என் மலர்
நீங்கள் தேடியது "semester exam"
- தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தவைக்கப்படுகிறது.
மேலும், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும்.
- கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று 5 புதிய சொகுசு தாழ்தளப் பஸ்கள் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் ஏறி, இறங்க சிரமப்படுவதை உணர்ந்து தாழ்தள பஸ்கள் சேவையை அதிகப்படுத்தி உள்ளார். இந்த தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியவர்கள், பெண்களுக்கும் இந்த பஸ்கள் எளிய முறையில் இருக்கும். அனைத்து விதமான சிறப்பு அம்சங்களும் இந்த பஸ்கள் கொண்டது.
கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம். இதனைத் தேர்தல் ஆணையம் நன்கு அறியும். எனவே விடுப்பு காலங்களில் தான் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு.
- தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதேபோல், தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
- டிசமர்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும் என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும்.
செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
டிசமர்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
இந்த கால அட்டவணையை அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பின்பறற் வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் நடத்தி வரும் விசாரணையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனால், நாளை அட்டவணைப்படி தேர்வு நடக்கும். விடுமுறை அல்ல என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் 22-ம் தேதி (வரும் வியாழக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. #CycloneGaja #AnnaUniversity #SemesterExam






