search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 CRORE"

    • ரூ.3 கோடியில் கோளரங்கம் டிஜிட்டல் மயமாகிறது.
    • ஓராண்டில் பயன்பாட்டுக்கு வருகிறது

    திருச்சி:

    திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் உள்ள கோளரங்கத்தை டிஜிட்டல் மயமாக்க ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் அண்ணா அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூடங்கள், முப்பரி மாண திரையரங்கம், கோளரங்கம், அறிவியல் பூங்காக்கள் மற்றும் பரி மாண வளர்ச்சி பூங்கா உள்ளிட்டவை உள்ளன.

    இங்கு மாணவ, மாண விகள் பயன்பெறும் வகையில் அறிவியலை செயல்முறைகள் மூலமாக விளக்கிக் கூறுதல், இரவு வான் நோக்குதல் அறிவியல் மற்றும் மருத்துவ நிபுணர்களை சந்தித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நட த்தப்பட்டு வருகின்றன.

    இம்மையத்தை பார்வை யிட மாதந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் வந்து சென்ற நிலையில் கொரோனா பரவலுக்குப் பின் 6 ஆயிரமாக குறைந்துள்ளது.

    இங்குள்ள கோளர ங்கத்தில் இரவு வான் காட்சிகள், கோள்கள் மற்றும் இதர வான் பொருள்கள், பழமையான முறையில் ஆட்டோ மெக்கானிக்கல் மற்றும் சிலைட் புரொஜெக்டர் மூலம் அசையாத பொருட்களாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

    எனவே இந்த கோளர ங்கத்தை நவீன கருவிகளைக் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என அறிவியலாளர்கள் , மாணவ, மாணவிகள்கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கோளரங்கத்தை டிஜிட்டல் மயமாக்க சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் கூறியதாவது :-

    தற்போதைய நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப கோளரங்கத்தை டிஜிட்டல் மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கன பணி இம்மாத இறுதியில் தொடங்கப்ப டவுள்ளது. அதன்பின் இங்குள்ள கோளரங்கம் மட்டும் மூடப்படும். மற்ற செயல்பாடுகள் வழக்கம் போல் நடைபெறும்.

    இப்பணிகள் ஓராண்டு க்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன ஒளிப்படக்கருவிகள் மூலம் வான் காட்சிகள் மற்றும் முழுக்கோள்களை காட்சிப்படுத்தும் போது இயங்கும் படங்களாக அதி உச்ச துல்லியப் படக்காட்சி களாக இருக்கும் என்றார்.  

    ×