என் மலர்
ஜார்கண்ட்
- எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
- பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் மோதியது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரெயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்தாரா- கர்மாதாண்ட் வழித்தடத்தில் கல்ஜாரியா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, ௧௨ பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
- ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் மதுகோடா.
- இவரது மனைவியான கீதா கோடா இன்று காங்கிரசில் இருந்து விலகினார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006-ம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்த மதுகோடா காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
மதுகோடாவின் மனைவி கீதா கோடா, டெல்லி சென்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில், ஜார்க்கண்டின் சிங்பூர் தொகுதி எம்.பி.யான கீதா கோடா, இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி குறித்த அதிருப்தியால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
- இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
- இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.
ராஞ்சி:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
- இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.
ராஞ்சி:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் தங்கள் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின். இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.
ராஞ்சி:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி திணறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுமையாக ஆடிய துருவ் ஜுரல் அரை சதம் கடந்தார். 8வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் ஜோடி 76 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்னில் அவுட்டானார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 219 ரன்கள் எடுத்துள்ளது.
ராஞ்சி:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், 2ம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு செய்தார்.
- சோரனின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் இன்று உத்தரவிட்டது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்கம் மற்றும் நில மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கினார்.
இவரது கோர்ட் காவல் பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ராஞ்சி பி.எம்.எல். சிறப்பு கோர்ட் பிப்ரவரி 22-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஹேமந்த் சோரன் கோர்ட்டில் மனு செய்தார்.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட் சோரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
- "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
- பண மோசடி வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது.
- முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் சம்பாய் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார்.
இந்த நிலையில் இந்த வருடத்தில ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 3 அல்லது 4 துண்டுகளாக உடையும் உன பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளா்.
இதுதொடர்பாக நிஷிகாந்த் துபே கூறுகையில் "சோரன் குடும்பம் ஜெயலுக்கு போகும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். சில எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பில் இருப்பதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகியவை தங்கள் இருப்புகளை இழந்துவிடும் எனவும் டுவீட் செய்திருந்தேன்.
நான் தவறாக டுவீட் செய்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர். எல்லோரும் என்னுடைய டுவீட்டை பாதுகாத்து வைத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். ஜார்கண்ட் மோர்ச்சா அல்லது காங்கிரசை பார்க்க முடியாது. 2024-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூன்று அல்லது நான்கு துண்டுகளாக உடையும்" என்றார்.
- ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.
- நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை'யின்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எல்லோரது மனதிலும் ஒரு கேள்வி எழுகிறது. பிரதமர் மோடி தன்னை பாராளுமன்றத்தில் 'ஓபிசி' என்று கூறுகிறார். பின்னர் நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழை 2 ஜாதிகள் மட்டுமே உள்ளன என்று சொல்லத் தொடங்கினார்.
எனவே பிரதமர் முதலில் தெளிவான முடிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஒருவரை சிறியவர் மற்றும் பெரியவர் எனக் கருதும் இந்த மனநிலையை மாற்றுவது முக்கியம்.
ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினராக இருந்தாலும் அவர்களை கணக்கிடாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூகநீதியை வழங்க முடியாது.
நாடு முழுவதும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு பிரதமர் ஏன் தயங்குகிறார்? இவ்வாறு கூறினார்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார்.
- தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார்.
ராஞ்சி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'பாரத ஒற்றுமை நீதி' யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
ஜார்க்கண்ட் பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.
ராகுல்காந்தி திறந்த வாகனத்தில் சென்றார். அப்போது தன்னுடன் இருந்த நாய்க்கு பிஸ்கட்டை ஊட்டினார். அதை சாப்பிட மறுத்ததால் அவர் தட்டில் வைத்தார். தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார். வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார். தற்போது ராகுல் காந்தி நாய் சாப்பிடாத பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுத்துள்ளார்.
ஒரு கட்சியின் தலைவரும், பட்டத்து இளவரசரும் கட்சி தொண்டர்களை நாய்களை போல் நடத்தினால் அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மற்றொரு பா.ஜனதா தலைவர் சி.டி. பல்லவி கூறும்போது, "தற்போது அசாம் முதல்-மந்திரியாக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை ராகுல்காந்தி அவமரியாதை செய்து தனது நாய் சாப்பிடும் அதே தட்டில் பிஸ்கட் சாப்பிட வற்புறுத்தினார்" என்றார்.
அசாம் பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா இதற்கு பதில் அளித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் பதில் கூறி இருப்பதாவது:-
ராகுல்காந்தி மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்தாராலும் அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமைமிக்க அசாமியன் மற்றும் இந்தியன் ஆவேன். நான் சாப்பிட மறுத்தேன். காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தேன்.
கட்சி தொண்டருக்கு நாயால் நிராகரிக்கப்பட்ட பிஸ்கட் கொடுத்த ராகுல் காந்தியின் இது போன்ற சம்பவம் தான் காங்கிரசை விட்டு வெளியேற செய்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பா.ஜனதா வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி உள்ளது.






