என் மலர்
மகாராஷ்டிரா
- டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் ரிஷப் பண்ட் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
- மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றபோது அவரது கார் விபத்துக்குள்ளானது. டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் உள்ள தடுப்பு கம்பியில் கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தசை நார் கிழிந்திருந்தது. குறிப்பாக, முழங்காலில் ஏற்பட்டு இருக்கும் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது.
எனவே பாதிப்பின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்த உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக, அவர் டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தசைநார் கிழிந்துள்ள முழங்கால் பகுதியில் நேற்று வெற்றிகரமாக ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.
அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். மேற்கொண்டு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை மற்றும் நடைமுறைகள் குறித்து டாக்டர் டின்ஷா பர்திவாலா ஆலோசனை வழங்குவார். மேலும் பிசிசிஐ விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழுவும் தொடர்ந்து ஆலோசனை வழங்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிஷப் பண்ட், அறுவை சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி போட்டிகளில் பங்கேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகலாம் என தெரிகிறது.
- ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
- இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
மும்பை :
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்திராணியின் 3-வது கணவரான பீட்டர் முகர்ஜியும் கைதானார்.
பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இவர் மீதான வழக்கை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்தநிலையில் சிறப்பு கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஷீனா போரா போன்று தோற்றமுடைய பெண்ணை கவுகாத்தி ரெயில் நிலையத்தில் 2 வக்கீல்கள் பார்த்ததாகவும், இதை உறுதி படுத்த விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இந்திராணி முகர்ஜியின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய புலனாய்வு துறைக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
- மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
- இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதிக்குள் நுழைந்தது.
புனே:
5-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
இந்தியாவின் பாலாஜி, நெடுஞ்செழியன் ஜோடி, இங்கிலாந்தின் காஷ், பாட்டேன் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவரின் செலவுத் தொகையை அரசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி கடந்த 2020-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, தெரு நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் நாய் காயமடைய, பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திய மனாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 279 உள்பட சில பிரிவுகளில் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது மனாஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தனக்கு எதிரான புகாரை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த ரேவதி மோகித் டேர், பிரித்விராஸ் சவான் கொண்ட டிவிசன் பெஞ்ச், இந்த எஃப்.ஐ.ஆர். நியாயமற்றது என கேன்சல் செய்ததோடு, பாதிக்கபட்ட மனாஸ்க்கு வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசுக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளனர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நாய், பூனை அவர்களது உரிமையாளர்களுக்கு குழந்தை அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் போன்று நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அடிப்படையில் உயிரியல் என்ன சொல்கிறது என்றால், அவைகள் மனித உயிரினங்கள் இல்லை.
இந்த தண்டனைச் சட்டம் 279 மற்றும் 337 ஆகியவை, மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அல்லது எந்த நபருக்கும் காயம் ஏற்படுத்துதல் என்பதை குறிப்பிடுகின்றன.
குறிப்பாக 279 பிரிவு, மற்றவர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு, உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய குற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, சட்டப்பூர்வமாக பார்த்தால், இதற்கு பொருந்தாது. மனித உயிரினங்களை தவிர்த்து மற்றவைக்கு காயத்தை ஏற்படுத்தும்போது, இந்த சட்டப்பிரிவுகள் பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை.
அந்த எஃப்.ஐ.ஆர். நியாயமான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெளிவுப்படுத்தப்படுகிறது. எந்தவொரு குற்றமும் வெளிப்படுத்தப்படாத போதிலும், போலீசார் மேற்படி வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு 20 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்.
இந்த பணம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காரணமாக இருந்து அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- பண்டர்பூரில் விட்டல் சாமி- ருக்மணி கோவில் உள்ளது.
- கணவரின் இறப்பிற்கு பிறகு காப்பீடு தொகை ரூ.1 கோடி கிடைத்தது.
புனே :
சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விட்டல் சாமி- ருக்மணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தங்கம், வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது மனைவி, மகள், தாயுடன் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது தான் இறந்த பிறகு கிடைக்கும் ஆயுள் காப்பீடு பணம் முழுவதையும் விட்டல் சாமி கோவிலில் காணிக்கையாக செலுத்தும்படி மனைவியை கேட்டுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தாக்கி அந்த பக்தர் உயிரிழந்தார்.
கணவரின் இறப்பிற்கு பிறகு அவரது குடும்பத்திற்கு காப்பீடு தொகை ரூ.1 கோடி கிடைத்தது. கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக பக்தரின் மனைவி காப்பீடு தொகையில் கிடைத்த ரூ.1 கோடியை அப்படியே கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினார்.
இந்த கோவிலில் இதுவரையில் யாரும் ரூ.1 கோடி அளவுக்கு காணிக்கை செலுத்தியது கிடையாது, இது கோவிலுக்கு கிடைத்த மிகப்பெரிய காணிக்கை என கோவில் நிர்வாகி பாலாஜி தெரிவித்தார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் சேர்த்தது
- அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர்.
புனே:
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 51 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதேபோல் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல், ஷிவம் மவி இருவரும் அதிரடியாக ஆடி வெற்றியை எட்ட கடுமையாக போராடினர். கடைசி ஓவரில் 21 பந்துகள் தேவை என்ற நிலையில், அடித்து ஆட முற்பட்ட அக்சர் பட்டேல் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் கடைசி பந்தில் ஷிவம் மவியும் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் இந்தியா 4 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. கடைசி போட்டி 7ம் தேதி நடக்கிறது.
- இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சனகா 56 ரன்கள் சேர்த்தார்.
- இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
புனே:
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலனா இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.
துவக்க வீரர் குஷால் மென்டிஸ் 52 ரன்கள் சேர்த்தார். பதும் நிசங்கா 33 ரன்கள், சரித் அசலங்கா 37 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் தசுன் சனகா, 22 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக 16வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
- புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்றைய போட்டி நடக்கிறது.
புனே:
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் உள்ளூர் வீரர் ராகுல் திரிபாதி, சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். 31 வயது நிரம்பிய இவர், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரை அடுத்து, ஆடவர் டி20 போட்டிகளில் அறிமுகமான மூன்றாவது மூத்த வீரர் ஆவார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை வீரர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது.
- மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
புனே :
பா.ஜனதா கட்சி 2024-ம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை அந்த கட்சி நிர்ணயித்து உள்ளது. இதனை "மிஷன் 45" என்று மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து அவர், "எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதனால் பா.ஜனதா "மிஷன் 48" என்று தான் தொடங்கி இருக்க வேண்டும். 45 அல்ல.
ஜே.பி. நட்டா அந்த கட்சியின் தலைவர். அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அந்த கட்சிக்கு உள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
எனவே பா.ஜனதா தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்.
மேலும் 'லவ் ஜிகாத்'துக்கு எதிராக சட்டம் இயற்ற கோரி இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் முடிவெடுக்கலாம். யார் எதிர்ப்பு தெரிவித்தனர்?" என்றார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது, சம்பாஜி மகாராஜாவை மதப்பாதுகாவலர் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டும் இன்றி அஜித் பவார், சம்பாஜி மகாராஜாவை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், "சுயராஜ்யத்தின் பாதுகாவலராக சத்ரபதி சாம்பாஜியை சமுதாயத்தில் சிலர் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதேபோல ஒரு சிலர் அவரை மத பாதுகாவலர் என அழைத்து அவரது பணிகளை மத கோணத்தில் பார்த்தாலும் அதிலும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் அவருக்கு தர்ம ரட்ஷகர் அல்லது தர்மவீரர் என்று அடைமொழியை பயன்படுத்தாதது குறித்து சிலர் புகார் கூறுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை விவாதிக்க எந்த காரணமும் அல்ல" என்றார்.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- முதல் போட்டியின் தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
புனே:
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
- முதல் டி20 போட்டியில் பீல்டிங் செய்தபோது சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
- மீதமுள்ள போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை:
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.
- இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- அந்த அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.
மும்பை:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.
இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை.
காயம் காரணமாக கடந்த டி20 உலக கோப்பையில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மூத்த வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இந்த அணிக்கு ரோகித் தலைமை தாங்குகிறார். இந்த இரு தொடர்களுக்குமான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அப்போது இடம்பெறவில்லை.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.






