என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ராஜீவ் காந்தி மருத்துவமனை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ராஜீவ் காந்தி மருத்துவமனை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
- காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
- கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.
அத்திட்டங்களில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "நான் முதல்வன் திட்டம்", "கலைஞர் கனவு இல்லம் திட்டம்" ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவ - மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உள்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.
'நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் என்ஜினீயரிங் மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த 3 திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றிகண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
- குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
சென்னை :
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில் வளர்ந்து வந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்.
- ஆம்ஸ்ட்ராங் மறைவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
சென்னை :
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில் வளர்ந்து வந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர். அம்பேத்கர், கன்ஷிராம் ஆகியோரின் கொள்கைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பட்டியலின மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொண்டவர். என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டவர். அவரது மறைவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சென்னையில் நேற்றிரவு கிட்டத்தட்ட 5 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.
- கடந்த ஒரு வாரத்திலேயே சென்னையில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை குளிர்ந்து.
இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு கிட்டத்தட்ட 5 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதீப்ஜானின் எக்ஸ் தள பதிவில், "ஜூலை மாதத்தில் சென்னையில் சராசரியாக 10 சென்டிமீட்டர் மழை பெய்யும் நிலையில், கடந்த ஒரு வாரத்திலேயே சென்னையில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்துள்ள நிலையில், ஜூலை மாதமும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
- கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதனையடுத்து வழியால் துடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குற்கு முன்பாகவே உயிரிழந்தார்.
ஆம்ஸ்டராங்கை வெட்டிக் கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்தாண்டு நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
- தென் ஆபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
- வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்ற மகளிர் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வுல்வார்ட்- டன்ஸிம் பிரிட்ஸ் ஜோடி முதல் 7 ஓவரில் 50 ரன்கள் விளாசியது.

தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சார்பில் முதலில் களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. 10 வது ஓவருக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தினர்.

வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார். ஆனால் கடைசி ஓவரில் 190 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்த போதிலும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.

- இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
- சென்னை பெரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூரில் வசித்து ஆம்ஸ்ட்ராங், இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் நிலைதடுமாறி அங்கேயே கீழே விழுந்தார். இதை பார்த்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
மர்ம நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மரண செய்தியை கேட்டு பா.ரஞ்சித் கதறி அழுத செய்தி வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்த இயக்குநர் பா.ரஞ்சித் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
- அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு கடும் கண்டனம்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்."
"திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி. மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."
"ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்."
"திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு.
முக ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மர்மநபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
- கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரிணை.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் நிலைதடுமாறி அங்கேயே கீழே விழுந்தார். இதை பார்த்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மர்ம நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், தப்பி சென்ற கொலையாளிகளை தேடும் பணிகளை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய கோவை 142 ரன்களை எடுத்தது.
சேலம்:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் ஆன சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும் போட்டி நடைபெறுகிறது.
- இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது.
நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.
சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.
இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், சேப்பாக் கில்லீஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.






