என் மலர்
நீங்கள் தேடியது "விமான ஊழியர்கள்"
- இண்டிகோ விமான நிறுவனம் நேற்று 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
- இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
புதுடெல்லி:
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக நேற்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு தொடர்பான அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உள்ள அறிவுறுத்தல்களை விமான போக்குவரத்து இயக்குனரகம் திரும்பப் பெறுகிறது.
இதுதொடர்பாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களிடமிருந்து செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதன் அவசியம் குறித்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, வாராந்திர ஓய்வுக்கு மாற்றாக எந்த விடுப்பும் வழங்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்ட பத்தியில் உள்ள அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதன்மூலம் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரோம்:
இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனால் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இத்தாலியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி கூறும்போது, விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றார்.
- விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையம் அருகே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் விமானம் வெடித்து சிதறி 67 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் சங்கம் கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கையால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் விபத்துகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.






