என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crew Member"

    • இண்டிகோ விமான நிறுவனம் நேற்று 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
    • இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக நேற்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இந்நிலையில், விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு தொடர்பான அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உள்ள அறிவுறுத்தல்களை விமான போக்குவரத்து இயக்குனரகம் திரும்பப் பெறுகிறது.

    இதுதொடர்பாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களிடமிருந்து செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதன் அவசியம் குறித்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, வாராந்திர ஓய்வுக்கு மாற்றாக எந்த விடுப்பும் வழங்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்ட பத்தியில் உள்ள அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதன்மூலம் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
    • சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு கப்பல் பாலத்தில் மோதியது.

    சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

     


    இந்த விபத்தில் சிங்கப்பூர் கொடியேந்திய சரக்கு கப்பல் சிக்கியது. இந்த கப்பல் மெர்ஸ்க் (Maersk) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இது டாலி என அழைக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சரக்கு கப்பல் விபத்தில் சிக்கும் முன், அதில் மின்தடை பிரச்சினை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மேரிலேண்ட் மாகாண கவர்னர் வெஸ் மூரே தெரிவித்தார். விபத்தில் சிக்கிய கப்பலில் இந்தியர்கள் இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    ×