என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும்.
    • இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது.

    சென்னை

    ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால் ஆடிப்பெருக்கு தினத்தன்று (ஆகஸ்டு 3-ந்தேதி) மிகுந்த நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும்.

    அந்த மாதத்தின் இதர நாட்கள் மூலம் கிடைக்கும் மொத்த பத்திரப்பதிவு வருமானத்தை விட, அன்றைய தினம் நடக்கும் பத்திரப்பதிவின் வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த முறை ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையான நாளை வருகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் பத்திரப்பதிவுகள் நடக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பொதுவாக முகூர்த்த மற்றும் நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறப்பதற்கு பத்திரப்பதிவுத்துறை முன்பு திட்டமிட்டது.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது. அந்த அடிப்படையில்தான் ஆடிப்பெருக்கு நாளன்றும் பதிவுகள் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
    • அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள் பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவின்றி தங்கி உள்ளனர்.

    இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு இல்லம் கூட அரசால் நடத்தப்படவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இது விதிமீறும் செயல். ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் வக்கீல் ஜி.இந்திரா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு முதியோர் இல்லத்தை கட்டமைக்கும் பணியை 6 மாதங்களுக்குள் தொடங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், மூல மனுதாரர் அதிசயகுமார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

    • சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
    • ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

    கர்நாடகாவில் மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கி வந்த அரசு ஊழியரிடம் இருந்து, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் எழுத்தராக பணியாற்றிய கலக்கப்பா நிடகுண்டியின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுவரையிலான சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 1 கிலோ தங்கம், மூன்றுக்கும் மேற்பட்ட கார், பைக், ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

    அரசு ஊழியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக என லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
    • டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

    புதுடெல்லி:

    நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், இந்த ஆண்டு சுதந்திர தின விழா நெருங்குவதையொட்டி நான் நாட்டு மக்களிடம் இருந்து யோசனைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கிறேன். இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் என்னென்ன கருப்பொருள்கள் அல்லது விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய எண்ணங்களை 'நமோ' செயலி, எனது அரசு 'மைஜி–ஓவி' தளங்களில் பகிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணையில் பெறுகிறார்கள்.
    • இதுவரை 19 தவணையாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகள் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பிரதமர் மோடி 20வது கட்ட தவணையை இன்று விடுவிக்கிறார்.

    நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20-வது தவணையை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

    மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டது.
    • இதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    71-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக '12த் ஃபெயில்' மற்றும் சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்க்கிங்' தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது, சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

    வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
    • 'பார்க்கிங்' படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன.

    71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்தத் தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

    இந்நிலையில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    சிறந்த திரைப்படம் : '12த் பெயில்'

    சிறந்த நடிகர்: ஷாருக் கான் (ஜவான்), விக்ராந்த் மாசி(12த் பெயில்)

    35 ஆண்டாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே)

    சிறந்த தமிழ் படம்: பார்க்கிங்

    சிறந்த குணச்சித்திர நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)

    சிறந்த திரைக்கதை: ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)

    சிறந்த மலையாள படம்: 'உள்ளொழுக்கு'

    சிறந்த குணச்சித்திர நடிகை: ஊர்வசி

    சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார் (வாத்தி)

    சிறந்த குறும்படம்: 'லிட்டில் விங்ஸ்' (தமிழ்)

    சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ்)

    ஆவணப் படப்பிரிவில் 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' தேர்வானது.

    சிறந்த இயக்குனர்: சுதீப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி)

    சிறந்த ஒளிப்பதிவு பிரிவுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த ஒலி அமைப்பு: அனிமல்

    சிறந்த தயாரிப்பு: 2018 (மலையாளம்)

    சிறந்த தெலுங்கு திரைப்படம்: 'பஹவந்த் கேசரி'

    சிறந்த கன்னட திரைப்படம்: கண்டீலு

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருது வழங்குவார்.

    • ஆங்கிலத்தில் உருவான Timeless Tamilnadu என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலத்தில் உருவான Timeless Tamilnadu என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    'டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆவணப்படம் சிறந்த கலை மற்றும் கலாச்சார படத்திற்கான விருது பெற்றுள்ளது.

    மேலும், ஒளிப்பதிவுப் பிரிவில், 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சரவணமருது சவுந்தர பாண்டியன் மற்றும் மீனாக்சி சோமனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

    • தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம்.
    • ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவரிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார். குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக முதலமைச்சருக்கு உடல் நலம் சரியில்லை, அதனால் நலம் விசாரிப்பது வழக்கம். இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை.

    எப்படி ராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தியோ அப்பதுதான், ராமதாஸ் இருக்குமிடம்தான் பாட்டாளி மக்கள் கட்சி.

    பொதுக்குழுவில், அழைப்பு விடுப்பது குறித்து கட்சி தீர்மாணிக்கும். உரியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
    • பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9 ஆம்தேதி (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

    • சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2024ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அனிமல் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதுகள் வென்றுள்ளது. 

    • 12th fail படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸிக்கு தேசிய விருது அறிவிப்பு.
    • சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 12th fail திரைப்படம் வென்றுள்ளது.

    2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியில் சிறந்த நடிகருக்கான விருதை 12th fail படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை 12th fail திரைப்படம் வென்றுள்ளது.

    இதன்மூலம், 12th fail திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

    ×