங்கேற்க புதிய பி.எட் பட்டதாரிகள் அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அடுத்த இரு வாரங்களில் புதிய பி.எட் பட்டதாரிகளுக்கு தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படுவதை தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது. ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டார பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. விண்ணை முட்டும் புகையுடன் தீ தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் காற்றில் PM2.5 13.6 வரை நுண் துகள்கள் கலந்துள்ளன. எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. இதனால் திருவள்ளூரில் காற்றின் தரம் குறைந்து மாசு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று மாலையில் தீ அணைக்கப்பட்டாலும் காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் நீங்கி சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதற்கு 2 நாட்கள் வரையில் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?
- ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.
சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சி.பி.ஐ. என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைப்பாவையாக உள்ளது.
* அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு?
* சாத்தான்குளம் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்?
* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு அவமானம் என்றால் அஜித்குமார் கொலை வழக்கு அவமானம் இல்லையா?
* ஆட்சி முடிவதற்குள் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களுடன் நின்று சரி செய்ய வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






