என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தொடர்ந்து ஏ.சியில் இருந்தால் சருமம் வறட்சி அடைகிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றி நல்ல பலனை காணலாம்.
    ஏசியில் பணியாற்றும் பெண்கள், தங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர்கள் பயன்படுத்துவது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, மங்கலாக்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.

    உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை ஹேண்ட்பேக்கில் வைத்திருங்கள். இதனை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து அப்ளை செய்யுங்கள். ஏசி பயன்பாட்டில் அதிக நேரம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 6 முறையாவது முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

    வாட்டர் ஸ்ப்ரே பாட்டிலில், ரோஸ் வாட்டரை நிரப்பி, உங்கள் டேபிளில் வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொண்டால், முகத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். அல்லது ஆல்ஹாகல் சேர்க்காத ஈரத்தன்மையுடன் கூடிய வைப்ஸ் மூலம் அவ்வப்போது முகத்தில் லேசாகத் துடைத்துக்கொண்டால், புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.



    குளிக்கும்போது சில சொட்டு தேங்காய் எண்ணெய்யை நீரில் சேர்த்து குளிக்கலாம். இது, சருமத்தில் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். அதேபோல, குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி, மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.

    வாழைப்பழக் கூழுடன் பட்டர் ஃப்ரூட் கலந்து, சருமத்தில் பூசி, ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.

    நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது, இந்த எண்ணெய்யை உடலில் தடவிக்கொள்ளுங்கள். 
    நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு.
    நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு. ஆனால், இதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்தினால்தான் அதன் நன்மைகளைப் பெற முடியும்.

    * உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ட்ரெட்மில்லில் தாராளமாகப் பயிற்சி மேற்கொள்ளலாம். 6 mph (Miles per Hour) என்ற வேகத்தில், 20 நிமிடங்கள் நடந்தால் உடலிலுள்ள 229 கலோரிகளைக் குறைக்கலாம். 8 mph (Miles per Hour) என்றால், 300 கலோரிகளைக் குறைக்கலாம். இந்தப் பயிற்சிகளோடு சேர்த்து ஊட்டச்சத்திலும் கவனம் எடுத்துக்கொண்டால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம்.

    * இதயச் செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்னை தீரும்.

    * ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள்  வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும்.

    * ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது.

    * ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல... உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.

    * பின் முதுகில் வலி இருப்பவர்கள், ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யக் கூடாது.

    * ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும்போது, அதற்குத் தேவையான ஷூ வகைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மூட்டுவலி, குதிகால்வலி, ப்ளான்டர்ஸ் ஃபேஸிடிஸ் (Plantars fasciitis) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    * ட்ரெட்மில்லில் பயிற்சி செய்ய ஆரம்பித்த முதல் சில நாள்களுக்கு மூட்டுவலி, கால்வலி போன்றவை ஏற்படும். அவற்றைப் பொருட்படுத்தாமல், அன்றாடம் பயிற்சி மேற்கொண்டால், போகப் போக பிரச்னை சரியாகிவிடும்.

    * மற்ற நேரத்தைவிட, காலை நேரத்தில் ட்ரெட்மில் பயிற்சி செய்வது நல்லது. உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

    * வெகு நாள்கள் கழித்து ட்ரெட்மில் பயன்படுத்துபவர்கள், புதிதாக உபயோகிப்பவர்கள், நேர விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அதிக நேரம் ஓடக் கூடாது. அரை கிலோமீட்டரிலிருந்து தொடங்கலாம். ஒவ்வோர் ஐந்து அல்லது ஆறு நாள் இடைவெளியில் இந்த நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்துக்கொள்ளலாம்.

    இரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க ராஜ்மாவை அடிக்கடி உபயோகிக்கலாம். இன்று ராஜ்மா, கார்ன் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 1 கப்
    குடை மிளகாய் ( மஞ்சள், சிகப்பு, பச்சை) - தலா 1
    உதிர்த்த சோளம் - கால் கப்
    சீரகத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு  - 2 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    சோளத்தை உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, சோளம் போட்டு அதனுடன் குடைமிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைசாறு, தேன், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்து நிறைந்த ராஜ்மா - கார்ன் சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    இன்று பிள்ளைகளின் கல்விச் செலவுகள் ஒவ்வொரு குடும்பத்தின் முக்கியச் செலவினங்களில் ஒன்றாக ஆகியிருக்கின்றன. மே மாதத்தில் கல்விச் செலவு களைச் சமாளிக்க பல நடுத்தரக் குடும்பங்கள் தடுமாறித்தான் எழ வேண்டியிருக்கிறது.

    அதிலும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் எகிறிக்கொண்டே போகும்நிலையில், இன்றே திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும்.

    அந்த வழிகள் குறித்துப் பார்ப்போம்...

    ஒருங்கிணைந்த திட்டம் :

    குழந்தைகளின் கல்விச் செலவுக்குத் தனித் திட்டம் போடுவது சிலரின் வழக்கம். மாறாக, நம் குடும்பத்தின் ஒருங்கிணைந்த நிதித்திட்டத்தில் ஒரு பகுதியாக கல்வித் திட்டம் அமைய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால உயர்படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்று யோசித்து, அதற்கேற்ப இப்போதே திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொண்டு வர வேண்டும். பிக்சட் டெபாசிட் போன்றவை நம் இலக்குகளை எட்ட போதுமானதாக இராது. மியூச்சுவல் பண்ட் போன்றவை நன்கு கைகொடுக்கும். அவற்றுக்கு வரிச்சலுகையும் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

    முன்கூட்டித் தொடங்குவது :

    எப்போதுமே முன்கூட்டியே முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கும்போது, கிடைக்கும் ‘ரிட்டர்னும்’ அதிகமாக இருக்கும். அதுதான் கூட்டுப் பலனின் விசேஷம். 15 சதவீத ரிட்டர்ன் அளிக்கும் எஸ்.ஐ.பி. திட்டத்தில் நாம் மாதம் 5 ஆயிரம் முதலீடு செய்துவருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதை நம் 25 வயதில் தொடங்கி 55 வயது வரை தொடர்ந்தால், அந்த 30 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்த தொகை ரூ. 3.51 கோடியாக வளர்ந்திருக்கும். மாறாக, நாம் 45 வயதில் சேமிக்கத் தொடங்கி 55 வயது வரை, அதாவது சுமார் 10 ஆண்டு காலம் சேமித்தால், வெறும் ரூ. 13.93 லட்சம்தான் கிட்டும்.

    நீண்டகாலத் திட்டம் என்றால்...

    குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்கான நீண்டகாலத் திட்டம் என்றால், ஈக்விட்டி பண்ட்களே சிறந்தவை என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. இன்னும் பத்தாண்டில் நம் குழந்தை கல்லூரியில் காலடி எடுத்துவைக்கப் போகிறது என்றால், பத்தாண்டு கால பணவீக்கத்தையும் மனதில் வைத்து நாம் முதலீட்டில் ஈடுபட்டு வரவேண்டும்.



    ஆயுள் காப்பீட்டின் அவசியம் :

    வீட்டில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதிப்பவர்கள் என்றால், அவர்கள் ஆயுள் காப்பீடு பெற்றிருப்பது அவசியம். டெர்ம் இன்சூரன்ஸ் பெற்றிருந்தால், சம்பாதிப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலும் பிள்ளைகளின் படிப்பு பிரச்சினையின்றித் தொடரும்.

    குழந்தைகள் பெயரில் காப்பீடா? :

    குழந்தைகளின் எதிர்கால படிப்புச் செலவைக் கருத்தில்கொண்டு அவர்கள் பெயரில் காப்பீடு பெறுவது சிலரின் வழக்கம். ஆனால் அத்திட்டத்தில் சேமித்து வரும் தொகை, போதுமானதாக இருக்காது.

    சிலரோ தங்களின் ஓய்வுகாலத்துக்கான முதலீட்டுத் தொகையில் சமரசம் செய்து, பிள்ளைகளின் படிப்புக்கு அதிகம் ஒதுக்கீடு செய்வார்கள். அதுவும் ஓய்வு காலத்தில் சொந்தக் காலில் நிற்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    குழந்தைகள் பெயரில் காப்பீடு பெறத் தேவையில்லை, காரணம் அவர்கள் வருவாய் ஈட்டுவோரில்லை. காப்பீடும் முதலீடும் இணைந்த குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள் அதிக பலன் தராதவை என்பதே முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் அறிவுரை. பெற்றோர், தேவையான காப்பீடு பெற்றிருந்தால் போதும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    ஓய்வுகால நிதிக்கான முதலீடு போன்றவற்றைக் குறைத்து கல்விக்காக முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதற்கு என்று முறையாகத் திட்டமிட்டு முன்கூட்டியே நிதியை வளர்த்துவருவதே சரியானது. 
    ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, பிளாட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பட்ஜெட், அது அமைந்துள்ள இடம், அளிக்கப்பட்டுள்ள வசதிகளான குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் ஹால், பாதுகாப்பு வசதிகள், தோட்டம், லிப்ட் வசதி மற்றும் குடிநீர் ஆகிய நிலைகளை பொறுத்து அமைந்திருக்கும். பட்ஜெட் தவிரவும், ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டதாவது ;

    1. வீடுகளை சுற்றிலும் மற்றும் முன்பக்கம் ஆகிய இடங்களில் சரியான அளவில் காலி இடம் இருக்கவேண்டும்.

    2. கட்டுமான திட்டத்தில் உள்ள அனைத்து பிளாட்-களுக்கும் UDS என்ற பிரிக்கப்படாத மனையின் பங்கு சரியான முறையில் பிரித்து தரப்பட்டிருக்கவேண்டும்.

    3. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தக்க பார்க்கிங் வசதி இருப்பதோடு, கார்களை பார்க்கிங் செய்ய சுமாராக 300 சதுர அடி அளவுள்ள இடமாவது இருக்க வேண்டும்.

    4. பிளாட்டுகளின் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வழக்கமாக அளவுக்குள் இருக்கவேண்டும்.

    5. பெரும் மழை, அதிகப்படியான வெள்ளம் ஆகியவற்றால் பிளாட் மற்றும் அதற்கு செல்லும் பாதைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருப்பது அவசியம். 
    அலுவலக நெருக்கடி இல்லாத வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது சிலரது வாடிக்கை. அத்தகையவர்கள், தெரிந்தோ தெரியாமலே ஒரு நல்ல வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
    அலுவலக நெருக்கடி இல்லாத வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது சிலரது வாடிக்கை. அத்தகையவர்கள், தெரிந்தோ தெரியாமலே ஒரு நல்ல வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

    ஆம், வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது மரணத்தைத் தள்ளிப்போடும் என்பது ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.

    சுமார் 38 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.

    தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் ஆயுட்காலம் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    பொதுவாகவே, உழைப்பைப் போல உறக்கத்துக்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் பிரச்சினைதான்! 
    மாங்காய் ஊறுகாயை பல்வேறு முறைகளில் தயாரிக்கலாம். இன்று குஜராத்தி முறையில் இனிப்பு சேர்த்து ஊறுகாய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய்த் துருவல் - 2 கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்).

    அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும்.

    சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.

    சூப்பரான ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் ரெடி.

    மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
    சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

    நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.



    பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.

    ஆண்களுக்கு விரைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.

    இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன. 
    தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

    முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. இயற்கையான தேங்காய் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.

    தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.

    இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பரு உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.



    தேவையான பொருட்கள் :

    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    தேயிலை மர எண்ணெய் - 3 துளிகள்
    லாவெண்டர் எண்ணெய் - 2 துளிகள்
    தேன் - 1 டீஸ்பூன்

    மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.

    முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

    இப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.
    சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும். மோர்க்குழம்பு செய்யும் போது அதில் சுரைக்காய் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - சிறியது 1
    கெட்டித்தயிர் - ஒரு கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    முழு உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    சுரைக்காயை தோல், விதை நீக்கி சிறியதுண்டுகளாக வெட்டி வேக வைத்து கொள்ளவும்.

    தயிரை கடைந்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, முழு உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடித்கொள்ளவும்.

    கடைந்த தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பொடி சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் மோர்க்கலவை, வேகவைத்த சுரைக்காய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    சுவையான, உடலுக்குக் குளிர்ச்சி தரும் மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா?”

    “பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய் திறக்கவில்லை, இடுப்பு எலும்புக்குள் குழந்தையின் தலை வரவில்லை, குழந்தை வரும் வழியில் ஏதாவது பிரச்சனை, பெண்ணின் முதுகெலும்பு குறுகலாக இருப்பது, அதிக ரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனை போன்ற சூழல்களில் சிசேரியன் தவிர்க்க முடியாததும் அவசியமானதும்கூட!

    சிலருக்கு பிரசவ தேதி கடந்தும், வலி ஏற்படாமல் போகும். இது ஏதோ இன்று பெருகியுள்ள புதுப்பிரச்சனை அல்ல சென்ற தலைமுறையிலும் இருந்தது. ஆனால், வலியை உண்டாக்கும் ஊசி, ஜெல் என்று அதற்கான வலி ஊக்கிகளின் பயன்பாடு அரிதாக இருந்தது. இன்று அது அதிகரித்திருக்கிறது. இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதயத் துடிப்பு குறைதல், விட்டுவிட்டு வலி ஏற்படுதல் போன்றவை வரக்கூடும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    இக்கட்டான சூழலில் வலி ஊக்கிகளைப் பயன்படுத்தாமல், வலிக்காகக் காத்திருந்தால் தண்ணீரின் அளவு குறையும், குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே சுவாசிக்க ஆரம்பித்துவிடும், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மோஷன் போக வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற ஆபத்துக்கள் இருக்கும் பட்சத்தில், ஆபரேஷன் அவசியம் ஆகிறது. பொதுவாக வலி ஊக்கிகள் பயன்படுத்தினாலும், மருத்துவர்கள் நார்மல் டெலிவரிக்கும் தயாராகவே இருக்க வேண்டும். சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே ஆபரேஷன் செய்ய வேண்டும். 
    உடற்பயிற்சி, விளையாட்டு இப்படி உடலின் எந்த ஒரு தீவிர செயல்பாட்டுக்கும் முன்பாக நம் உடலை அதற்குத் தயார் செய்ய 'வார்ம் - அப்' செய்யவேண்டியது அவசியம்.
    உடற்பயிற்சி, விளையாட்டு இப்படி உடலின் எந்த ஒரு தீவிர செயல்பாட்டுக்கும் முன்பாக நம் உடலை அதற்குத் தயார் செய்ய 'வார்ம் - அப்' செய்யவேண்டியது அவசியம்.

    வார்ம் - அப், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக செய்யப்படுவது. இதில் ஸ்ட்ரெச்சிங் முக்கியமான ஒன்று. ஸ்ட்ரெச்சிங் செய்யும்போது உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் ரத்த ஓட்டம் வேகமாகும். அதனால், தசைகளில் உள்ள அடுக்குகள் (Layers) திறக்கும். தேவையான அளவுக்கு ஆக்சிஜனும் கிடைக்கும். இதனை உடலைத் தூண்டும் பயிற்சிகள் என்று சொல்லலாம் (Golgi tendon  stimulation). அதிக எடையான ஒரு பொருளைத் தூக்குவதற்கு முன்போ, அல்லது அதிக வேகத்தில் ஓடுவதற்கு முன்போ இதுபோன்ற ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம்.

    வார்ம் - அப் செய்யும்போதே நம் உடல் வெப்பமாவதை நம்மால் உணரமுடியும். அந்த நிலை வரும்வரை நாம் தொடர வேண்டும்.உடற்பயிற்சி அப்போதுதான் அட்ரினலின் போன்ற பல ஹார்மோன்கள் சுரக்கும். 'அட்ரினலின்'  மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும்.

    'ஹேப்பி ஹார்மோன்ஸ்' சுரப்பதால் மைண்ட்  ரிலாக்ஸ் ஆகும்.

    உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கரைந்து உடலுக்குத் தேவையான ஹார்போஹைட்ரேட் கிடைக்கும்.  எந்த ஒரு செயலைச் செய்தாலும் நேர்த்தியாக செய்யும் பழக்கம் உருவாகும்.

    விரக்தி மனநிலை குறையும்.

    நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.

    தேவையற்ற கவலைகள், பயம், கெட்ட எண்ணங்கள், தேவையற்ற பதற்றம் குறையும்.

    விழிப்புஉணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    வார்ம் - அப் செய்து முடிக்கும்போது மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
    ×