என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • துவக்க வீரர் பதும் நிசங்கா, தனஞ்செய டி சில்வா ஆகியோரை விரைவில் அவுட் ஆக்கினார் ஷிவம் மவி.
    • இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

    துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷூப்மான் கில்(7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் சேர்த்ததால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். துவக்க வீரர் பதும் நிசங்கா(1), தனஞ்செய டி சில்வா (8) ஆகியோரை விரைவில் அவுட் ஆக்கினார் ஷிவம் மவி. அதன்பின்னரும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகள் சரிந்தன. அசலங்கா 12 ரன்னிலும், குஷால் மென்டிஸ் 28 ரன்னிலும், பனுகா ராஜபக்சே 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹசரங்கா 21 ரன்களும், தசுன் சனகா 45 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.

    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், அக்சர் பட்டேல் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட கருணாரத்னே, 3வது பந்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் 5வது பந்தில் கசுன் ரஜிதா ரன் அவுட் ஆனதால் நம்பிக்கை தகர்ந்தது. கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தில் கருணாரத்னே ஒரு ரன் எடுத்து, இரண்டாவது ரன்னுக்கு ஓடியபோது மறுமுனையில் தில்சன் ரன் அவுட் ஆனார். இதனால், இலங்கை அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கருணாரத்னே 23 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதனால் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். உம்ரான் மாலிக், ஹர்சல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    • இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    • குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது.

    மும்பை:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியில் சிவம் மவி, ஷூப்மான் கில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.

    குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதால், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்திருக்கிறது. எனவே, முதலில் ஆடும் இந்தியா அதிக ரன்ரேட் வைத்தால் மட்டுமே வெற்றியை வசமாக்க முடியும் என்ற நிலை உள்ளது.

    • 108வது இந்திய அறிவியல் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது.
    • இந்தியாவில் அறிவியல் இந்தியாவை தன்னிறைவு அடைய செய்வதை நோக்கமாக கொண்டு இருக்க வேண்டும்.

    நாட்டில் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். முதல் மாநாடு 1914ம் ஆண்டு நடைபெறுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மாநாடு நடத்தப்படவில்லை.

    இந்தநிலையில் 108வது இந்திய அறிவியல் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று முதல் வருகிற 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பெண்களுக்கு அதிகாரமளித்தலுடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    108-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    விஞ்ஞானம், தொழில்நுட்பத்தால் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் இந்தியா வளர்ச்சி பெறுகிறது. நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெண்களுக்கு தொழில்நுட்பம் உதவியாக இருந்துள்ளது. மக்களுக்கு பயன்படாவிட்டால் புதிய கண்டுபிடிப்புகளாலும் பலன் இருக்காது.

    அறிவியல் துறையில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்தியா இன்று முன்னேற்றத்திற்காக அறிவியல் வழிகளை பயன்படுத்துகிறது. இதனால் 130 நாடுகள் பட்டியல் 2015-ல் 81-வது இடத்தில் இருந்த இந்தியா உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    அறிவியலில் வளர்ச்சி என்பது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டு இருக்க வேண்டும். இது நமது விஞ்ஞான சமூகத்துக்கு உத்வேகமாக இருக்க வேண்டும்.

    இந்தியாவில் அறிவியல் இந்தியாவை தன்னிறைவு அடைய செய்வதை நோக்கமாக கொண்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது.
    • ‘லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது.

    மும்பை :

    உத்தவ் பால்சாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

    ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே 'லவ் ஜிகாத்' என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தவும் 'லவ் ஜிகாத்' ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?. நடிகை துனிஷா சர்மா, ஷரத்தா கபூரின் மரணம் லவ் ஜிகாத் என கூறமுடியாது.

    எந்த மதம், சமூகத்தை சேர்ந்த பெண்களும் வன்முறைக்கு ஆளாக கூடாது. 2023-ல் நாடு அச்சம் இல்லாததாக மாறும் என நம்புகிறோம். அதிகாரத்தின் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது.

    ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி பெறும் எனவும், அதன் இலக்கை அடையும் என நம்புகிறோம். 2022-ம் ஆண்டு ராகுல் காந்தியின் தலைமைக்கு புதிய ஒளியையும், அவதாரத்தையும் கொடுத்தது. 2023-லும் அது தொடர்ந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் அரசியல் மாற்றத்தை காண முடியும். பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மையை விட வேண்டும் என்கிறார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் குறுகிய மனப்பான்மையுடன், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அங்கீகரிக்க விரும்பவில்லை.

    இந்து, முஸ்லிம் இடையே பிளவை தூண்டுவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும். மோடியும், அமித்ஷாவும் வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைக்க கூடாது. இந்துக்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. அதற்காக சமூகத்தில் வெறுப்பையும், பிரிவினையையும் உருவாக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை.
    • 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    மும்பை:

    இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 20 வீரர்களையும் இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

    ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை. அவரது கேப்டன்ஷிப் குறித்து அதிருப்தியான அம்சங்கள் எதையும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    ரோகித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது கேப்டன்சி சாதனை சிறப்பாக உள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிசிசிஐ வழங்கி உள்ளது. மேலும், வரும் ஐபிஎல் சீசனில் விளையாடுவதை தவிர்க்கும்படி முன்னணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.

    • நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    மும்பை:

    மராட்டியம் மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியை சேர்ந்த ராணி ராஜ் வான்காவாலா என்பவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.

    4 வயதான அந்த செல்லப்பிராணி சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. சரியாக நடக்க முடியாமல் சோர்வுடன் காணப்பட்டது. அந்த செல்லப் பிராணியை கால்நடை மருத்துவர்களிடம் அழைத்து சென்று காட்டினர்.

    அப்போது அந்த நாய்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதனால் அந்த நாய்க்கு இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கால்நடை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    செல்லப்பிராணிகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் கடினமானது எனவும், நாய்க்கு மயக்க மருந்து வழங்குவது சவாலானது எனவும் டாக்டர்கள் கருதினர்.

    இந்தியாவில் இதுபோன்று செல்லப்பிராணிகளுக்கு திறந்த இருதய சிகிச்சை என்பது அரிதானது என கூறிய கால்நடை டாக்டர்கள் வெளிநாடுகளில் இதுபோன்ற சிகிச்சைகள் வழக்கமாக நடைபெறும் என்பதையும், ராணிராஜ் குடும்பத்தினரிடம் கூறினர்.

    இதைத்தொடர்ந்து நாயை அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அழைத்து செல்வதுதான் ஒரே வழி என்றும், அங்கு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் ராணிராஜ் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக நாயை வெளிநாடு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நாயை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என ராணிராஜ் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து வெளிநாடுகளில் இதுபோன்று நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் மத்தியாஸ்பிரன்ங்குடன் மும்பை டாக்டர் தேஷ்பாண்டே தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர் இந்தியா வந்து நாய்க்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்தார். அதன்படி அவர் விமானத்தில் மும்பை வந்து அந்தேரியில் உள்ள டாக்டர் மகரந்த் சவுசல்கரின் கிளினிக்கில் நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் அல்ட்ரா சவுண்ட் எந்திரத்தில் 2டி எக்கோ சோதனை நடந்தது.

    தொடர்ந்து நாய்க்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. 4 வராங்களுக்கு பிறகு அந்த நாய் தற்போது ஆரோக்கியமாக தனது வீட்டிற்கு திரும்பி உள்ளது.

    • தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
    • தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாசிக்:

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், முண்டேகான் கிராமத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் ஒரு பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென ஆலையின் மற்ற பகுதிக்கும் பரவியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர். இருப்பினும் சிலர் தீப்பற்றிய பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினருடன் இணைந்து பேரிடர் மீட்பு குழுவினர், ஆலையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர்.

    இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
    • இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.

    வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சிக்கு மத்திய மந்திரி பாராட்டு
    • கால்நடைகளுக்கான தோல் நோயை கட்டுப்படுத்த, தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது

    கால்நடைகளை தாக்கும் ஆட்டு அம்மை எனப்படும் தோல் நோயை கட்டுப்படுத்த, அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையமும், உத்தர பிரதேச மாநிலம் இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, லும்பி ப்ரோவாக் என்ற தடுப்பூசியை உருவாக்கியது.

    இந்த தடுப் பூசியை வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கால்நடை பராமரிப்புதுறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் முன்னிலையில் இது கையெழுத்தானது. 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ரூபாலா, உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்றார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆட்டு அம்மை நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

    மாடுகள் உள்பட வீட்டு விலங்குகளுக்கு தோல் நோயை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசியை காலதாமதமும் இல்லாமல் பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்று புனேயில் உள்ள கால்நடை மருத்துவ உயிரியல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

    • காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது.
    • சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    மும்பை :

    மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய பிறகு, மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அவர் புனேயில் உள்ள காங்கிரஸ் பவனுக்கு சென்றார். காங்கிரஸ் நிறுவன நாளையொட்டி அங்கு நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார்.

    விழாவில் சரத்பவார் பேசியதாவது:-

    சிலர் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது. அது சாத்தியமில்லை. காங்கிரசின் சித்தாந்தத்தையும், பங்களிப்பையும் புறக்கணித்துவிட முடியாது. கொள்கைகளில் முரண் இருக்கலாம், ஆனாலும் நாங்கள் காங்கிரசுடன் இணைந்து பயணிப்போம்.

    புனேயில் பல காங்கிரஸ் தலைவர்கள் அப்போது இருந்தனர். 'புனே என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் புனே' என இருந்தது. ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வீடியோவை காட்டி மிரட்டி கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
    • நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளார்.

    பின்னர் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து சிறுமியை கற்பழித்தார். அவருடன் மேலும் 5 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதோடு, இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த கும்பல், சிறுமியிடம் அதை காட்டி நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    மேலும் வீடியோவை காட்டி மிரட்டி கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

    நாளுக்கு நாள் அவர்களின் தொல்லை அதிகரித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
    • சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை மந்திரியான அனில் தேஷ்முக் 2019-ம் ஆண்டில் பொறுப்பேற்றார். அப்போது மது பார்களில் இருந்து மாதந்தோறும் பணம் வசூலித்து தரும்படி அனில் தேஷ்முக் கூறியதாக, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அப்போதைய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதினார்.

    இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பண மோசடி வழக்கு பதிவுசெய்த அமலாக்கத் துறையினர், மந்திரி அனில் தேஷ்முக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    மேலும், அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஜாமீன் வழங்க கோரி மும்பை ஐகோர்ட்டில் கடந்த டிச.12-ல் அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பு எதிர்ப்பு தெரிவித்து. எனினும் சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மும்பை ஆர்தர் ரோடு சிறையிலிருந்து அனில் தேஷ்முக் இன்று மாலை வெளியே வந்தார். தேசியவாத காங்கிரஸ்

    கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ×