search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பரபரப்பான கட்டத்தில் மும்பை டெஸ்ட்: இந்திய பெண்கள் அணி வெற்றி பெற 75 ரன்கள் இலக்கு
    X

    பரபரப்பான கட்டத்தில் மும்பை டெஸ்ட்: இந்திய பெண்கள் அணி வெற்றி பெற 75 ரன்கள் இலக்கு

    • இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • 187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது.

    இந்தியா-ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 219 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணி 406 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மந்தனா 74 ரன்னும், ரோட்ரிக்ஸ் 73 ரன்னும், தீப்தி சர்மா 78 ரன்னும் எடுத்தனர்.

    187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. சுதர்லாண்ட் 12 ரன்னுடனும், கார்ட்னெர் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று வரை அந்த அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

    இந்நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர், கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×