என் மலர்
டெல்லி
- தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
- நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்.
இந்தியாவின் கலாச்சாரம், தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் மோடி புகழந்துள்ளார்.
மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
- தீபாவளியை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என்றார்.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டையில் அரிய பாரம்பரிய கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையோன குழுவின் 20வது அமர்வு கடந்த 8ம் தேதி துவங்கியது.
இந்தக் கூட்டத்தில் 78 நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பரிந்துரைகளை ஆய்வுசெய்த ஐ.நா. கலாசார நிறுவனம், தீபாவளி பண்டிகையை பட்டியலில் சேர்த்துள்ளது குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
இதுதொடர்பாக, மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவி காலத்தில், இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தீபாவளி நமது கலாசாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.
- நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அமித் ஷா மேலும் கூறியதாவது:-
இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளிடம் இதைப் பற்றி இரண்டு அமர்வுகளுக்குப் பிறகு விவாதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் ஒப்புக்கொண்டோம்... ஏன் 'இல்லை' என்று சொன்னோம்? 'இல்லை' என்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, அவர்கள் SIR பற்றிய விவாதத்தை விரும்பினர். இந்த சபையில் SIR பற்றிய விவாதம் இருக்க முடியாது என்பதை நான் தெளிவாக அறிவேன். SIR தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.
இந்தியாவின் EC மற்றும் CEC அரசாங்கத்தின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதிலளிப்பார்கள்? தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் சொன்னபோது, உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
இந்த விஷயத்தில் விவாதம் தொடர்பாக முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடை ஏற்பட்டது. இது மக்களுக்கு இதைப் பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்ற தவறான தகவல் பரவியது. இந்த நாட்டில் விவாதங்களுக்கு நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களிலிருந்து விலகிச் செல்லாது. எந்த விஷயமாக இருந்தாலும், நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
இந்திய வாக்காளர் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்பதை எஸ்ஐஆர் உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின்போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற்கொள்வதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வெளிநாட்டு நாயகன் மீண்டும் தன்னால் முடிந்ததை செய்கிறார். வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆனால், ராகுல் காந்தி வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஜெர்மனி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர். பீகார் தேர்தலின்போதும் அவர் வெளிநாட்டிலும், பின்னர் வனச்சவாரியும் மேற்கொண்டார்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
- நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
- அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காலனியை வீரியவர் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர். இதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்குட்பட்ட கார்கர்டூமா வளாகத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த ராகேஷ் கிஷோர் மீது சிலர் காலணி வீசித் தாக்கி உள்ளனர்.
அவர்களை மற்ற வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அடிவாங்கிய ராகேஷ் கிஷோர் அவர்களை அடிக்காபாய்ந்து சனாதன தர்மம் வாழ்க என கோஷமிட்டுள்ளார்.
ராகேஷ் கிஷோரை காலணியால் தாக்குபவர்கள் யார் என்பது குறித்தும் எந்தவித தகவலும் இல்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார்.
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்யநாதெல்லா இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக சத்ய நாதெல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது எனபதிவிட்டுள்ளார்.
சத்யநாதெல்லாவை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யநாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
ஏற்கனவே, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, இலங்கை இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்தது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்த மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 21-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2-வது போட்டி 23-ம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. 26, 28, 30 ஆகிய தேதிகளில் என கடைசி 3 போட்டிகளும் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் விவரம் பின்வருமாறு:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், ரிச்சா கோஷ், ஜி.கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி சர்மா.
- தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்றது.
- 27 ஆண்டுக்கு பிறகு தலைநகரில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.
புதுடெல்லி:
அது ஒரு அரசியல் கட்சி அலுவலகம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைவரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
கட்சியின் தலைவரான சொக்கலிங்கம் அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகம் என்ற தொண்டர், என்ன தலைவரே, அடுத்த ஆண்டும் நமது வெற்றிப் பயணம் தொடருமா என கேட்டார். அதற்கு தலைவர், நாம் செய்யற வேலைகளில் தான் வெற்றியின் சதவீதம் அதிகரிக்கும். எனவே தீவிரமாக வேலை செய்யணும் என்றார்.
என்ன செஞ்சு பலன் கிடைக்க மாட்டேங்குதே தலைவரே என சண்முகம் நொந்து கொண்டார்.
அப்படி சொல்லாதே, நமது செயல் திட்டங்களைப் பார்த்து மக்கள் நம்மை மதிச்சு வாக்களிக்கணும். அப்படி நாம் நடந்துக்கணும் என்ற சொக்கலிங்கம்,இப்படி செஞ்சதாலே தான் போன ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என கூறினார்.
மேலும், 27 ஆண்டுக்கு பிறகு ஆட்சியைப் பிடிச்சுதுன்னா சும்மாவா என அசால்ட்டாக தெரிவித்தார்.
அப்படியா, எப்படின்னே அவங்களால முடிஞ்சது? அது பற்றி விவரமா சொல்லுங்கன்ண்ணே? என்றார் சண்முகம்.
இதையடுத்து, சொக்கலிங்கம் கூறியதன் விவரம் வருமாறு:
டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன் முடிவுகளின்படி, பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றது.

தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
2015-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 3 இடங்களையும், 2020-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 8 இடங்களையும் பெற்ற பா.ஜ.க. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் 27 ஆண்டுக்குப் பிறகு பா.ஜ.க. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கடந்த செப்டம்பரில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது என நினைவு கூர்ந்தார்.
ஓகேண்ணே, சொல்லிட்டீங்கள, இனிமே பாருங்க எப்படி தீயா வேலை செஞ்சு நமது கட்சியை ஆட்சிக்கு வரவைக்கறோம்னு பாருங்க என்று சொன்னபடியே கட்சி அலுவலகத்தை விட்டுக் கிளம்பினார் சண்முகம்.
- பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
- இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் வெவ்வேறு நடை, உடை, பாவனைகளை பார்க்க முடியும்.
காஞ்சிபுரம் பட்டு சேலையில் தங்க சரிகை இருக்கும். தங்க சரிகையில் நூல்கள் சேர்க்காவிட்டால் அதில் ஒன்றும் இல்லை.
150 கோடி மக்களின் வாக்குகளை சேர்த்து பின்னப்பட்ட துணி தான் நமது இந்தியா.
பல மதங்கள், பல சமுதாயங்கள், பல மொழிகளை கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்ததே நம் நாடு.
பாஜக தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கவேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ் என்று எண்ணுகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் சட்ட விரோதமானது. அதை நிறுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்தியாவின் தலைமை நீதிபதிஏன் நீக்கப்பட்டார்?
நாட்டின் தலைமை நீதிபதி மீதே நம்பிக்கை இல்லையா?
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறிப்பிட்ட நபர்களை தேர்தல் ஆணையராக தீர்மானிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்தார்.
- கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.
- பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று இண்டிகோ விமான நிறுவன பிரச்சனை எழுப்பப்பட்டது.
புதுடெல்லி:
மத்திய அரசின் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்காத இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடி சிக்கித் தவிக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்றன் மக்களவையில் இன்று இண்டிகோ பிரச்சனை எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு பதிலளித்துப் பேசியதாவது:
எந்த விமான நிறுவனமும் சரி, அது எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் சரி. பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது.
கடுமையான, தகுந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இதுவரை ரூ.750 கோடி பயணிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் உடமைகள் உரிய முறையில் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டு இருக்கிறதா என்பதையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.
பெங்களூருவில் 121, ஐதராபாத்தில் 58, சென்னை 41, கேரளா 4 என இன்றும் 200க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்தாகின. தொடர்ந்து ரத்து அறிவிப்பு வெளியாகிக் கொண்டே வருவதால் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளை குறைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
- பாகுபலி: தி எபிக் திரைப்படம் வரும் 12-ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.
- வரலாற்று கதைக்களத்துடன் உருவான இப்படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
புதுடெல்லி:
நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் கோடிகளில் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றன. இத்துடன், வரலாற்று கதைக்களத்துடன் உருவான இந்தப் படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
இதையடுத்து, இவ்விரண்டு திரைப்படங்களையும் இணைத்து 'பாகுபலி: தி எபிக்' எனும் முழு நீளப் படத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். 'பாகுபலி: தி எபிக்' படம் வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.
ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்ட 'பாகுபலி: தி எபிக்' படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதற்கிடையே, ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் இருக்கும் பிரபாசின் நிலைமை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தான் டோக்கியோவில் இல்லை என்றும் பாதுகாப்புடன் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார் என இயக்குனர் மாருதி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பிரபாசின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
- சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும்.
புதுடெல்லி:
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைமாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை வருகிற ஜனவரி 15-ந்தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள்-1990-ன் விதி 3-ன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்படலாம். கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். ஜனவரி 15-ந்தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






