'அலங்கு' திரைப்படம்- அன்புமணி மகளுக்கு வன்னி அரசு வாழ்த்து

விரைவில் வெளிவரவிருக்கிற அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம்.
'அலங்கு' திரைப்படம்- அன்புமணி மகளுக்கு வன்னி அரசு வாழ்த்து
Published on

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள 'அலங்கு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு சங்கமித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

விரைவில் வெளிவரவிருக்கிற 'அலங்கு' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

அய்யா ஜெயாராவ் மகன் ஜான்சன் திருமணம் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், அலங்கு படத்தின் நாயகன் தம்பி குணாநிதி அவர்களையும் படத்தின் தயாரிப்பாளர் சகோதரி சங்கமித்ரா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com