என் மலர்
டெல்லி
- தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம்.
- குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் தேர்வை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தலைமை நீதபிதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது" எனத் தெரிவித்தது.
முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான NEET-UG தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தது.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார்.
- இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தது.
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல் மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா இழந்தார். இந்த ஊழல் விவகாரத்தில் அவரை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
இந்த வழக்கில் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிசோடியா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினர். அவர் வெளிநாடு செல்வதை தவிர்க்கும் நோக்கில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர். ஜாமின் காலத்தில் சாட்சியங்களை கலைக்கும் செயலில் சிசோடியா ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் டெல்லி அமைச்சர் அதிஷி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பொய்யான வழக்கில் மணீஷ் சிசோடியா அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தது. தற்போது ஜாமினில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று உண்மை வென்றது, கல்வி வென்றது, குழந்தைகள் வென்றுள்ளனர் என தெரிவித்தார்.
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்ததை கூறுகையில், அமைச்சர் அதிஷி மேடையில் தேம்பி தேம்பி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த வழக்கில் சுமார் 17 மாதம் கழித்து சிசோடியாவுக்கு ஜாமின் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் கேரளா எம்.பி. ஹிபி ஏடன் பேசும்போது, "முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும், "முல்லை பெரியாறு அணையால் அருகிலுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தண்ணீர் தமிழகத்திற்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்பதே எங்களின் கோஷம். மத்திய அரசு புதிய அணை கட்டி கேரளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரளா தெரிவித்து வந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி பெற்றது. தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் பயனடைகின்றன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றமும் வல்லுநர்கள் குழுவும் திட்டவட்டமாக தெரிவிததுவிட்ட நிலையிலும் கேரளா மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பல ஆண்டுகளாக கேரளா எதிர்த்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
- மாநிலங்களவை தலைவர் அதிகார தொனியில் பேசியதால் ஜெயா பச்சன் கடுங்கோபம்.
- மாநிலங்களவை தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில பாஜக எம்.பி.க்கள் ஜெய பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைத்தனர். இவ்வாறு தன்னை அழைப்பதற்கு ஜெயா பச்சனுக்கு உடன்பாடு இல்லை.
தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும், ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்கள் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்து வந்தனர். இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், ஜெக்தீப் தன்கர் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்ற தொனியில் பதில் அளித்தார்.
இதனால் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய பச்சன் கடும் வாக்குவாதம் செய்தார். மாநிலங்களவை தலைவரிடம் இருந்து எனக்கு மன்னிப்பு தேவை என்றார். ஜெயா பச்சனுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த ஜெயாபச்சன் கூறுகையில் "ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. தொல்லை கொடுப்பது போன்ற வார்தைகள். நீங்கள் பிரபலங்களாக (celebrity) இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் இப்போது பேசுவதுபோல் யாரும் பேசியதில்லை. இது பெண்களுக்கு மிகவும் அவமரியாதை" இவ்வாறு ஜெயா பச்சன் தெரிவித்தார்.
- 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக கார்கே குற்றம் சாட்டினார்.
- சம்பந்தப்பட்ட புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்
என்சிஆர்டி புத்தகங்களில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எழுப்பிய அவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான என்சிஆர்டி பாடப்புத்தகங்களில் அரசமைப்பு முகவுவுரை நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசியமத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அந்த குற்றச்சாட்டை மறுத்து 6 வகுப்பு பாடத்தில் முகவுரை குறித்த குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தர்மேந்திர பிரதான் கூற்று தவறானது என்றும் மாநிலங்களவையில் தவறான செய்திகளை தந்திருக்கிறார் என்றும் அவர் மீது காங்கிரஸ் நோட்டிஸ் விடுத்துள்ளது.
நேற்று மாநிலங்களவைத் சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கரிடம் இது தொடர்பான கடிதத்தை, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வழங்கினார். அதில், தர்மேந்திர பிரதானின் கூற்று பொய்யானது என்றும் அவையைத் தவறாக வழிநடத்துகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்குச் சான்றளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட 3 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை இணைந்து அவற்றில் அரசியலமைப்பு முகவுரை குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மாநிலங்களவையில் தவறான தகவல்களை வழங்கிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரிதான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜெகதீப் தன்கரை ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தினார்.
- மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
- மனிஷ் சிசோடியா கடந்த 17 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
இதைத் தொடர்ந்து மனிஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
விசாரணையை தொடர்ந்து மனிஷ் சிசோடியாவிற்கு நிபந்தணைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி மணிஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அமலாக்கத்துறை சார்பில் மணிஷ் சிசோடியா கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று முன்வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
- இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.
- மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இன்று மாலத்தீவுக்கு செல்கிறார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஜெய்சங்கரின் பயணம் நோக்கமாக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயப்படும் என்று தெரிவித்தது. ஜெய்சங்கர் தனது பயணத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.

மேலும் மாலத்தீவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். இதில் ஒப்பந்தங்கள் கையெழுத்ததாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவில் அதிபராக பதவியேற்றவுடன் முகமது முய்சு தனது நாட்டில் உள்ள இந்திய படைகளை வெளியேற உத்தரவிட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.
மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்த்தனர். இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதித்தது.
இதையடுத்து இந்திய எதிர்ப்பு நிலையை அதிபர் முகமது முய்சு கைவிட்டார். அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.
- நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவிற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 முழுவதும் அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.
இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ர்ஜூன கார்கே நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில், " ஒருமுறை சாம்பியன்.. எப்போதும் சாம்பியன்!
நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத ஆர்வத்திற்குச் சான்றாகும்.
உங்கள் குறிப்பிடத்தக்க 89.45 மீ எறிதல் உங்களுக்கு ஒரு மேடைப் பூச்சுக்கு உதவியது மட்டுமல்லாமல் ஒரு தேசத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது.
பிரகாசித்து புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருங்கள். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்பிறகு பல்வேறு தரப்பினரும் கனிமொழி எம்.பி., தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகம் அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து சுமார் 4 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத்தலைவர் ராஜேஸ்குமார், தமிழக எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் மீனவ பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
- எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார்
- கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர்
பாராளுன்றத்தில் நேற்று நடத்த மக்களவைக் கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார். இதனைப் பார்த்த கிரண் ரிஜிஜூ தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ராகுல் காந்தி தூங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
உடனே, கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர். ராகுல் காந்தி தூங்கும் நிலையில் உள்ள அந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றன. ராகுல்காந்தி கண்களை மூடியபடி அமர்த்திருந்தாரா அல்லது தூங்கிக்கொண்டிருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக நாட்டில் உள்ள பல்வேறு சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது, வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதல் உள்ளிட்ட 44 திருத்தங்களை வக்பு சட்டத்தில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன
- உச்சநீதிமன்றத்தில் லாப்டா லேடீஸ் திரைப்படம் திரையிடப்படுகிறது.
- லாப்டா லேடீஸ் தயாரிப்பாளர், இயக்குநர் திரையிடலில் கலந்து கொள்ள உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் இன்று லாப்டா லேடீஸ் என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனை தலைமை நீதிபதிகள், அவர்களது குடும்பத்தார் மற்றும் அலுவலர்கள் கண்டுகளிக்க உள்ளனர். பாலின சமத்துவம் பேசும் இந்த படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படத்தின் விசேஷ திரையிடலின் போது படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான அமீர் கான், இயக்குநர் கிரன் ராவ் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளயாகி உள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த படத்தின் திரையிடலுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று உச்சநீதிமன்றத்தின் நிர்வாக கட்டிட வளாகத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் லாப்டா லேடீஸ் திரையிடப்பட உள்ளது. இந்த திரையிடலில் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள உள்ளனர். இந்த படம் இன்று மாலை 4.15 முதல் 6.20 மணி வரை திரையிடப்பட உள்ளது.
- இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
- பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் நேற்று மோதின.
இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து, வெண்கலம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
மேலும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் எனவும் இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.






