என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஆங்கிலத்தில் உருவான Timeless Tamilnadu என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலத்தில் உருவான Timeless Tamilnadu என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    'டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆவணப்படம் சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது பெற்றுள்ளது.

    மேலும், ஒளிப்பதிவுப் பிரிவில், 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சரவணமருது சவுந்தர பாண்டியன் மற்றும் மீனாக்சி சோமனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    • தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம்.
    • ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவரிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார். குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம். இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை.

    எப்படி ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தியோ அப்பதுதான், ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பொதுக்குழுவில், அழைப்பு விடுப்பது குறித்து கட்சி தீர்மாணிக்கும். உரியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    • சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2024ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அனிமல் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதுகள் வென்றுள்ளது. 

    • 12th fail படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸிக்கு தேசிய விருது அறிவிப்பு.
    • சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 12th fail திரைப்படம் வென்றுள்ளது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியில் சிறந்த நடிகருக்கான விருதை 12th fail படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 12th fail திரைப்படம் வென்றுள்ளது.

    இதன்மூலம், 12th fail திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

    • தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
    • சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி அறிவிப்பு.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இதில், இந்தியில் சிறந்த நடிகர் விருது - ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸி (12 பெயில்)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த நடிகை விருதை வென்றார் ராணி முகர்ஜி (படம்: சாட்டர்ஜி vs நார்வே) அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.
    • 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான கல்வியாளர் வசந்தி தேவி (87) சென்னையில் காலமானார்.

    சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.

    1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் வசந்தி தேவி

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார்.

    2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.

    2017இல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வென்றவர் வசந்தி தேவி.

    2016ஆம் ஆண்டில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டியிட்டார்.

    • கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.
    • கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி நிதி.

    நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் காளி பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான கமிட்டிகள் உருவாகும். அந்த கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள மாநில அரசு ஆண்டு தோறும் நிதி வழங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு துர்க்கை பூஜைகளுக்காக மட்டும் ஒவ்வொரு கமிட்டிக்கும் தலா ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு துர்க்கை பூஜை கமிட்டிக்கும் தலா ரூ.1.10 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் இந்த ஆண்டு துர்க்கை பூஜைக்கு மேற்கு வங்காள மாநில அரசு ரூ.400 கோடி செலவிட உள்ளது.

    கடந்த ஆண்டு ரூ.340 செலவழிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    • தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
    • முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அந்த நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.

    பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.

    முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம். இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனசாி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • 11.8.2025 முதல் 23.8.2025 வரை 3ம் கட்டமாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனசாி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 11.8.2025 முதல் 23.8.2025 வரை மூன்றாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சட்டமன்றத் தொகுதி வாரியாக, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் தொடர் பிரச்சார் சூராவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி, 11.8.2025- கிருஷ்ணகிரி மேற்கு, 12.8.2025- கிருஷ்ணகிரி கிழக்கு, 13.8.2025- திருப்பத்தூர், 14.8.2025- திருப்பத்தூர், வேலூர் புறநகர், 15.8.2025- திருவண்ணாமலை மத்தியம், திருவண்ணாமலை வடக்கு, 16.8.2025- திருவண்ணாமலை தெற்கு,

    திருவண்ணாமலை கிழக்கு, 18.8.2025- திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை மத்தியம், வேலூர் புறநகர், 19.8.2025-,

    வேலூர் மாநகர், 20.8.2025-ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை மேற்கு, ராணிப்பேட்டை கிழக்கு, 21.8.2025- காஞ்சிபுரம், 22.8.2025- செங்கல்பட்டு மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, 23.8.2025- சென்னை புறநகர், செங்கல்பட்டு கிழக்கு.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.
    • நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் திட்டமா, கட்சி விளம்பரமா?

    நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்!

    தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் "ஸ்டாலின்" பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக

    அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் அவர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது.

    மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம் "ஸ்டாலின்" என்று தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்குதானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும்.

    மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு "உங்களுடன் ஸ்டாலின்", "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் சார்பில் முதல் கட்ட இழப்பீடுத் தொகையாக ரூ.6 லட்சம் ஆணையத் தலைவர் தமிழ்வாணன் வழங்கினார்

    ×