என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதிய தொழிற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பதுதான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும்.
    • ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களுக்குத்தான் தெரியும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சிப்காட் வளாகங்கள் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு உரிமம் வழங்குவதற்கும், காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்திருக்கும் தமிழக அரசு, அந்த அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்திருக்கிறது. உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்டு எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் (Tamil Nadu Panchayats Act, 1994) செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் அடிப்படையில் இந்த அதிகார மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ஏதேனும் ஒரு பகுதியில் புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டுமானால், அதுகுறித்து அப்பகுதியின் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில்தான் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இனி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிமம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய தொழிற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருப்பதுதான் சிறந்ததும், பொருத்தமானதும் ஆகும். ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது அந்த பகுதியில் உள்ள மக்களுக்குத்தான் தெரியும். அந்த பாதிப்பை அனுபவிக்கப் போகிறவர்கள் அவர்கள்தான். அதனால், தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம் தான் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பறித்தது நியாயமல்ல.

    1949-ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் மாநில தன்னாட்சி என்ற முழக்கத்தை தான் முன்வைத்து போராடி வருகிறது. ஆனால், 1967-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்காமல் உள்ளாட்சிகளிடம் இருக்கும் அதிகாரத்தைப் பறிப்பதைத்தான் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதுதான் திமுகவின் இரட்டை வேடம் ஆகும். அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு, 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். தொழி்ற்சாலைகளுக்கு உரிமம் மற்றும் அனுமதி அளிக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமே ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    • எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம்.
    • கேப்டன் எங்கள் அனைவருக்கும் குரு.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

     

    இதுதொடர்பாக தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில்,

    வருகிற 28-ந்தேதி எங்கள் தலைவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பாக நினைவு தினத்தை கொண்டாட உள்ளோம்.

    இந்த நிகழ்வுக்காக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினோம்.

    எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம்.

    நினைவு தினம் அன்று காலை 8.30 மணிக்கு தேமுதிக அனைத்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மவுன ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

    போலீசார் அனுமதி கிடைத்தவுடன் 1 கி.மீ. மவுன ஊர்வலமாக நடந்து தலைமைக்கழகம் சென்று கேப்டன் ஆலயத்திற்கு சென்று அடைவோம்.

    நினைவு தினம் அன்று வரும் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். நலத்திட்ட உதவிகள் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும்.

    கேப்டன் எங்கள் அனைவருக்கும் குரு. மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் 'கேப்டன் முதலாம் ஆண்டு குரு பூஜை' என்று பெயர் வைக்கப்பட்டது.

    கேப்டன் நினைவிடத்திற்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஒரு வருடமாக தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.

    சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் பேர் வருகிறார்கள். பண்டிகை தினங்களில் 10 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். கோவில் போல் ஆகி விட்டது.

    அதனால் தேமுதிக சார்பில் குரு பூஜையாக ஆண்டாண்டு செய்வோம் என்று அவர் கூறினார்.

    • அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ஜாமின் மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போதைப் பொருள் வழக்கில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அலிகான் துக்ளகிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, ஜாமின் கோரி அம்பத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
    • 2 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடததினார்கள். அதில் 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை அருகே அனுமந்தபுரம் பக்கமுள்ள திப்பனூரை சேர்ந்த வெங்கடேஷ் (27), கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சம்மந்தூர் பக்க முள்ள மாரநாயக்கன அள்ளியை சேர்ந்த விஜயகுமார் (25), ஊத்தங்கரை தாலுகா நடுப்பட்டி அருகே உள்ள ஒந்தியம்புதூரை சேர்ந்த ஹரிபூபதி (39), ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்த பரந்தாமன் (27) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டரும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூரை சேர்ந்த முனிராஜ் (29), பெட்டமுகிலாளம் அருகே உள்ள தொளுவபெட்டா பழையூரை சேர்ந்த லிங்கப்பா (39), பசலிங்கப்பா (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதில் தொடர்புடைய பெட்டமுகிலாளம கிராமம் போப்பனூரை சேர்ந்த பசப்பா (40), ஜெயபுரத்தை சேரந்த மத்தூரிகா (39) ஆகிய 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

    கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.
    • உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த கல்லுப்பட்டியை சேர்ந்த கலாமணி(45), அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்த மாணிக்கம்(32) 2 பேரும், கடந்த 18-ந்தேதி பெட்ரோல் பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள். அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.

    மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் 2 வார காலத்தில் பதில் அளிக்குமாறு டிஜிபிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    • அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது.
    • நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.

    குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் அரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.

    தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
    • பூக்களின் அருகே நின்று சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள், நட்சத்திர மின் விளக்குகள் அலங்கரித்து வைத்துள்ளனர்.

    மேலும் சாண்டா கிளாஸ் வேடம் அணிந்த கிறிஸ்தவர்கள் இரவு நேரங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் சிலுவை வடிவிலான பூக்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் மட்டுமே இந்த வகை பூக்கள் பூக்கும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட உள்ள நிலையில் சிலுவை பூக்கள் கொடைக்கானலில் பூத்து குலுங்குவது அதனை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த பூக்களின் அருகே நின்று சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும்.

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    24-ந்தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    25-ந்தேதி வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    26-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    27-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    28 மற்றும் 29-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 25-ந்தேதி வரை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?
    • மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்.

    அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?

    சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் திட்டத்திற்கு சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவ னத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை சூழலியல் பாதிக்கப்படுவதோடு விவசாயம் அழிந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என கிராம மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த திட்டத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் டங்ஸ்டன் திட்டத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்.

    ஆனால் டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு தற்போது வரை மவுனம் காத்து வருகிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    அதன்படி இன்று மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லா ளப்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்கு தெரு, கல்லம்பட்டி, சூரக்குண்டு, எட்டிமங்களம், புளிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரும்பு, வாழை, நெல், ஏர்கலப்பை ஆகியவற்றை ஏந்தி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

    • நடைமுறையை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றவில்லை.
    • அரசியல் நடைமுறை அறியாமல் உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு கைவந்த வேலை.

    குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது வெட்கக்கேடான நிலை என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவுக்கு அமைச்சர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * தலைநகரில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகிறது.

    * 2 ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் 3-வது ஆண்டில் அனுமதிக்கக்கூடாது.

    * 2023-24-ல் பங்கேற்ற தமிழக அரசின் ஊர்திகள் இனி 2026-ல் தான் பங்கேற்க முடியுமென்பதே மத்திய அரசின் நடைமுறை.

    * நடைமுறையை மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றவில்லை.

    * உ.பி., குஜராத்திற்கு தொடர்ந்து 3-வது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயம் அற்ற செயல்.

    * அரசியல் நடைமுறை அறியாமல் உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு கைவந்த வேலை.

    * அரசுக்கு ஆக்கப்பூர்வ யோசனை, கருத்துகளை கூறி எதிர்க்கட்சி தலைவர் பதவிக்குரிய மரியாதையை இபிஎஸ் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

    • விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது" என்ற வரிகளுக்கு ஏற்ப வரவு-செலவு பார்க்காமல் உழுவதையும், உழைப்பதையுமே தன் வாழ்நாள் பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மழை, புயல், வெள்ளம், வறட்சி என எத்துனை பேரிடர்களை சந்தித்தாலும் தங்களின் கடின உழைப்பின் மூலம் உலகிற்கே உணவளிக்கும் மகத்தான சேவையில் இடைவிடாது ஈடுபட்டுவரும் விவசாயப் பெருமக்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×