என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை பூக்கள்
    X

    கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை பூக்கள்

    • கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
    • பூக்களின் அருகே நின்று சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள், நட்சத்திர மின் விளக்குகள் அலங்கரித்து வைத்துள்ளனர்.

    மேலும் சாண்டா கிளாஸ் வேடம் அணிந்த கிறிஸ்தவர்கள் இரவு நேரங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் சிலுவை வடிவிலான பூக்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் மட்டுமே இந்த வகை பூக்கள் பூக்கும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட உள்ள நிலையில் சிலுவை பூக்கள் கொடைக்கானலில் பூத்து குலுங்குவது அதனை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த பூக்களின் அருகே நின்று சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×