என் மலர்tooltip icon

    டெல்லி

    • இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு.
    • சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    இந்தியாவிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமான இரவு உணவு விருந்து அளித்தார்.

    இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு. இந்த மெனுவில் சிறப்பு ஈர்ப்பாக காஷ்மீர் உணவான 'குச்சி தூன் செடின்' இருந்தது.

    இது மிகவும் விலையுயர்ந்த 'Gucci ' காளான்களால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை உள்ளது.

    குச்சி காளான்கள் மிகவும் அரிதானவை என்பதால் இந்த விலை. அவை ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்.

    பனி உருகிய பிறகு, தனித்துவமான மண் மற்றும் வெப்பநிலை நிலைகளில் வசந்த காலத்தில் மட்டுமே அவை இயற்கையாக வளரும். சில நேரங்களில் காட்டுத் தீக்குப் பிறகும் அவை முளைக்கின்றன.

    இந்த காளான்களை சேகரிப்பதும் மிகவும் கடினமான பணியாகும். உள்ளூர்வாசிகள் மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணித்து அவற்றை சேகரிப்பர். சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.

    குச்சி புலாவ், யக்னி மற்றும் ரோகன் ஜோஷ் போன்ற பாரம்பரிய காஷ்மீரி உணவுகளைத் தயாரிக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.   

    • அவசரநிலையின் போது ஜனநாயக விரோத முறையில் சேர்க்கப்பட்டன.
    • அவசரநிலையின்போது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அரசியலமைப்பின் முன்னுரை 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோசலிஸ்ட்' என்ற வார்த்தைகளை நீக்க மாநிலங்களவையில் பீகார் பாஜக எம்.பி. பீமா சிங் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.      

    இந்த வார்த்தைகள் முகவுரையில் தேவையில்லை, அவசரநிலையின் போது ஜனநாயக விரோத முறையில் சேர்க்கப்பட்டன. இந்த வார்த்தைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அசல் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    அவசரநிலையின்போது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஜனநாயகத்தின் படுகொலை. இதுபோன்ற சூழ்நிலையில்தான் இந்திரா காந்தி இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்தார்.

    எனவே, பின்னர் சேர்க்கப்பட்ட இந்த இரண்டு வார்த்தைகளையும் நீக்கிவிட்டு, அரசியலமைப்பு அதன் அசல் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பீமா சிங் வாதிட்டார். 

    • ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
    • இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரை போன்ற போலியான உருவத்தை உருவாக்குவதே deep fake. இவற்றின் மூலம் ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக நடிகைகள், பிரபலங்கள் இதற்கு இரையாகி உள்ளனர். மேலும் பெண்களை தவறாக சித்தரித்து பிளாக் மெயில் செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே Deep fake ஒழுங்குமுறை  மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்தியாவில் deep fake களை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்ட கட்டமைப்பை நிறுவ இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது என்று அவர் கூறினார்.

    இந்த மசோதா, தேசிய பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், deep fake தனியுரிமை, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தேர்தல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கும் ஒரு deep fake பணிக்குழுவை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஷிண்டே கூறினார். 

    • இந்தியா கூட்டணி ஆபத்தான நிலையில் உள்ளது.
    • அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இன்று நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கூட்டணியில் உள்ள உட்பூசல்கள், பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால், இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறது. அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது.

    இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது மற்றும் பீகாரில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகியவை இந்தியா கூட்டணிக்குள் முக்கிய பிரச்சனையாக இருந்தது.

    பா.ஜ.க.வில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வேகத்துடன் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி உறுதியுடன் போட்டியிடுகிறது.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரியவருகிறது என்றார்.

    • அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதராக பொறுப்பேற்றார்.
    • இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.

    தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா உடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என டிரம்ப் சொல்லி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டிசம்பர் 10ம் தேதி முதல் டெல்லியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
    • விமானங்கள் ரத்து செய்ய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.

    புதுடெல்லி

    இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 3 நாளாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. நேற்றும்கூட ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்தது.

    உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.

    இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளது.

    • அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
    • வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி மீது டெல்லி போலீசில் டாக்டர் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி இன்று புகார் செய்துள்ளார். அந்த புகாரில், "தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை அளித்து டாக்டர் அன்புமணி மோசடி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
    • இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன.

    2019-23 க்கு இடையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் மொத்தம் 10,440 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் 335 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

    உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தக் காலகட்டத்தில் இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 222 வழக்குகளில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடைபெறும் பிற மாநிலங்களில் அசாம், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை அடங்கும்.

    1967 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட UAPA, மத்திய அரசை ஒரு நபர் அல்லது அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவிக்க அனுமதிக்கிறது மற்றும் பயங்கரவாதம் என்ற வரையறையின் கீழ் பாவிக்கப்படுகிறது. இது மற்ற வழக்குகளை போலல்லாமல் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக உரிமையை குறைக்கிறது.

    UAPA-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் பெறுவதும் கடினமானதாகும். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அதிகரித்து வரும் UAPA வழக்குகள் குறித்து சமூக ஆர்வலர்களும் ஜனநாயக சக்திகளும் கவலை தெரிவித்துவரும் சூழலில் அரசின் இந்த தரவு வந்துள்ளது. 

    • இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்தது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.

    இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

    இந்த இரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாகப் போட்டியிட்டதால் அவற்றின் மீது அதிக ஆர்வம் எழுந்திருக்கலாம்.

    விராட் கோலி, எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும் அவர்கள் இடம்பெற்றுள்ள அணி கூகுள் தேடலில் முதலிடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுடெல்லியில் பிரதமர் மோடி, அதிபர் புதின் ஆகியோர் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
    • அப்போது பேசிய பிரதமர் மோடி ரஷியர்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா வசதியை வழங்கவுள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தியா–ரஷியா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ரஷிய சுற்றுலாப் பயணிகளுக்கான 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் இலவச இ-விசா வசதியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த முடிவு இரு நாடுகளின் நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது.

    புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறுகையில், ரஷிய குடிமக்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா மற்றும் குரூப் டூரிஸ்ட் விசா வசதிகளை இலவசமாக வழங்க உள்ளோம். விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

    • டெல்லி விமான நிலையம் வந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
    • பிரதமர் மோடி அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார்.

    புதுடெல்லி:

    ரஷிய அதிபர் புதின் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார்.

    டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன்பின், இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். அதைத் தொடர்ந்து, புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின், அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் அதிபர் புதின் எழுதியதாவது:

    மகாத்மா காந்தி அகிம்சை மற்றும் உண்மை மூலம் நமது பூமியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு விலைமதிப்பில்லாத பங்களிப்பை செய்துள்ளார். அவரது செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது.

    மகாத்மா காந்தி ஒரு புதிய, நியாயமான, பன்முக உலக ஒழுங்கை நோக்கிய பாதையைக் காட்டினார். அந்த உலகம் இப்போது உருவாகி வருகிறது. சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு பற்றிய அவரது போதனைகளை இந்தியா இன்று உலக மக்களுடன் சேர்ந்து - சர்வதேச அரங்கில் அவரது கொள்கைகளையும், மதிப்புகளையும் பாதுகாக்கிறது. ரஷ்யாவும் அவ்வாறே செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் புதின் ரஷிய மொழியில் இந்தக் குறிப்பை எழுதியது குறிப்பிடத்தக்கது.

    • இண்டிகோ விமான நிறுவனம் நேற்று 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
    • இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக நேற்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இந்நிலையில், விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு தொடர்பான அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உள்ள அறிவுறுத்தல்களை விமான போக்குவரத்து இயக்குனரகம் திரும்பப் பெறுகிறது.

    இதுதொடர்பாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களிடமிருந்து செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதன் அவசியம் குறித்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, வாராந்திர ஓய்வுக்கு மாற்றாக எந்த விடுப்பும் வழங்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்ட பத்தியில் உள்ள அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதன்மூலம் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    ×