திருப்பதி கோவிலில் குடும்பத்தினர் விட்டு சென்றதால் கல்லூரி முதல்வர் தற்கொலை

லட்சுமப்பா கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.அணை அருகே கிடந்த அவரது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி கோவிலில் குடும்பத்தினர் விட்டு சென்றதால் கல்லூரி முதல்வர் தற்கொலை
Published on

திருப்பதி:

கர்நாடக மாநிலம் கமலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமப்பா (வயது 59). இவர் அப்பகுதியில் உள்ள பிசியோதெரபி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.

லட்சுமப்பா கடந்த மாதம் 29-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.

பின்னர் அவரது குடும்பத்தினர் லட்சுமப்பாவை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். லட்சுமப்பா கடந்த 20 நாட்களுக்கு மேலாக திருப்பதியில் அனாதையாக சுற்றித்திரிந்தார்.

குடும்பத்தினர் தன்னை அனாதையாக விட்டுச் சென்றதை எண்ணி விரக்தி அடைந்தார்.

இதனால் பாபவிநாச அணைக்கு சென்று தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் அவரது உடலை மீட்டனர். அணை அருகே கிடந்த அவரது செல்போன் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று காலை திருப்பதிக்கு வந்தனர். லட்சுமப்பாவை திருப்பதியில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

கமலாபுரத்திற்கு வந்து இருப்பார் என எண்ணி நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். நாங்கள் அவரை அனாதையாக விட்டு வரவில்லை என போலீசாரிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com