என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ். இன்று இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நுங்கு - 7
    இளநீர் - அரை லிட்டர்,
    இளநீர் வழுக்கைத் துண்டுகள் - சிறிதளவு.



    செய்முறை :

    நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நுங்குத் துண்டுகளுடன் இளநீர் சேர்த்து மிக்சியில் அடித்தெடுக்கவும்.

    அதனுடன் இளநீர் வழுக்கைத் துண்டுகள் சேர்த்து கலந்து பருகலாம்.

    சூப்பரான நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி.

    குறிப்பு: உடனடி சக்தி தரவல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத்  தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.

    ஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல்
    இயல்பாகப் பேசி பழக வேண்டும். எப்போதும் மனதில் பாலியல் சார்ந்த விஷயத்தையே நினைப்பது, படங்கள் பார்ப்பது போன்றவையிலிருந்து வெளிவர வேண்டும்.

    இதுபோன்ற மாற்றங்கள் நிகழ, பாடத்திட்டத்தில் செக்ஸ் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாலியல் சார்ந்த பிரச்னைகளை கணக்கில் கொண்டு அதற்கேற்ப பாலியல் கல்வியை அமைக்க வேண்டும்.முக்கியமாக, பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.

    ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளை தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும், பெரும்பாலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிற பெண்கள் பயந்த மற்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

    மேலும் சக மனிதரை நேசிக்கும் பண்பு, மனிதநேயம், ஒருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்துவது பாவம்; தவறு என்று ஆண்கள் உணரும் ஆரோக்கிய சமுதாயமாக நாம் உருவாகும்போது பாலியல் பலாத்காரம் எனும் ஈன கொடிய செயலை இல்லாமலே ஆக்க முடியும்’’.
    இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
    குழந்தைகள் மட்டுமல்ல மேஜிக், சமய சடங்குகள், கல்வியின் செய்முறை விளக்கம், மாதிரி உருவாக்கம் என அனைத்திற்கும் பொம்மைகள் உபயோகிக்கிறோம்.

    பொம்மைகளை குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் நிறம், அது வெளிப்படுத்தும் சப்தம், அதன் தன்மையை வைத்து அவர்களின் மனோ நிலையை அறிய முடியும் என குழந்தை உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பொம்மைகள் பெரியவர்களை குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ளவும் அவர்களோடு நம்மை இணைக்கவும் பாலமாக உள்ளது.

    ஒரு உளவியல் புள்ளியியல் ஆய்வின் முடிவின்படி மேல் தட்டு நிலையில் இருக்கும் பிள்ளைகள் பொம்மைகள் மேல் மிகவும் சொந்தம் கொண்டாடும் தன்மையுடன் இருப்பதாகவும் கீழ் தட்டில் இருக்கும் பிள்ளைகள் பிறரிடம் பகிர்ந்து விளையாடுவதாகவும் பதிவு செய்கிறது.

    பொம்மைகள் பிள்ளைகளின் கை, கண் மூளை சேர்ந்து வேலை செய்ய உதவுவதாகவும் கணக்கு மற்றும் அறிவியல் தகுதியை வளர்க்க உதவுவதாகவும் நிரூபித்துள்ளனர்.

    இன்றைய காலச்சூழலில் தனிமையில் வளரும் பிள்ளைகளுக்கு பொம்மைகள்தான் தோழி, ஆசிரியர், என அனைத்துமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

    பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் உலகத்தை புரியவைக்க, ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு குழந்தைகளின் எண்ணப்போக்கை பிரதிபலிக்க வைக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் உலகத்தில் அவர்களோடு பயணிக்கும் சக உயிராக உற்ற தோழமையாக மனித வரலாற்றின் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணமாக மனித வாழ்வோடு இணைந்த பொம்மைகளோடு நாமும் பொம்மைகள் தினத்தை கொண்டாடுவோம். 
    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிந்து கொள்வோம்.
    மூக்கு, முக அழகுக்கு மட்டுமல்ல சுவாசத்திற்கும் முக்கியமானது. உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டி அனுப்புவது மூக்குதான். வாசனை அறியவும் மூக்கு பயன்படுகிறது. முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிவோம்...!

    * மூக்கு, வாசனைகளை நுகர்வதற்கான பிரத்தியேக செல்களைக் கொண்டுள்ளன. இவையே நறுமணத்தையும், நாற்றத்தையும் உணர காரணமாக உள்ளன.

    * காற்றில் ஆபத்தான ரசாயனங்கள் இருந்தால் மூக்கினால் உணர முடியும்.

    * மனிதனின் மூக்கு 2 நாசித் துவாரங்களைக் கொண்டது. இந்த துவாரங்களை பிரிக்கும் தடுப்பு, ‘நாசல் செப்டம்’ எனப்படுகிறது.

    * ‘நாசல் செப்டம்’ தடுப்பானது ஒரு குருத்தெலும்பு அமைப்பாகும். இது தசைகளைவிட வலிமையானது, ஆனால் எலும்பைவிட நெகிழ்வுத்தன்மை கொண்டது.

    * மூக்கின் உச்சியானது ‘நாசிக்குழி’ எனப்படுகிறது. இங்குள்ள எத்மாய்டு எலும்பு நாசிக்குழியையும், மூளையையும் பிரிக்கிறது.

    * இந்த எத்மாய்டு எலும்பின் மீதுதான் கண்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. எனவே இதை கண்ணின் சுழல் அச்சு என்கிறார்கள்.

    * தலையின் உட்பகுதியில் அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது நாசிக்குழி. வெளிப்புறத்தில் மூக்கு அமைந்திருக்கும் பகுதிக்கு உட்புறத்தில் கண்ணின் பின்னால் அமைந்திருக்கிறது நாசிக்குழி.

    * நாசிக்குழியில்தான் நாம் உள் இழுக்கும் காற்றானது உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. அதாவது அதிக வெப்பமான காற்று உடலுக்கு ஏற்ப குளிர்விக்கப்படுகிறது அல்லது குளிரான காற்று உடல் வெப்பத்திற்கேற்ப சூடாக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    * நாசிக்குழி பகுதியில் காணப்படும் நுண் மயிரிழைகள் போன்ற அமைப்பு காற்றில் கலந்து வரும் தூசுகளையும், நுண்துகள்களையும் வடிகட்டுகிறது.

    * மூக்கின் உச்சிப்பகுதியாக கருதப்படும் நாசிக்குழியே, வாயின் உச்சிப் பகுதியாகவும் அமைந்துள்ளது.

    * வாசனையை நுகர முடியாத நிலை ‘அனோஸ்மியா’ எனப்படுகிறது.

    * லேசான வாசனையையும் உணர்ந்து கொள்ளும் அதிகப்படியான நுகர்ச்சி திறன் ‘ஹைபரரோஸ்மியா’ எனப்படுகிறது.

    * வாசனை நுகர்வதில் ஏற்படும் திடீர் மாற்றம் ‘டைசோஸ்மியா’ எனப்படுகிறது.

    * ஆண்களின் மூக்கு, பெண்களின் மூக்கைவிட பெரியது.

    * மூக்கு சம்பந்தமான அறுவைச் சிகிச்சை ‘ரினோபிளாஸ்டி’ எனப்படுகிறது.

    மூக்கு பராமரிப்பு

    முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மூக்கில் விரல்கள், குச்சிக ளைவிட்டு விளையாடக்கூடாது. தண்ணீர் மற்றும் மருந்து போன்ற திரவங்களை மூக்கில் ஊற்றிக் கொள்ளக்கூடாது.

    மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்தை மட்டுமே மூக்கிற்கு பயன்படுத்த வேண்டும். மூக்கில் தேவையற்ற தூசு துரும்புகள் நுழைந்தால் இயற்கையாகவே தும்மல் ஏற்பட்டு வெளியேறிவிடும். ஒருவேளை அதில் அசுத்தங்கள் மிகுந்துவிட்டால் அதை சுத்தம் செய்ய பருத்தி துணிகளையே பயன்படுத்த வேண்டும். தெரியாத மருந்துகள், பூக்களை மூக்கினால் நுகர்ந்து பார்க்கக்கூடாது.

    அசுத்தங்கள் நிறைந்த பகுதிக்கு செல்ல நேர்ந்தால் மூக்கினை கைக்குட்டை அல்லது மருந்து துணியால் மூடிக் கொள்ள வேண்டும். நோய் ஏற்படும்போதும் இவற்றைப் பயன்படுத்தி சுகாதாரம் பேண வேண்டும். மூக்கில் ரத்தக் காயம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாட வேண்டும். 
    குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளியமுறையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 2 கப்
    கடலை மாவு - 1 கப்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
    வெண்ணை அல்லது நெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

    அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை அல்லது நெய் (உருக்கி ஊற்றவும்), உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் முறுக்கு குழலில், ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, பிசைந்த மாவை நிரப்பி, எண்ணெயில் வட்டமாக பிழிந்து விடவும். இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.

    சூப்பரான ரிப்பன் பக்கோடா ரெடி.

    கவனிக்க: மிளகாய்த்தூளிற்குப் பதிலாக, மிளகுத்தூளையும் போடலாம். விருப்பமானால், ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளையும் சேர்க்கலாம். அரிசி மாவு அதிகமாக சேர்க்கும் பொழுது, நல்ல மொரமொரப்பாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது. இந்த மூச்சு நிகழ்வில் சிரமம் ஏற்படும் பொழுது, தேவையான காற்று கிடைக்கவில்லை என்பது போல் உணர்வு ஏற்படும் பொழுது ஒரு தொந்தரவினை உணர்கிறோம். சிலருக்கு எளிய பயிற்சியே மூச்சு வாங்கும். மாடி மெதுவாய் ஏறினால் கூட சிலருக்கு மூச்சு வாங்கும்.

    ஆஸ்துமா, இழுப்பு பிரச்சினை உடையவர்களுக்கு அதிக சத்தத்தோடு சுவாசம் நிகழும். இருதயத்தினால் போதுமான ரத்தத்தினை பம்ப் செய்ய இயலாத பொழுது மூச்சு திணறுவது போல் இருக்கும். மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். தொடர் பாதிப்பில் நோயின் தாக்கம் கூடிக் கொண்டே போகும்.

    நீண்ட கால சைனஸ் தொல்லை, மூக்கடைப்பு இவை கூட மூச்சு விடுவதில் சிரமத்தினை ஏற்படுத்தலாம். பொதுவில் வேக வேகமான மூச்சின் மூலம் ஆக்ஸிஜன் பெற உடல் போராடும் என்பதால் அவசர சிகிச்சையும் அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் இதற்கு அவசியம். கீழ் கூறப்பட்டுள்ளவை உங்களுக்கு உள்ளதா?

    * ஏதாவது ஒரு காரணத்தினால் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றதா?

    * எவ்வளவு தூரம் நடக்க முடிகின்றது.

    * படுத்தால் மூச்சுத் திணறல் அதிகமாகின்றதா?

    * உடல் நலம் சரியில்லாதது போல் உணர்கின்றீர்களா?

    * எடைகுறைந்துள்ளதா?

    * இருமலில் சளி வருகின்றதா?

    * சளியின் ரத்தம் உள்ளதா?

    * டிபி நோயாளிகளின் அருகில் இருக்கின்றீர்களா?

    * நீங்கள் புகை பிடிக்கின்றீர்களா? இவைகளை உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கூற வேண்டும்.

    ஏன் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது?

    ஆஸ்துமா, அலர்ஜி, மூச்சுத்திணறல் அதிகம் இருக்கும். நிமோனியா: நுரையீரலில் அதிக கிருமி பாதிப்பு இருக்கும். ஜுரம் இருமல் இருக்கும். சளி பச்சை நிறமாக இருக்கும்.

    இருதய நோய்: இருதயம் சரியாய் இயங்க முடியாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்படும்.

    * நுரையீரல் பாதிப்பு: நுரையீரலில் ரத்த கட்டி அடைப்பு ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் வரும். காலில் ஏற்படும். ரத்த கட்டி ஆடு தசையில் அதிக வலியினையும், வீக்கத்தினையும் ஏற்படுத்தும். அது பாதிக்கப்பட்டோர் அதிக நடமாட்டமின்றி வெகு நாள் இருக்கும் பொழுது ரத்தத்தின் மூலமா நுரையீரலை அடையும் பொழுது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.

    * மன உளைச்சல், கவலை இவை படபடப்பினையும், மூச்சுத் திணறலையும் உருவாக்கும்.



    * ரத்த சோகை: ரத்த சோகை உடையவர்களுக்கு 10 அடி நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படுத்தும்.

    * உடலில் ஏதாவது காரணத்தினால் அதிக வலி ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும்.

    அதிக கால மூச்சுத் திணறல் ஏற்படுவதன் காரணங்கள்:

    * அதிக எடை

    * கட்டுப்படாத ஆஸ்துமா

    * புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு

    * இருதய பாதிப்பு - மூச்சுத் திணறல், கணுக்கால் வீக்கம், முறையற்ற இருதய துடிப்பு என இருக்கும்.

    * அதிக ரத்த போக்கு (விபத்து, மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு போன்றவை)

    * சளி, ப்ளூ

    * மரகத்தூள்

    * சிறு பூச்சிகள்

    * கரப்பான் பூச்சி

    * உணவு அலர்ஜி

    * ஒத்துக் கொள்ள வாசனை போன்றவை ஆகும்.

    காரணத்திற்கான சிகிச்சை எடுக்கும் பொழுதே தீர்வு கிடைக்கும். பொதுவில் இத்தகைய பாதிப்புடையோர் சிறுசிறு உணவாக 4-6 முறை எடுத்துக் கொள்வது நல்லது. நடைப்பயிற்சி உதவும். செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
    லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள்.
    லிஃப்டைவிட எஸ்கலேட்டரில் ரிஸ்க் அதிகம். படிக்கட்டுகள் சரியாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 அல்லது 20 பேர் அதில் சென்றாலும் தாங்கும் திறன் இருக்க வேண்டும். படிக்கட்டுகளில் இருக்கும் பற்களில் ஏதாவது ஒன்று லேசாக உடைந்திருந்திருந்தாலும், சின்னப் பிள்ளைகளின் கால் விரல்கள் சிக்கிக்கொள்ளும்.

    *  லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள்.

    * லிஃப்ட் கதவுகள் மூடும்போது அதன் நடுவே பிள்ளைகள் கையைவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எஸ்கலேட்டர் என்றால், அதைவிட்டு இறங்கப்போகும் நேரத்தில், படிக்கட்டுகளின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்திருக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படிப் பிடித்திருக்கும்போது, எஸ்கலேட்டரிலிருந்து இறங்க முயற்சி செய்தால், நகரும் படிக்கட்டுகளின் மீதே விழுந்துவிடலாம்.



    * லிஃப்டோ, எஸ்கலேட்டரோ, அதில் பிள்ளைகளுடன் ஏறும்போது முழு கவனம் அவர்களிடம் இருக்கட்டும். போனில் பேசிக்கொண்டோ, மற்றவர்களுடன் பேசியவாறே செல்வதைத் தவிர்க்கவும்.

    * குழந்தைகளைத் தனியாக லிஃப்டிலும் எஸ்கலேட்டரிலும் ஏறவோ, விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.

    * லிஃப்டில் திடீரென மின்சாரம் நின்றுவிட்டால், பதற்றமடையாதீர்கள்; கதவுகளைத் திறக்க முயற்சி செய்யாதீர்கள்.

    * லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் காத்திருங்கள். அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, சினிமா தியேட்டர் இருக்கும் ஷாப்பிங் மால்களில் படம் முடிந்ததும் ஒரே நேரத்தில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துவார்கள். அந்த நேரத்தில் பொறுமை மிக அவசியம். எடை அதிகம் என்பதையும் தாண்டி, கூட்டத்தில் பிள்ளைகள் மீதான கவனம் குறைந்துவிடும்.
    பித்தம் அதிகம் உள்ளவர்கள், காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த கொத்தமல்லி விதை சட்னி நல்ல பலனை அளிக்கும். இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி விதை - 100 கிராம்
    மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
    புளி - நெல்லிக்காய் அளவு
    கல் உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    மிளகாய் வற்றல் - ஒரு எண்ணம்
    கடுகு - ¼ ஸ்பூன்
    வெந்தயம் - 10 எண்ணம்



    செய்முறை :

    முதலில் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை சேர்த்து வறுக்கவும்.

    கொத்தமல்லி விதையானது வாசனை வந்து வெடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.

    புளியை சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

    வறுத்த கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

    பின் அதனுடன் ஊற வைத்த புளி, தேவையான அளவு கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து அரைத்த கொத்தமல்லி விதைக் கலவையுடன் சேர்க்கவும்.

    சுவையான கொத்தமல்லி விதை சட்னி தயார்.

    இதனை இட்லி, தோசை, ஆப்பம், சாத வகைகள் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.
    சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.

    * அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.

    * சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.



    * சிலருக்கு முகத்தில் நீர் கோத்து, வீங்கிப்போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து. அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை. எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.
    நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம்.
    இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும். ஓர் நாளுக்கு சராசரியாக 4 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.

    நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெண்கள்! கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்கு பெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.



    சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகத்தில் தொற்று, சிறுநீர் பை அல்லது இடுப்பு பகுதியில் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படும். மேலும், இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும்.

    அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வுக் காணலாம்.

    மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

    நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

    இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை. மேலும், இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
    சத்து நிறைந்த கோதுமை ரவையை வைத்து ஏராளமான சத்தான உணவுகளை தயாரிக்கலாம். அன்று கோதுமை ரவையை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப்பொருட்கள் :

    கோதுமை ரவா - 1 கப்
    துவரம்பருப்பு - 1/2 கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

    கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.

    பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.

    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.

    விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு பலத்த வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
    நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதை போல், எல்லா பிரச்சினைகளுக்கும் இரு பக்கங்கள் உள்ளன.

    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு பலத்த வரவேற்பு இருப்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் சிலரும், பெற்றோர்களில் ஒரு தரப்பினரும் இந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கள் எதிர்ப்புக்கு அவர்கள் சில நியாயமான காரணங்களை முன்வைக்கிறார்கள்.

    இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பெற்றோர்களில் சிலர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் அந்த துயரத்தில் இருந்து மீண்டு எழுந்து எதிர்கால வாழ்க்கை போராட்டத்தை சமாளிக்கும் வகையில் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்றனர்.

    குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்தால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாள் என்ற அச்சத்தில், குற்றவாளி அந்த சிறுமியை கொன்று விடும் ஆபத்து உள்ளது என்று கருத்தரங்கில் பேசிய ஒரு பெண் தெரிவித்தார்.

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை வேதனையுடன் சில கருத்துகளை தெரிவித்தார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் தனது 3½ வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அது குறித்து புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது அங்கு போலீசார், தனது மகளிடம் நடந்த சம்பவம் பற்றி துருவித்துருவி கேட்டதும், அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணறியதும் தனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக அமைந்ததாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

    இன்னொரு பெண் பேசுகையில், தனது மகளை தனது கணவரே பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார். என் கணவரை போன்ற குற்றவாளிகளை தூக்கில் போட்டுவிட்டால், அவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து தப்பியவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும், மேலும் அவர்களுடைய குடும்பமும் வருமானம் இன்றி ஆனாதையாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

    பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையத்தின் தலைவர் அனுஜா குப்தா பேசுகையில், பாலியல் வன்முறை தொடர்பான 94 சதவீத வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும், எனவே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்ற நிலை வந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில் போலீசில் புகார் செய்வது குறைந்துவிடும் என்றும் கூறினார்.
    ×