என் மலர்
அசாம்
- மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
- சுதந்திரம் பெற்றதில் இருந்து அசாமில் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.
அசாமில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஏஐயுடிஎஃப்-ஐ சேர்ந்த எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கூறியதாவது:-
மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமது கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அசாமில் உள்ள முஸ்லிம்கள் பின்தங்கிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர். முஸ்லிம்களுக்கு அரசு வேலைகள் மற்றும் இதர அரசு திட்டங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனால் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கொடுத்த எண்ணிக்கை இல்லை.
சுதந்திரம் பெற்றதில் இருந்து அசாமில் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் பின்னர் அந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சில புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமில் 34 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை இருந்தது. மேலும் 2-3 சதவீதம் அதிகரிக்கலாம். ஆனால், முதல்வர் கூறியுள்ள புள்ளிவிவரம் உண்மையல்ல என்றார்.
சமீபத்திய திங் கும்பல் கற்பழிப்பு (அசாம் மைனர் கும்பல்) சம்பவம் மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் மாநிலத்தில் 23-24 கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பேசிய அனுமில் இஸ்லாம், சமீப காலங்களில் மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அசாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23-24 கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்று மட்டுமே முதல்வர் பேசி வருகிறார். அவர் மற்ற பலாத்கார சம்பவங்களை குறிப்பிடவில்லை என்று கூறினார்.
மேலும், பாஜக தலைமையிலான அசாம் அரசாங்கத்தை தாக்கி பேசிய, அனுமில் இஸ்லாம், திங் கும்பல் கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அரசாங்கம் உண்மையான உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
- ஹேமந்த் சோரன் ஜெயிலுக்கு சென்றதால் முதல்வராக பதவி ஏற்றார்.
- ஹேம்ந்த் சோரன் மீண்டும் முதல்வராக, தனது பதவியை ராஜினாமா செய்ததால் அதிருப்தி.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.
கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைத்தது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்காக சம்பாய் சோரன் பதவி விலகினார்.
பின்னர் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பாஜக-வில் இணையப் போவதாக செய்தி வெளியாயின. கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலருடன் டெல்லி சென்றார்.
இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அதிருப்தியில் உள்ள சம்பாய் சோரன் தனது அடுத்த நகர்வாக புதிய கட்சியை துவக்கி பாஜக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வது, அல்லது பாஜக-வில் இணைவது ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (30-ந்தேதி) தனது ஆதரவாளர்களுடன் பாஜக-வில் இணைய இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் "ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரான புகழ்பெற்ற பழங்குடியின தலைவர் சாம்பாய் சோரன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராஞ்சியில் பாஜக கட்சியில் இணைய இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
சாம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் ஜூலை 3-ந்தேதி தனது முதல்வர பதவியை ராஜினாமா செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அப்படி வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு சென்று ஜவுளித் தொழில் வேலைக்காக செல்கின்றனர்.
கவுகாத்தி:
அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வங்கதேசத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் ஒரு இந்து கூட இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டறியப்படவில்லை.
இந்துக்கள் இந்தியாவிற்கு இடம்பெயராமல், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் தங்கி, போராடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள், ஆனால் வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு, கோயம்புத்தூர் சென்று ஜவுளித் தொழிலில் வேலை செய்ய உள்ளனர்.
இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- 14 வயது மாணவி கோச்சிங் கிளாஸ் சென்று திரும்பியபோது கடத்தி வன்கொடுமை.
- மூன்று குற்றவாளிகள் ஈடுபட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட செய்தி இந்தியாவையே உலுக்கியது. இந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பெண் டாக்டர்கள் இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கு அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கோச்சிங் கிளாஸ் சென்றுவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பும்போது மூன்று பேர் வழிமறித்து மறைவான இடத்திற்கு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக தஃபுஜல் இஸ்லாம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் கிரைம் சீனுக்காக (குற்றம் நடந்தது எப்படி என குற்றவாளியை நடித்துக்காட்டிச் சொல்லி போலீசார் வீடியோ ஆதாரம் எடுப்பது) குற்றம் நடைபெற்ற இடத்திற்கு தஃபுஜல் இஸ்லாமை அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசார் பிடியில் இருந்து தஃபுஜல் இஸ்லாம் தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை விரட்டிச் செல்லும்போது அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது போலீஸ் ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.
தஃபுஜல் இஸ்லாம் உயிரழிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். எங்கள் கூட்டு மனசாட்சியைத் தாக்கியுள்ளது. நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் மற்றும் குற்றவாளிகளை நீதி முன் நிறுத்வோம். விரைவான நடவடிக்கையை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- ‘உல்பா’ அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
- வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் 78-வது சுதந்திர தின விழாவில் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது உரையை முடித்த சில நிமிடங்களில் 'உல்பா' அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 'அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டமிடப்பட்டி ருந்ததது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை' எனத் தெரிவித்தனா்.
மேலும், அதனுடன் 19 குண்டுகள் வைக்கப்பட்ட சரியான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியலை 'உல்பா' அமைப்பு வெளியிட்டது. ஆனால், மீதமுள்ள 5 இடங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை என மின் அஞ்சலில் தெரிவித்தனா்.
இதையடுத்து, ராணுவம் உள்பட பாதுகாப்புப் படையினா் மற்றும் வெடி குண்டு செயலிழப்பு படைகள் இணைந்து மாநிலம் முழுவதும் 'உல்பா' அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
அதில், குண்டு வெடிப்பு நடத்த திட்டமிடப்பட்ட 24 இடங்களில் கவுகாத்தியில் உள்ள 8 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என போலீசாா் தெரிவித்தனா்.
இதில், அசாம் முதல்வா், பிற அமைச்சர்களின் அதிகாரபூா்வ இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சாதனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொழில்நுட்ப கோளாறால் வெடிகுண்டுகள் வெடிக்காததால் உல்பா அமைப்பே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு தகவலை அளித்ததால், வெடிகுண்டுகளை காவல் துறையினா் கண்டெடுத்தனா். இதனால் பெரும் நாசவேலை தவிா்க்கப்பட்டது.
- கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
- இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா பெண் டாக்டர் கொலையை தொடர்ந்து, பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவிகள் யாரும் வெளியில் தனியாக செல்ல வேண்டாம் என்றும் தெரியாத மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் பழக வேண்டாம் என்று அசாமில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை மருத்துவ கல்லூரி நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது.
பெண்களுக்கு அறிவுரை வழங்குவதை விட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கல்லூரி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த சுற்றறிக்கை தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
- பா.ஜ.க. ஆட்சி செய்யும் உ.பி.யில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் உள்ளது.
- அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனையொட்டி பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக யோகி அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், " பேஸ்புக்கில் இந்து பெயர்களை வைத்துக்கொண்டு இந்து பெண்களை கவர்ந்து சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தான் அந்த பையன் இந்து இல்லை என்பது அந்த பெண்ணிற்கு தெரியவருகிறது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
- 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
- லவ் ஜிகாத் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும்
லவ் ஜிகாத்
இனம் மதம் மொழி கடந்ததுதான் காதல் என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. இதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் காதலுக்கு தடையாக பெற்றோர், குடும்ப அமைப்புகள் இருந்து வந்த காலம் மாறி அரசாங்கமே தடை விதிக்கும் காலம் வந்துவிட்டது என்ற கருத்து நாளுக்குநாள் நடந்து வரும் மாற்றங்களால் உறுதிப்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக இந்து- இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கான சுதந்திரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஜனநாயக விரும்பிகள் கருதுகின்றனர். இந்து மதப் பெண்களை இஸ்லாமிய மத ஆண்கள் காதலித்து மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொள்வதாகக் குற்றம் சாட்டி தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் முன்வைக்கும் பதம் 'லவ் ஜிகாத்'.

ஆயுள் தண்டனை
அரசியல் களத்திலும் சமீக காலங்களாக இந்த பதத்தின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி அதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு, லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது.
இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

தற்போது அந்த சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்துள்ள உ.பி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னர் பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருந்த நிலையில் தற்போது அதுபேன்ற திருமணங்கள் குறித்து யார் புகார் அளித்தலும் நடவடிக்கை எடுக்க முடியும் சட்டத்தில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது
அசாம்
அசாமில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு உ.பியை போன்று லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்க உறுதி பூண்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, தேர்தலின்போதே லவ் ஜிகாத் குறித்து நிறைய பேசினோம், லவ் ஜிகாத் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டதை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அசாம் மாநில அரசு பணிகளில் அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற விதியையும் கொண்டுவருவோம் என்று தெரிவித்தார்.
லவ் ஜிகாத் குறித்த பாஜக ஆளும் மாநில அரசுகளின் இந்த முடிவுகள், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கிறது என்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
- அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
- ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி:
அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
3 முதல் 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது வனப்பகுதியை 2 சதவீதம் அதிகரிக்க உதவும். இதனால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் நமக்கு சாதகமான தாக்கத்தைக் காண்போம்.
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒரே நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.12 கோடி மரக்கன்றுகளை நட்டு 90 சதவீதம் உயிர் பிழைத்துள்ளது.
மரம் நடும் பிரசாரத்தை செயல்படுத்த மாநில அரசு ஏற்கனவே ராணுவம், விமானப்படை, பள்ளிகள், கல்லூரிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் மத்தியப் படைகளை இணைத்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகளை அகற்றி மீட்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காடு வளர்ப்பு இயக்கங்களை அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
- ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது.
- ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 30 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கிறது எனக் கூறிய அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
"புள்ளி விவரங்கள் மாதிரியின்படி அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இதன்படி 2041-ல் அசாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும். இது நிஜம், யாராலும் இதை தடுத்து நிறுத்த முடியாது.
ஒவ்வொரு 10 வருடத்திற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது. முஸ்லிம் மக்களை தொகையை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் காங்கிரசின் பணி முக்கியமானது.
மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான தூதராக ராகுல் காந்தி ஆனால், அவருடைய பேச்சை மட்டும் கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும்" என்றார்.
- ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து செய்தி வழங்கிக்கொண்டிருந்தார்
- கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஆற்றின் கிராம மக்கள் சூழ நின்றுகொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
கேமராவை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க்கும் போது ஈரமான மணல் பகுதியால் நிலைதடுமாறி அவர் ஆற்றில் விழுந்தார். சமாளித்துக்கொண்டு நீந்தி வந்த அவரை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் மேலே வர முடியாமல் அவர் திணறினார். கடைசியாக ஒருவழியாக சமாளித்துக்கொண்டு கிராம மக்களின் உதவியுடன் அவர் மீண்டு வரும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.
இதுதொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில்,
பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும். ஜஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை- அசாம் முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | On 4 Army personnel who have lost their lives in action in J&K's Doda, Assam CM Himanta Biswa Sarma says," The government will give an answer to Pakistan-sponsored terrorism. It is our duty to maintain peace in Jammu & Kashmir." pic.twitter.com/l2Fk750DZx
— ANI (@ANI) July 16, 2024






