என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகல்
    X

    சஞ்சு சாம்சன்

    காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகல்

    • முதல் டி20 போட்டியில் பீல்டிங் செய்தபோது சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
    • மீதமுள்ள போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மும்பை:

    இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.

    Next Story
    ×