search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayavati"

    • கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதனையடுத்து வழியால் துடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குற்கு முன்பாகவே உயிரிழந்தார்.

    ஆம்ஸ்டராங்கை வெட்டிக் கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் கடந்தாண்டு நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

    • குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்.
    • அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைச் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

    அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை - எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

    அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆம்ஸ்ட்ராங், மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர்.
    • மருத்துவர் அய்யா அவர்கள் தான் பட்டியலின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர் என்பதையும் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார்

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு மாநிலங்களவை உறுப்பினரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் இரங்களும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர். அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.

    மருத்துவர் அய்யா அவர்களின் நண்பரான கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பட்டியலின மக்களுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் தொடக்க காலம் முதல் மேற்கொண்ட பணிகளை நன்றியுடன் அடிக்கடி நினைவு கூறும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் தான் பட்டியலின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர் என்பதையும் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கரின் சிலைகளை தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் திறந்த தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பதால் அவர் மீது தாம் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் பல இடங்களில் பேசியுள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டியவர். வயதில் மிகவும் இளையவரான அவர், தமிழக அரசியலில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். தொடர்வண்டி தொழிற்சங்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் என்னுடன் ஒன்றாக கலந்து கொண்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அப்படிப்பட்டவர் திடீரென ஒரு நாள் மாலைப் பொழுதில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவு வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.

    ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அப்படிப்பட்ட ஒருவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது.

    கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே அப்பொறுப்பில் இருப்பதும், அவரைச் சுற்றியுள்ள சக்திகள் தான் முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்கின்றன என்பதும் தான் நிலைமை மோசமடைவதற்கு காரணமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆர்ம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டது மிகமிக கண்டிக்கத்தக்கது.
    • குற்றவாளிகளை ஆளும் அரசு தண்டிக்க வேண்டும்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதனையடுத்து வழியால் துடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குற்கு முன்பாகவே உயிரிழந்தார்.

    படுகொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டது மிகமிக கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞரான அவர், தமிழ்நாட்டின் வலிமையான தலித் குரலாக அறியப்பட்டார். குற்றவாளிகளை ஆளும் அரசு தண்டிக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், கவிஞராகவும் விளங்கியவர்.
    • 1848-ம் ஆண்டு சாவித்திரி பாய் தன் கணவரின் துணையோடு ஆசிரியர் பயிற்சி பெற்று புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் தலைமையாசிரியராக பணியாற்றினார்.

    பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பெண்களுக்கு கல்வி வழங்கிய கல்வித் தாயுமான சாவித்ரிபாய் புலே ஆவார். அவரது பெயரை பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி தமிழ்நாடு மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தம்பதியரின் பெண் குழந்தைக்கு பௌத்தர்களின் புனித நாளான புத்த பூர்ணிமா தினத்தில் சாவித்திரிபாய் என்று பெயர் சூட்டினார்.

    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், கவிஞராகவும் விளங்கியவர். 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் பிறந்த இவர் பாபாசாஹேப் அம்பேத் கர் சமூக மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட மிக முக்கிய காரணமாக இருந்த மகாத்மா ஜோதிராவ் புலேவின் மனைவியாவார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவுக்கு அருகிலுள்ள பிடெவாடாவில் 1848-ம் ஆண்டு தன் கணவரோடு சேர்ந்து நிறுவியவர்.

    1848-ம் ஆண்டு சாவித்திரி பாய் தன் கணவரின் துணையோடு ஆசிரியர் பயிற்சி பெற்று புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் தலைமையாசிரியராக பணியாற்றினார். சாவித்திரி பாய் மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் கல்வி பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதியவாதிகள் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதை கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், சாணத்தையும், அழுகிய காய்கறிகளையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். இதனால் அவர், தினமும் பள்ளி செல்லும் போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்ற பின் மாற்று சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் அவர் கல்வி பணியாற்றினார். சாவித்திரிபாயின் தொடர் கல்விப்பணியால் இவர் நடத்தும் பள்ளிகளில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயின்றனர். மேலும் இவரும் இவரது கணவரும் விடாமுயற்சியுடன் 18 பள்ளிகளை நிறுவினர்.

    விதவை திருமணங்களை ஆதரித்த இவர் விதவை பெண்களின் தலையை மொட்டையடிப்பதை கண்டித்து நாவிதர்களைத் திரட்டி, 1863 -ம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார். 1870 -ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்காக உறைவிட பள்ளியை நடத்தினார். பெண் சிசுகொலைகளை கடுமையாக எதிர்த்தார். மகிளா சேவா மணடலத்தை நிறுவி பெண்களுக்காக தொடர்ந்து பணியாற்றினார்.

    இவர் காவியா புலே, பவன் காசி சுபோத் ரத்னாகர் என்னும் நூல்களை எழுதியுள்ளார். Go, Get education என்னும் கவிதையை கல்வியை நோக்கி அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் எழுதியுள்ளார். சமூகம், பெண்ணியம், கல்வி என பல்வேறு தளங்களில் பணியாற்றிய பெண்போராளியாக இந்திய வரலாற்றில் முதன்மையான இடத்தை பிடித்த இவர் தனது 66- வது வயதில் காலமானார். புனேவில் இவரது நினைவாக மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. புனே மாநகராட்சி 1983 - ம் ஆண்டு இவரது நினைவகத்தை புனேவில் நிறுவியது. 1998 -ம் ஆண்டு இந்திய அரசு இவரது அஞ்சல் தலையை வெளியிட்டது. 2015-ம் ஆண்டு 411 ஏக்கர் பரப்பளவுள்ள புனே பல்கலைக்கழகம் சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் என்று பெயர்மாற்றம் செய்யப் பட்டது. 2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அவரது 188-வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக தேடு பொறியில் அவரது படத்தை வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி யில் முதல் - அமைச்சராக இருந்த பெஹன்ஜி மாயாவதி சாவித்திரிபாய் புலே சிக்க்ஷா மதாத் யோஜனா திட்டத்தின் கீழ் 6,86,953 10 - ம் வகுப்பு மாணவிகளுக்கு மிதி வண்டியும் உதவித்தொகையாக 15000 ரூபாயும் வழங்கினார். மேலும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 10000 வழங்கினார் என்பது குறிப் பிடத்தக்கது. பெயர் சூட்டு விழாவில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தின் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×