என் மலர்tooltip icon

    இந்தியா

    • அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
    • தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

    அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.

    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும் ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18-ந்தேதி குறைந்து, 19-ந்தேதி உயர்ந்த நிலையில், 20-ந்தேதி விலை சரிந்தது. இதன் தொடர்ச்சியாக 21-ந்தேதியும் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது.

    21-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    இதனை தொடர்ந்து 22-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630-க்கும் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும் ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680

    20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000

    19-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-11-2025- ஒரு கிராம் ரூ.172

    22-11-2025- ஒரு கிராம் ரூ.172

    21-11-2025- ஒரு கிராம் ரூ.169

    20-11-2025- ஒரு கிராம் ரூ.173

    19-11-2025- ஒரு கிராம் ரூ.176

    • நெல்லை, தென்காசி, நாகை மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, தென்காசி, நாகை மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தின் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பூண்டி, மன்னவனூர், வில்பட்டி கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலைமை அறிந்து மற்ற பள்ளிகளுக்கும் விடுப்பு அளிக்கலாம் என்று திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

    • கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • துவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கனமழை காரணமாக புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு.
    • நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல.

    டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

    அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், நேற்று சென்னையில் தெருநாய்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ், "நாய் கடித்தால் அதை பெரிய விசயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல. நாய்களை காப்பகங்களில் அடிப்பதை விட தடுப்பூசி போடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. " என்று தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • மிக கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தென் கடலோர மாவட்டங்களை மிரட்டி வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (26-ந்தேதி) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறி உள்ளார்.

    மிக கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இன்று நடக்க இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. மிக கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக புதுவை, காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    • பல ஆண்டாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர் என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.

    குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.

    அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறப்பு வகுப்பினருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே அதற்கு தகுதியான இந்து சமூக மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களின் துன்பங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை.

    ஆனால் அந்த வலியை யாராவது புரிந்து கொண்டனர் என்றால், அது பிரதமர் மோடி தான். அதனால் தான் குடியரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

    சிந்து பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

    சிந்துவில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என தெரிவித்தார்.

    • சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிப​தி​யாக சூர்ய காந்த் பதவியேற்க உள்​ளார்.
    • அவருக்கு ஜனாதிபதி திர​வுபதி முர்மு பதவிப்பிர​மாண​ம் செய்து வைக்கிறார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

    இந்த விழாவில்பிரேசில், பூடான், கென்யா, மலேசியா, நேபாளம், இலங்கை, மொரிஷியஸ் நாடுகளை சேர்ந்த தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.

    டெல்லியில் கடந்த சனிக்கிழமை நீதிபதி சூர்யகாந்த் பேசுகையில், நவம்பர் 24-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளேன். எனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

    • டிசம்பர் 9 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
    • டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 9-ந்தேதி மற்றும் 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, நேற்று மனுக்கள் மீதான ஆய்வு நடைபெற்றது. இதில் 1.55 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர்கள் 82020 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 72524 மனுக்கள் ஏற்கபப்ட்டுள்ளது. மூன்று திருநங்கைகள் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. 2479 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் 1354 பெண்கள், 1125 ஆண்கள் மனுக்களாகும்.

    மொத்தமாக 1,07,211 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் 56,501 பெண்கள், 50,709 ஆண்கள் ஆவார்கள். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதனால் நாளை வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன்பின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்படும்.

    941 கிராம பஞ்சாயத்தில் உள்ள 17,337 வார்டுகளுக்கும், 125 பிளாக் பஞ்சாயத்தில் உள்ள 2,267 வார்டுகளுக்கும், 14 மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 346 வார்டுகளுக்கும், 86 நகராட்சியில் உள்ள 3,205 வார்டுகளுக்கும், 6 மாநராட்சியில் உள 421 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
    • மிக கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், நெல்லையில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கனமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 0462- 2501070, 9786566111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தவைக்கப்படுகிறது.

    மேலும், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    ×