என் மலர்tooltip icon

    இந்தியா

    பண்டர்பூர் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை: கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பெண்
    X

    பண்டர்பூர் கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை: கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பெண்

    • பண்டர்பூரில் விட்டல் சாமி- ருக்மணி கோவில் உள்ளது.
    • கணவரின் இறப்பிற்கு பிறகு காப்பீடு தொகை ரூ.1 கோடி கிடைத்தது.

    புனே :

    சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விட்டல் சாமி- ருக்மணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தங்கம், வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது மனைவி, மகள், தாயுடன் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது தான் இறந்த பிறகு கிடைக்கும் ஆயுள் காப்பீடு பணம் முழுவதையும் விட்டல் சாமி கோவிலில் காணிக்கையாக செலுத்தும்படி மனைவியை கேட்டுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தாக்கி அந்த பக்தர் உயிரிழந்தார்.

    கணவரின் இறப்பிற்கு பிறகு அவரது குடும்பத்திற்கு காப்பீடு தொகை ரூ.1 கோடி கிடைத்தது. கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக பக்தரின் மனைவி காப்பீடு தொகையில் கிடைத்த ரூ.1 கோடியை அப்படியே கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினார்.

    இந்த கோவிலில் இதுவரையில் யாரும் ரூ.1 கோடி அளவுக்கு காணிக்கை செலுத்தியது கிடையாது, இது கோவிலுக்கு கிடைத்த மிகப்பெரிய காணிக்கை என கோவில் நிர்வாகி பாலாஜி தெரிவித்தார்.

    Next Story
    ×