என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக்பூர் பொதுக்கூட்டம்"

    • அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • ராகுல் காந்தியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

    காங்கிரஸ் கட்சி துவங்கி 138 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி தேசத்திற்காக நன்கொடை அளியுங்கள் என்ற பெயரில் மக்களிடம் டிஜிட்டல் முறையில் நிதி சேகரிக்கும் திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டது. மக்களிடம் நிதி சேகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்காக போடப்பட்ட இருக்கைகளின் பின்புறம், தேசத்திற்காக நன்கொடை அளியுங்கள் என்பதை கோரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.



    இதற்கான ஸ்டிக்கர்களுடன் ராகுல் காந்தியின் புகைப்படம் ஒருபுறமும், மறுபுறம் பணம் அனுப்புவதற்கான கியூ.ஆர். கோட்-ம் இடம்பெற்று இருக்கிறது. மேலும், "சிறப்பான இந்தியாவை உருவாக்க 138 ஆண்டுகால போராட்டத்தில், காங்கிரஸ்-க்கு நீங்கள் தேவை. இந்தியாவுக்கு நீங்கள் தேவை. ஸ்கேன் செய்து தானம் அளியுங்கள்," என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. 

    ×