என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
- மூன்றடைப்பு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
களக்காடு:
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதனை நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த சுடலை மகன் மகேஷ் (வயது 20) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இன்று அதிகாலையில் அந்த மினிலாரி நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு நான்குவழி சாலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மூன்றடைப்பு பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி கண்ணாடி உடைந்தது. அதே நேரத்தில், மினிலாரியின் முன்பக்க பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மினி லாரி டிரைவரான மகேஷ், முதலை குளத்தை சேர்ந்த உசிலவேல் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மூன்றடைப்பு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களையும் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக ரெயில்வே மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் ரெயில்வே மேம்பால சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் மட்டும் நான்குவழிச்சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு 2 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தான் விபத்து நடந்துள்ளது.
திருவனந்தபுரத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி டிரைவர் சற்று கண் அயர்ந்து இருக்கலாம். அதனால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தி.மு.க. தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் 11 மணிக்கு நடக்கிறது.
- தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்ககொள்ளப்பட்டுள்ளனர்.
28-ந்தேதி தி.மு.க.வின் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்/ DMK Constituency visitors Consultative Meeting held oct 28தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 28.10.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநாட்டிற்கு நாளை ஒரு நாளே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
விழுப்புரம்:
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விறுவிறுப்பான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து திரளும் தொண்டர்கள் என தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்த அரசியல் மாநாட்டில் தான் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச இருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச இருக்கிறார். 2026-ம் ஆண்டு தனது அரசியல் பாதை என்ன? கூட்டணியா, தனித்தா? என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் தான் விஜய் தெளிவுபடுத்த இருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இன்றைக்கு விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கியே வருகிறார்கள்.
மாநாட்டிற்கு நாளை ஒரு நாளே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திடலில் தொண்டர்கள் அமர்வதற்கு 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. 4 பகுதியாக பிரிக்கப்பட்டு இந்த இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுதிறனாளிகளுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநாடு மைதானத்தில் தமிழன்னை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் மற்றும் சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள், அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர், கட்சித் தலைவர் விஜய் ஆகியோரது கட் அவுட்கள் மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டிற்கு வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் 10 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மாநாடு திடலில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பவர்கள் நலனுக்காக கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெறும் என்றார்.
- 2024-25ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று, 1889-ல் நூறு ஆண்டுகள் ஆகியிருந்தன.
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 'கனவு ஆசிரியர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆன்லைன் தேர்வு மூலம் இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
2024-25ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி ஃபிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். 28-ந்தேதி வரை சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று, 1889-ல் நூறு ஆண்டுகள் ஆகியிருந்தன. அந்த நூற்றாண்டைக் கொண்டாட பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டதுதான் ஈஃபிள் கோபுரம். உலகம் போற்றும் இந்த இரும்புக் கோபுரத்தை "கனவு ஆசிரியர்" பெருமக்களோடு இணைந்து பார்வையிட்டோம் என்று பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
- 'மைக்' சரியாக வேலை செய்யவில்லை.
- தேவையில்லாமல் மீண்டும் ஏதும் பிரச்சனையை கிளப்பி விடாதீர்கள்.
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளித்தபோது, தவறாகப் பாடப்படவில்லை. 'டெக்னிக்கல்' தவறு தான் 'மைக்' சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு மூன்று இடத்தில் அவங்க பாடும்போது குரல் கேட்கவில்லை.
அதனால் மறுபடியும் மீண்டும் முதலில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி இருக்கிறோம். அது முடிந்ததும் தேசிய கீதமும் ஒழுங்காக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் ஏதும் பிரச்சனையை கிளப்பி விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
திராவிட மாடல் அரசின் முன்னெடுப்பில் ஒன்றான 'தமிழ்நாடு சி.எம். பெலோஷிப் புரோக்ராம்' முதல் 'பேட்ஜ்' நிறைவு செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி உள்ளோம்.
2022-ம் ஆண்டு முதல் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் வருடந்தோறும் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேரில், 'கோர்சை' நிறைவு செய்த 19 பேருக்கு இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது இளைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
- தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.
சென்னை:
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதை பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.
'கண்டமிதில்' என்பதற்கு பதிலாக 'கண்டமதில்' என பாடி விட்டனர்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் அதை மீண்டும் பாடும்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் சொன்னார். அதனை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது.
அப்போது பாடல் வரியில் 'புகழ்' மணக்க என்பதை 'திகழ்'மணக்க என்று மீண்டும் பிழையுடன் பாடினார்கள்.
இதையறிந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை ஓரக்கண்ணால் பார்த்தார். பாடல் பாடி முடித்ததும் அதை பெரிதுப்படுத்தாமல் விட்டு விட்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நிருபர்கள் சந்தித்து பேசினார்.
- அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு இத்தீர்ப்பு பெரும் பாடம் ஆகும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி போதை தரும் மதுவை உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு இத்தீர்ப்பு பெரும் பாடம் ஆகும்.
''தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலின் தன்மை மாறுபட்டதாக இருந்தாலும் கூட, அடிப்படையில் அதுவும் போதை தரும் மது வகை தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள மாநிலப் பட்டியலில் எட்டாவது அம்சமாக போதை தரும் மது இடம்பெற்றுள்ளது. அதில் போதை தரும் மது வகைகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளன. இதில் தலையிட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுகுறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை'' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவை எதையும் புரிந்து கொள்ளாமல்,''தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. இந்தியா முழுவதும் மது விலக்கை மத்திய அரசு கொண்டு வந்தால், அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்'' என்று கூறி வருகின்றனர்.
மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இனியும் மத்திய அரசைக் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கூட்டணி கட்சி தலைவர்களே தி.மு.க. அரசை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
- குடும்ப உறுப்பினர்கள் தான் திமுகவில் ஆட்சி அதிகாரத்திற்குள் வர முடியும்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* கூட்டணி பலம் இல்லை, பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை என்றாலும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது.
* கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இந்தாண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு சதவீத கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது.
* அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளதாக முதலமைச்சர் எந்த அடிப்படையில் பேசினார்.
* பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது.
* தமிழ்நாட்டில் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை, திமுகவின் செல்வாக்கு தான் குறைந்துள்ளது.
* கூட்டணியை நம்பித்தான் திமுக அரசு உள்ளது. ஆனால் அதிமுக யாரை நம்பியும் இல்லை.
* ஊடகமும், பத்திரிகையும், கூட்டணியும் தான் திமுகவை தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றன.
* கூட்டணியை நம்பி மட்டும் திமுக தேர்தலை சந்திக்கின்றது. தாங்கள் செய்த சாதனைகளை நம்பி திமுக தேர்தலில் நிற்கவில்லை.
* கூட்டணி பலத்தால் தான் வெற்றி பெற்றதாக முதலமைச்சரே பேசி உள்ளார்.
* கூட்டணி கட்சி தலைவர்களே தி.மு.க. அரசை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
* கூட்டணியினரே விமர்ச்சிக்கிறார்கள் என்றால் அந்த கூட்டணியில் விரிசல் என்று தானே அர்த்தம்.
* 41 மாத திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
* திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.
* இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
* திமுக என்பது கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் தான் திமுகவில் ஆட்சி அதிகாரத்திற்குள் வர முடியும்.
* திமுகவில் மன்னராட்சியை போன்று இளவரசர்களுக்கு முடி சூட்டப்படும்.
* அதிமுக இருக்கும்வரை உதயநிதிக்கு முடிசூட்ட வேண்டும் என்ற கனவு பலிக்காது.
* ஸ்டாலினுடன் மிசாவில் கைதானவர்களுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை? குடும்ப உறுப்பினர் என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி.
* அடிப்படை கட்டமைப்பு கொண்ட கட்சி என்றால் அ.தி.மு.க. தான்
* 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதலாக வாக்குகளை பெற உழைக்க வேண்டும்.
* ஜோசியம் பலிக்கும், 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றார்.
இதனிடையே, எடப்பாடிக்கு ஆளுமை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஆளுமை இருந்ததால் தான் 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- மருத்துவ இடங்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்டு 21 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.
- இறுதி கட்ட கவுன்சிலிங் முடிவு வருகிற 29-ந் தேதி வெளியாகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வு குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது.
மருத்துவ இடங்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்டு 21 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நிரப்படாமல் இருக்கும் இடங்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. 3-ம் சுற்று கலந்தாய்வு கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி அதற்கான முடிவுகள் அக்டோபர் 18-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஒரே நேரத்தில் நடத்தப்படும் இறுதிக்கட்ட கவுன்சிலிங்கில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை சுயநிதி மருத்துவ கல்லூரிக்கு நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 50 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அகில இந்திய கவுன்சிலிங்படி அகில இந்திய ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் 677 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. பி.டி..எஸ். பிரிவில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 391 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இறுதி கட்ட கவுன்சிலிங் முடிவு வருகிற 29-ந் தேதி வெளியாகிறது.
- கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
- போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நாளை மறுநாள் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் இருபுறமும் தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். 2 நாட்களில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விரைவில் வெளிவரவிருக்கிற அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
- இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள 'அலங்கு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு சங்கமித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விரைவில் வெளிவரவிருக்கிற 'அலங்கு' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
அய்யா ஜெயாராவ் மகன் ஜான்சன் திருமணம் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், அலங்கு படத்தின் நாயகன் தம்பி குணாநிதி அவர்களையும் படத்தின் தயாரிப்பாளர் சகோதரி சங்கமித்ரா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம் என்று தெரிவித்துள்ளார்.
- காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது.
- கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. உடனடியாக நியாய விலை கடைகளில் இருக்கின்ற ஊழியர்களுக்கு அவர்கள் கேட்கிற கோரிக்கையை நிறைவேற்றி, தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் தருணத்தில் அவர்களுடைய கோரிக்கையை செவி சாய்த்து உடனடியாக அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






