என் மலர்
ஆந்திர பிரதேசம்
- முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சின்னராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது.
- முன்னாள் எம்.பி. மகந்தி பாபுவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடமில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது. மேடை ஆட்டம் கண்டது. எனினும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மேடையில் சிந்தமனேனி பிரபாகர், பீதலா சுஜாதா, மகந்தி பாபு மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேடை மொத்தமாக சரிந்தது. மேடையில் இருந்த சீனராஜப்பா, உள்ளிட்ட அனைவரும் மேடையுடன் விழுந்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னாள் எம்.பி. மகந்தி பாபுவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
- ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம்.
திருப்பதி:
சர்க்கரை நோய் இன்று வேகமாக பரவி வருகிறது ஒரு காலத்தில் 45 வயதுக்கு மேல் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை பணக்கார நோய் என்று கூறி வந்தார்கள்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தை முதல் சக்கரை நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனாலும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என ஒரு சிலர் புலம்புவதையும் காணமுடிகிறது.
இந்த நிலையில் சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை தேவை இல்லை. இன்சுலின் தாவரத்தின் 2 இலைகள் தின்றால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும் என ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் மொட்டமறி சந்தீப் கூறியுள்ளார்.
இவர் அவரது வீட்டு மாடியில் சிறிய தோட்டம் அமைத்து அதில் இன்சுலின் செடிகளை வளர்த்து வருகிறார்.
இதன் மூலம் தனது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்.
"நான் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு கடந்த 7 வருடங்களாக இன்சுலின் செடியின் இலைகளை உட்கொண்டு வருகிறேன். மேலும், இந்த 7 ஆண்டுகளில் நான் எந்த டாக்டரையும் பார்க்கவில்லை.
இன்சுலின் தாவரங்களை நான் வழங்கி வருகிறேன். "இலைகளை தவறாமல் எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்த சர்க்கரை அளவு குறைவதைக் கண்டேன்.
ஒரு நாளைக்கு 2 இலைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். மேலும் காலையில் ஒரு இலையையும் மாலையில் மற்றொரு இலையையும் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், நரசராவ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்பி (வயது40). இவர் தனது கணவனை இழந்த நிலையில் மகன் அப்பாஸ்(20) என்பவருடன் வசித்து வந்தார்.
ஜான்பிக்கும், அதேபகுதியை சேர்ந்த பாஜி(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஜான்பியின் மகன் அப்பாசுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அப்பாஸ் தனது தாய் ஜான்பி மற்றும் பாஜியை கண்டித்துள்ளார். அதன்டி ஜான்பி, பாஜியிடம் பழகுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜி, அதே பகுதியை சேர்ந்த அல்லாகசம் என்பவருடன் சேர்ந்து, அப்பாைசை திட்டமிட்டு கொலை செய்தனர். மகன் பிணத்தை பார்த்து கதறிய ஜான்பி கொலையாளிகளை, கொலை செய்து பழி தீர்ப்பேன் என சத்தியம் செய்து சபதம் எடுத்துள்ளார்.
இந்த கொலை நிரூபிக்கப்பட்ட நிலையில், பாஜி மற்றும் அல்லாகசம் ஆகியோர் கைது செய்து, ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 6 மாத காலம் சிறை தண்டனைக்கு பிறகு 2 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இதில் பாஜி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.
ஜான்பி தனது உறவினர்கள் சிலரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, 2 பேரையும் கொலை செய்ய பல நாட்கள் திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜான்பி தனது உறவினர்களுடன் சேர்ந்து, அல்லாகசமை குத்தி கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான்பிக்கு, ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. 3 மாத காலம் ஜெயில் தண்டனை அனுபவித்தார். பிறகு, ஜாமினில் அவர் வெளியே வந்தார்.
தலைமறைவாக இருந்த பாஜியை தேடி ஜான்பி அலைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜி, சொந்த ஊரான நரசராவ்பேட்டைக்கு வந்தார்.
இந்த தகவல் அறிந்த ஜான்பி, தனது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து பாஜியையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜான்பி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மகனை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 2 பேரை தாய் காத்திருந்து பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.
- வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ், பைக் மூலம் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக மலைபாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர்.
அப்போது-7வது மைலில் சென்றபோது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் நடந்து சென்ற பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்களுடன் சேர்ந்து சிறுத்தையை விரட்டிச் சென்றனர்.
பொதுமக்கள் விரட்டி வருவதை கண்ட சிறுத்தை சிறுவனை கீழே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. சிறுத்தை தாக்கியதில் கவுசிக் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஸ்வின்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கூண்டு வைக்க உள்ளதாக தெரிவித்தனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிப்பிரி நடைபாதை அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது.
இதனால் வனப்பகுதியில் உள்ள சிறுத்தை,யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வந்து பக்தர்களை தாக்கி விட்டு செல்கிறது.
அலிப்பிரி நடைபாதையில் வனவிலங்குகள் வராமல் தடுப்பது குறித்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து பக்தர்களை தாக்கும் சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- லட்சுமப்பா கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.
- அணை அருகே கிடந்த அவரது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:
கர்நாடக மாநிலம் கமலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமப்பா (வயது 59). இவர் அப்பகுதியில் உள்ள பிசியோதெரபி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.
லட்சுமப்பா கடந்த மாதம் 29-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.
பின்னர் அவரது குடும்பத்தினர் லட்சுமப்பாவை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். லட்சுமப்பா கடந்த 20 நாட்களுக்கு மேலாக திருப்பதியில் அனாதையாக சுற்றித்திரிந்தார்.
குடும்பத்தினர் தன்னை அனாதையாக விட்டுச் சென்றதை எண்ணி விரக்தி அடைந்தார்.
இதனால் பாபவிநாச அணைக்கு சென்று தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் அவரது உடலை மீட்டனர். அணை அருகே கிடந்த அவரது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் இன்று காலை திருப்பதிக்கு வந்தனர். லட்சுமப்பாவை திருப்பதியில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
கமலாபுரத்திற்கு வந்து இருப்பார் என எண்ணி நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். நாங்கள் அவரை அனாதையாக விட்டு வரவில்லை என போலீசாரிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
- பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள எலூரை சேர்ந்தவர் எட்லா பிரான்சிகா (வயது 35). இவர் அங்குள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் வரவேற்ப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவருடைய கணவர் ராஜமுந்திரியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரான்சிகா கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரான்சிகா வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அவரது வீட்டின் அருகே வந்தபோது பைக்கில் வந்த 4 பேர் அவர் மீது ஆசிட் வீசினர்.
இதில் அவரது தலை மற்றும் முகம் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தபடி சாலையில் விழுந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓடிச்சென்று பிரான்சிகாவை மீட்டனர் .
சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக பிரான்சிகாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார் .
அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்சிகா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஆசிட் வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
பிரான்சிகா மீது அடையாளம் தெரியாத 4 பெண்கள் ஆசிட் வீசி விட்டு சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் போலீசாருக்கு மேலும் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர்.
- போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவாமி ஞானானந்தா ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி பூர்ணானந்தா. அந்த ஆசிரமத்தில், அனாதை இல்லமும், முதியோர் இல்லமும் இயங்கி வருகின்றன.
அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்களில், 15 வயதான ஒரு சிறுமி, விஜயவாடாவில் சாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
தன்னை சுவாமி பூர்ணானந்தா சித்ரவதை செய்ததாகவும், திரும்ப திரும்ப பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை நேற்று கைது செய்தனர்.
- திருப்பதியில் ராமானுஜர் சந்திப்பு முதல் ரேணிகுண்டா வரை ரூ.5.61 கோடியில் சாலை அமைக்கப்படும்.
- மழை காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது.
திருப்பதி:
திருப்பதி அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காக ரூ.4.15 கோடியில் கூடுதலாக லட்டு கவுண்ட்டர் கட்டப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.
திருமலை எஸ்.வி.சி. பகுதியில் 18 பிளாக்குகளில் 144 அறைகளின் புனரமைப்பு பணிகள் ரூ.2.35 கோடியில் மேற்கொள்ளப்படும்.
திருப்பதியில் ராமானுஜர் சந்திப்பு முதல் ரேணிகுண்டா வரை ரூ.5.61 கோடியில் சாலை அமைக்கப்படும்.
விரைவில் சத்தீஸ்கரின் தலைநகரான காந்தி நகர், குஜராத் மற்றும் ராய்ப்பூரில் ஏழுமலையான் கோவில்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருமலைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதை தடுக்க அலிபிரியில் சோதனை சாவடியில் பலப்படுத்தப்படும். இதற்காக மாநில அரசுடன் கலந்தாலோசித்து தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்ப வாகன ஸ்கேனர்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 69 ஆயிரத்து 879 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 29 ஆயிரத்து 519 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
மழை காரணமாக கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது. பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த பிரியா என்ற பெண் அவர்களை நாடினார்.
- சாமியார் ஒருவர் பெண்களை அமர வைத்து பூஜை செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் ஏழ்மையால் அவதி அடைந்து வந்தார். மேலும் தனது 2 மகள்களுக்கு வயதாகியும் திருமணம் ஆகாததால் வேதனை அடைந்தார்.
இவர்களது பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த பிரியா என்ற பெண் அவர்களை நாடினார். அமானுஷ்ய பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்ந்து விடும் என கூறினார்.
இதனை நம்பி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகள்களுடன் கடப்பாவிற்கு சென்றனர். புரோட்டூரில் இருந்த கும்பல் ஒன்று நள்ளிரவில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்தனர்.
அப்போது சாமியார் ஒருவர் பெண்களை அமர வைத்து பூஜை செய்தார். அந்த நேரத்தில் இளம்பெண்களை மயக்கி கும்பல் ஒன்று பலாத்காரம் செய்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த இளம்பெண்கள், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
விபச்சார கும்பல் அமிர்தா நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்து பிரித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பொருளாதாரம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் அப்பாவி பெண்களை பூஜைக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பதியை சேர்ந்த பிரியா, நந்தியாலா ரவிக்குமார், கர்னூல் காந்தம்மா, கம்பன்கிரி ராமுடு, அனந்தபூர் வெங்கடேஷ், நாகராஜ் மற்றொரு ராமுடு ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் எத்தனை பெண்களை பலாத்காரம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு ஆஸ்பத்திரி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
- விசாரணை அதிகாரியாக சித்தூர் ஏ.எஸ்.பி.சுதாகர் நியமிக்கப்பட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
இந்நிலையில், பூதலப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி சென்றனர்.
புளியம்பட்டியை சேர்ந்த அய்யப்பா, அவரது மனைவி பூமதி மற்றும் 4 பெண்களை கைது செய்தனர். அவர்களை பூதலப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அய்யப்பாவும் அவரது மனைவி பூமதி ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
4 பெண்கள் அவரது வக்கீல் முன்னிலையில் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரசு ஆஸ்பத்திரி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.
பூதலப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத், ஏட்டு தணிகாசலம் மற்றும் 4 போலீசார் தங்களை சித்தூர் போலீஸ் பயிற்சி மையத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்து தொல்லை கொடுத்தனர்.
உடலில் மிளகாய்ப் பொடியை தூவினர், அதனால் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அந்த பெண் கூறினார்.
இது குறித்து பெண் டாக்டர் ஒருவர் சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ரிஷாந்த் ரெட்டியிடம் போனில் புகார் செய்தார்.
அதன் பேரில் நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்.
மேலும் விசாரணை அதிகாரியாக சித்தூர் ஏ.எஸ்.பி.சுதாகர் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஆந்திர மாநில சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
- சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 26 வயது திருநங்கை. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகதாம்பா சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்தார். பின்னர் வீடு திரும்ப ஒரு ஆட்டோவில் ஏறினார்.
அந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 வாலிபர்கள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் திருநங்கையின் மீது கை வைத்து தொடங்கினர்.
தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதனை தடுத்த திருநங்கையை அடித்து துன்புறுத்தினர். அதனால் திருநங்கை அழுது கூச்சலிட்டார்.
பயத்தில் அவர்கள் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தினர். அதிலிருந்து திருநங்கை இறங்கி தப்பி ஓடினார்.
இதுகுறித்து திருநங்கை அங்குள்ள திஷா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ டிரைவர் வாசுபள்ளி சீனிவாசு (வயது 33), ஹனிஷ்குமார்(26), சதீஷ்குமார் (30), மனோஜ் குமார் ( 23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
ஆனால் இந்த சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
தயவு செய்து திருநங்கைகள் இதை சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.
- கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.
- தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கர்நாடகாவை போல் தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியின் மகளும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஷர்மிளா. ஒய் எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவராக உள்ளார்.
இவர் தெலுங்கானாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று கட்சியை பலப்படுத்தி உள்ளார். ஷர்மிளாவின் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும். இதற்காக ஷர்மிளாவிடம் டி.கே. சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் குடும்ப நண்பர் என்பதால் சந்திப்பு நடந்ததாக ஷர்மிளா தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ராமச்சந்திர ராவ் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சியில் சேரும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்க ஷர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவ்வாறு இணைக்கப்பட்டால் ஷர்மிளா தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






