என் மலர்
மகாராஷ்டிரா
- சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
- இதனால் அந்தப் போட்டி மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆசிய கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கொழும்புவில் பாகிஸ்தானை ச்சந்திக்கிறது. கொழும்புவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தடைப்பட்டது போல சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (நடக்கும் இந்தியா, பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் (11-ம் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- கொள்ளை சம்பவம் முழுக்க சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
- ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் fast and furious-இல் வரும் காட்சியை போன்று, ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கட்டி, அதனை கார் கொண்டு இழுத்துச் செல்ல முகமூடி அணிந்த கும்பல் முயற்சித்து இருக்கிறது.
இந்த கொள்ளை சம்பவம் முழுக்க முழுக்க அங்கு வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை வைத்துக் கொண்டு போலீசார் கயவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் செப்டம்பர் 6-ம் தேதி அகிகாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.
அப்போது முகமூடி அணிந்த நிலையில், இருவர் ஏ.டி.எம். மையத்தை அடைந்தனர். வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் கயிறு கொண்டு கட்டி இழுக்க முயற்சித்தனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்க, காவலர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்தனர். எனினும், காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
- கடந்த 3-ந்தேதி ரூபால் ஓக்ரே வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
- கைதான விக்ரம் அத்வால் மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மும்பை:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த 3-ந்தேதி ரூபால் ஓக்ரே வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த விக்ரம் அத்வால் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த அன்று ரூபால் வீட்டில் தனியாக இருந்த போது விக்ரம் அத்வால் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது இதனை தடுக்க முயன்ற ரூபாலியை கத்தியால் கழுத்தை அறுத்துக்கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கைதான விக்ரம் அத்வால் மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவர் ஜெயில் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- மும்பையில் ஒரு மாதத்திற்கு பிறகு பருவமழை பெய்த tஹு.
- வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது. தற்போது ஏரிகளில் 91 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது.
இதற்கிடையே, நேற்று மும்பை நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியது.
இந்நிலையில் மும்பையில் இன்றும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை நகருக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, துலே, ஜல்கான் மற்றும் நாசிக் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- புதிய வகை ஏ.டி.எம்.- யு.பி.ஐ. ஏ.டி.எம். என்று அழைக்கப்படுகிறது.
- புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.
மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது "யு.பி.ஐ. ஏ.டி.எம்." என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.
இவ்வாறு செய்யும் போது பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல், தங்களது மொபைல் போனில் இருக்கும் யு.பி.ஐ. சேவை மூலம் ஏதேனும் செயலி மூலமாக ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் ஃபின்டெக் வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.-இல் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். இந்த வீடியோவுக்கு பூயூஷ் கோயல், "யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் எதிர்காலம் இங்கே தான் இருக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வகை ஏ.டி.எம். இயந்திரத்தை தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் மற்றும் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இந்த யு.பி.ஐ. ஏ.டி.எம். வழக்கமான ஏ.டி.எம். போன்றே இயங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்தும் போது, அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
- எங்கள் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது.
- மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது.
மும்பை:
சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். அவரது அந்த பேச்சை நான் கேள்விப்பட்டேன். யாரும் இதை ஆதரிக்க மாட்டார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இது தி.மு.க.வின் பார்வையாகவோ அல்லது அவரது தனிப்பட்ட பார்வையாகவோ இருக்கலாம். சுமார் 90 கோடி இந்துக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். மற்ற மதத்தினரும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்த கூடாது.
நாட்டின் நிலைமை மோசமடையக் கூடாது. எங்கள் மீது பா.ஜனதா தாக்குதல் நடத்த இதுபோன்ற கருத்துக்கள் அமையக் கூடாது. மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. அவர் எங்களுடன் இணைந்து இருக்கிறார். எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
- சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம்
- அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:-
சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.
எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது.
- இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வருகிற 13-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளனர்.
இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ந்தேதி மும்பையிலும் நடைபெற்றது.
காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வருகிற 13-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதை சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் வைத்து இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- விநாயகருக்கு அணிவிக்கும் நகைகளுக்கு மட்டும் ரூ.38.47 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.
மும்பை:
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியின்போது பல்வேறு இடங்களில் மண்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பூஜைக்கு பிறகு சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
இதில் லால்பாக் ராஜா, கணேஷ்கல்லி, வடலா ஜி.எஸ்.பி. மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள்.
ஆண்டுதோறும் பெரிய மண்டல்கள், தங்கள் மண்டல்களை காப்பீடு செய்வது வழக்கம். நடப்பாண்டு நகரின் பணக்கார விநாயகராக கருதப்படும் வடலா ஜி.எஸ்.பி. மண்டலுக்கு ரூ.360 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விநாயகருக்கு அணிவிக்கும் நகைகளுக்கு மட்டும் ரூ.38.47 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மண்டல் ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு ரூ.289.50 கோடி அளவுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கணிசமான தொகை காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 66 கிலோ தங்கம், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.
+2
- இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முரளீதரன்
- மும்பையில் நடைபெற்ற சச்சின் தெண்டுல்கர், முரளீதரன், ஜெயசூர்யா பங்கேற்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளீதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு "800" என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய சச்சின் தெண்டுல்கர் ''அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.'' என்றார்.
இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார்.
- கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் ஏதோ பிரச்சனை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- வீட்டில் தனியாக இருந்த பயிற்சி விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஒக்ரே(வயது24). இவர் விமான பணிப்பெண் வேலையில் சேர கடந்த ஏப்ரல் மாதம் மும்பை வந்தார். அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சகோதரி மற்றும் அவரது ஆண் நண்பருடன் வசித்து வந்தார். ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி விமான பணிப்பெண்ணாகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ரூபால் ஒக்ரேவின் சகோதரி, ஆண் நண்பருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரூபால் ஒக்ரே மட்டும் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் ரூபால் ஒக்ரேக்கு அவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் இருந்து நேற்று முன்தினம் போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து மும்பையில் வசிக்கும் நண்பர் ஒருவரிடம் கூறினர். அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் ரூபால் ஒக்ரே கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர் பவாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாற்று சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் ரூபால் ஒக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில், அந்த கட்டிடத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் விக்ரம் அத்வால்(40) என்பவர் ரூபால் ஒக்ரே வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்ரம் அத்வாலை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் ஏதோ பிரச்சனை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விக்ரம் அத்வால் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வீட்டில் தனியாக இருந்த பயிற்சி விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து ஜால்னா மாவட்டத்தில், மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதுதொடர்பாக 300க்கும் அதிகமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, ஜால்னா மாவட்டத்தில் நடந்து வந்த மராத்தா சமூகத்தினரின் போராட்டம் தலைநகர் மும்பையில் உள்ள பிரபல மரைன் டிரைவ் பகுதியை அடைந்தது.இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மரைன் டிரைவ் பகுதியில் இருந்து கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் செல்லவில்லை.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, மரைன் டிரைவ் பகுதிக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், இம்மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மராத்தா சமூகத்தினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.






